Monday, November 23, 2009

ஹென்றிக்கு பெடரர் ஆதரவு

அயர்லாந்துடனான உலகக்கோப்பை தகுதிகாண் சுற்றில் இடம்பெற்ற போட்டியில் பிரான்ஸ் தலைவரும் முன்னணி கால்பந்து வீரருமான தியரி ஹென்றி தனது சகவீரர் வில்லியம் கலாஸ் அடித்த goal இக்கு கொடுத்த pass அவரது கையால் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து ஹென்றி மீது பல விமர்சனங்கள் எழுந்தன, தான் கையால் பந்தை pass கொடுத்ததை ஒத்துக்கொண்ட ஹென்றி மீள போட்டியை நடத்துவதற்கு தான் தயார் என்று சவால் விட்டிருந்தார். இந்தநிலையில் ஹென்றிக்கு ஆதரவாக இரண்டு பேர் குரல் கொடுத்துள்ளனர், ஒருவர் யாருடன் போட்டி நடந்ததோ அந்த நாட்டு தலைவர்(அயர்லாந்து), மற்றவர் உலகின் முதல்தர டெனிஸ் வீரர் ரோஜெர் பெடரர். அயர்லாந்து அணித்தலைவரும் Tottenham Hotspur அணித்தலைவருமான ரொபி கியேன் கூறியதாவது "ஹென்றியை யாரும் குற்றம் சொல்லவேண்டாம் அவர் ஒரு உலகதரம் வாய்ந்தவீரர்,goal போன அந்தக்கணத்தில் யாராக இருந்தாலும் உண்மையை ஒத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். எமது வீரர்கள் நிறைய சந்தர்ப்பங்களை தவறவிட்டிருந்தனர், ஹென்றியை குற்றம் சொல்லுவதை விட்டுவிட்டு எமது பிழையை திருத்தப்பார்க்க வேண்டும்" என்றார். லண்டனில் இடம்பெறும் barclays atp worldtour finals போட்டிகளில் விளையாட லண்டன் வந்த ரோஜெர் பெடரரிடம் ஹென்றியின் goal பற்றி கேட்டதற்கு " Football இல் இது ஒன்றும் புதிதில்லை, இப்படி பல சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளது, இது திட்டமிட்டு செய்ததல்ல, இது அந்தக்கணத்தில் இடம்பெற்றது. ஹென்றி உண்மையை ஒத்துக்கொண்டது பெரிய விடயம், ஆனால் நடுவர் goal என்று அறிவித்து ஒரு நிமிடத்தின்பின் ஒத்துக்கொண்டாலும் Football இல் ஒன்றும் செய்யமுடியாது, மீண்டும் goal ஐ இல்லாமல் செய்யமுடியாது.ஒரு நிமிடத்தில் சுதாகரித்து உண்மையை கூறவில்லை என்று ஹென்றிமீது பழிபோடுவது அபத்தமானது,இந்த விடயத்தை பெரிதுபடுத்தி ஹென்றியை அவமதிக்க வேண்டியதேவை இல்லை"என்று கூறினார். ஒருகணப்பொழுதில் முடிவெடுக்க ஹென்றி ஒன்றும் கடவுள் இல்லையே,மற்றும் ஹென்றி மீது 15 வருட football வரலாற்றில் இது போன்ற அவதூறுகள் எதுவும் வரவில்லை, மற்றும் ஹென்றி எதிரணியினருடன் மைதானத்தில் சகஜமாக பழகும் வீரர்களில் குறிப்பிடத்தக்கவர்.நிச்சயமாக மரடோனா செய்தது போல் ஹென்றி வேண்டுமென்று இந்த தவறை செய்திருக்கமாட்டார், மீண்டும் போட்டிக்கு தயார் என்று சவால்விட்டது அவரது துணிவுக்கு சான்று. நிச்சயம் ஹென்றிக்கு இது பெரும் மன உளைச்சலை தரும், ஆனாலும் போராட்டகுணம் நிறைந்த ஹென்றி இதிலிருந்து மீண்டுவருவார்.

2 வாசகர் எண்ணங்கள்:

பேநா மூடி said...

அவர்மீண்டு வருவர் என நம்புவோம்...

எப்பூடி ... said...

பேநா மூடி

//அவர்மீண்டு வருவர் என நம்புவோம்...//

100% sure

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)