Thursday, November 19, 2009

பயப்படாதீங்க கலைஞரே.....

தமிழக அரசு 2007 , 2008 ஆம் ஆண்டுக்கான சினிமா விருதுகளை அறிவித்துள்ளது. இதில் 2007 இல் சிவாஜிக்காக ரஜினிகாந்தும் 2008 இல் தசாவதாரத்துக்காக கமலஹசனும் சிறந்த நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்க்கு முதல் தடவை வழங்கப்பட்ட விருதுவழங்கும் விழாவில் 2005 இல் சந்திரமுகிக்காக ரஜினிகாந்துக்கும் 2006 இல் வேட்டையாடு விளையாடுக்காக கமலஹசனுக்கும் சிறந்த நடிகர்கள் விருதுகள் வழங்கப்பட்டது. தமிழகஅரசு கடைசி 4 விருதுகளில் ரஜினிக்கு இரண்டையும் கமலுக்கு இரண்டையும் வழங்கயுள்ளது. கமலும் ரஜினியும் சிறந்த நடிகர்கள்தான், விருதுவழங்கப்பட்ட நான்கு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்கள், இந்தப்படங்களில் கமலும் ரஜினியும் சிறப்பாகவே நடித்திருப்பார்கள்; நான் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் இந்த விருதுகளால்தான் அவர்கள் சிறந்த நடிகர்கள் என்று தம்மை நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை.அதை அவர்கள் 30 வருடத்துக்கு முன்னரே நிரூபித்து விட்டார்கள் .ஒரு அரசவிருதை தம்மை நிரூபித்தவர்களுக்கு கொடுப்பதை விட வளர்ந்துவரும் இளம் கலைஞர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு நல்லதொரு ஊக்குவிப்பை வழங்கலாம். 2005 - ராம் - ஜீவா 2006 - வெயில் - பசுபதி 2007 - பருத்திவீரன் - கார்த்தி 2008 - சுப்ரமணியபுரம் - ஜெய் இப்படி வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டால் அவர்களுக்கு அது ஊக்குவிப்பாக இருக்கும். எமக்கு தெரிந்தது தமிழக அரசுக்கு தெரியாதா? நிச்சயம் தெரியும், ஆனால் ரஜினி, கமல் விழாவுக்கு வந்தால்தானே விருதுவழங்கும் விழா பிரபல்யமாகும். கலைஞர் அழைத்தால் ரஜினியும் கமலும் மறுப்பு சொல்லப்போவது இல்லை, எப்படியும் வந்துவிடுவார்கள். ரஜினிக்கு கொடுத்து கமலுக்கும், கமலுக்கு கொடுத்து ரஜினிக்கும் கொடுக்காவிட்டால் அவர்களது ரசிகர்கள் விழாவை புறக்கணிப்பார்கள் என்று எண்ணியோ என்னவோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விருதுவழங்கும் விழாவை நடத்தி அதில் வஞ்சகமில்லாமல் இருவருக்கும் விருதுகளை வழங்குகின்றார்கள் போலுள்ளது. ரஜினியும் கமலும் விழாவுக்கு வருவார்கள், விழா பிரபல்யமாகும், மக்களிடத்தில் நன்கு போய்ச்சேரும், இந்த விழாவை கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு விடுமுறைதினத்தில் ஒளிபரப்பினால் நல்ல விளம்பரம் (பணம், புகழ்) கிடைக்கும், மற்றும் அதிகமான மக்கள் பார்ப்பதால் இலங்கைத்தமிழர்கள் பிரச்சனையில் இழந்த தனது இமேஜை ஏதாவதொரு வகையில் ஈடுகட்டிவிடலாம் என முழுக்க முழுக்க தமது சொந்த லாபத்துக்காகவே இந்த விருதுகளை ரஜினிக்கும் கமலுக்கும் கொடுத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது . கலைஞர் அவர்களே, நீங்கள்தான் சரத்குமாருக்கும் , விஜய்க்கும் பயப்பிட்ட ஆளாச்சே நீங்கள் ரஜினிக்கும் கமலுக்கும் பயப்படுவது நியாயம் தான். பயப்படாதீர்கள் அவர்கள் நீங்கள் விருது வழங்காவிட்டால் உங்களை கோபித்துகொள்ளமாட்டார்கள், மாறாக சந்தோசப்படுவார்கள். இது M.G .R , சிவாஜி காலமில்லை, இப்பவெல்லாம் ரசிகர்கள் முன்னேறிவிட்டார்கள், உங்கள் பித்தலாட்டம் இனியும் பலிக்காது.தயவு செய்து அடுத்தமுறையாவது 2009 இல் உன்னைப்போல் ஒருவன் கமலுக்கும் 2010 இல் எந்திரன் ரஜினிக்கும் சிறந்த நடிகர்களுக்கான விருதை கொடுத்து நீங்கள் சுயலாபம் தேட நினைக்காமல் வளர்ந்துவரும் இளம் கலைஞர்களுக்கு கொடுங்கள், இதைத்தான் ரஜினியும் கமலுமே விரும்புவார்கள்.

7 வாசகர் எண்ணங்கள்:

SShathiesh-சதீஷ். said...

கருணாநிதிக்கு இது தெரியாதா என்ன. இதெல்லாம் குடும்ப நாடகம் அதில் எங்களை பாரவையாளராக்கி முட்டாள் ஆக்குகிறார். நீங்கள் சொன்னது போல் விஜய் ராகுலை சந்தித்ததுக்கே பயந்து இவ்வளவு கொடுமையை வேட்டைக்காரனுக்கு செய்யும் கருணாநிதி ரஜினி கமல் போன்ற பெரிய சக்திகளை எதிர்க்க விரும்பமாட்டார். நல்ல ஒரு பதிவு வாழ்த்துகள். உண்மையில் இன்னொரு விடயம் சொல்லணும் உங்கள் வலைப்பூவிற்கு நான் வந்தது ஒரு சுவாரஸ்யம் தமிளிஷில் மேயும் பொது நல்ல பதிவாக இருக்கின்றதே என வந்தால் அது உங்கள் தளமாக இருக்கும். அண்மையில் பல பதிவுகள் அப்படி வரவைத்தன. நன்றாக எழுதுகின்றீர்கள் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்களுக்கு நான் அடிமை.

அ.ஜீவதர்ஷன் said...

its big compliment for me ,thanks for your visits,come again.

Yoganathan.N said...

சார், உன்மயிலேயே நல்ல அர்த்தமுல்ல பதிவு... உங்கள் கருத்துக்களை 100 சதவீதம் நான் ஆமோதிக்கிறேன்.
ஆக, பாரபட்சம் இல்லாமல் இருவருக்கும் சரி பாதியாக பிரித்து கொடுத்திருக்கிறர்கள்... கைக்கொட்டி சிரிக்கத்தான் தோனுகிறது.
விருதைப் பெற ரஜினி, கமலாவது கொஞ்சம் தயக்கம் காட்டியிருக்கலாம்.
என்னைக் கேட்டால் இந்த தமிழக அரசு விருதை துளியும் மதிக்கக் கூடாது...

Keep writing - I'm addicted to ur blog/writing. :)

Yoganathan.N said...

//நீங்கள் சொன்னது போல் விஜய் ராகுலை சந்தித்ததுக்கே பயந்து இவ்வளவு கொடுமையை வேட்டைக்காரனுக்கு செய்யும் கருணாநிதி//

இதெல்லாம் நடந்ததா??? இந்த பதிவு எங்கே இருக்கிறது??? அபப்டி இல்லையெனில், நடந்ததை விவரித்து இன்னொரு பதிவு போடுங்க்ள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N ..

//ரஜினி, கமலாவது கொஞ்சம் தயக்கம் காட்டியிருக்கலாம்//

நீங்கள் சொல்வது சரி, ஆனால் ரஜனிக்கோ கமலுக்கோ கலைஞரது முகத்தை நேருக்குநேர் முறிக்கும் சுபாவம் இல்லாததே இந்த விருதுக்கு செல்ல காரணம் என்று நினைக்கிறேன்.

---------------------------

//இதெல்லாம் நடந்ததா??? இந்த பதிவு எங்கே இருக்கிறது??? அபப்டி இல்லையெனில், நடந்ததை விவரித்து இன்னொரு பதிவு போடுங்க்ள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்//


இது நடந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது , தமிழ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் வந்த ராகுல்காந்தியை தேடிச்சென்று விஜய் சந்தித்தார், இதனால் ஈழத்தமிழருக்கு எதிராக செயல்ப்பட்ட காங்கிரசை விஜய் நாடியதற்கு தமிழ் ஆதரவு குழுக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இந்த நிலையில் விஜயின் அரசியல் பிரவேசத்தை பார்த்து பயந்த (எங்கே தனது பேரப்பிள்ளைகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று, ஹி.. ஹி.. ஹி.. ) கலைஞர் வேட்டைக்காரனை தனது பேரனான தயாநிதிமாறன் மூலம் வாங்கி அதனை வெளியிடாது இழுத்தடித்து விஜய்க்கு குடைச்சல் கொடுத்துவந்தார் இப்போது ஒருமாதிரியாக விஜயின் அரசியல் சம்பத்தப்பட்ட காட்சிகளை நீக்கியபின்னர் மார்கழி மாதம் 18 ஆம் திகதி படத்தை வெளியிட சம்மதித்துள்ளார்கள். (பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட விரும்பும் விஜயின் கோரிக்கையை சன் நெட்வேர்க் நிராகரித்து விட்டது ).விஜய் ராகுலை தேடிச்சென்று சந்தித்து இவளவு எதிர்ப்பை சம்பாதித்தும் ராகுல்காந்தி விஜயை கண்டுகொள்ளாததுதான் மிகப்பெரும் காமடி.

ஞானப்பழம் said...

அண்ணே.. அடுத்த தடவ கொஞ்சம் பலமா திட்டுங்க!! எவ்வளவு கேவலப்படுத்தினாலும் அந்தாளுக்கு ஒறைக்காது... தி.மு.க வை குடும்ப சொத்தாக்கீட்டான்!! இனி தமிழ் நட்டையும் குடும்ப சொத்தாக்கீடுவான்!! அவன் பன்றத கொஞ்சம் கவணிங்க.. அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து அவன் வாய மூடுன அடுத்த நிமிடமே, ஸ்டாலின துனை முதலமைச்சர் அக்கீட்டான்!! இப்படி எத்தன நாள்தான் இந்த குடும்பச் சமாளிப்பு நாடகத்த நடத்தப் பொற்றான்னு தெரியல.. கடைசிகட்டமா பாருங்க.. தமிழ் நாட்டயே "ஸ்டாலின் நாடு" "அழகிரி நாடு"ன்னு பிரித்தெடுத்தாலும் ஆச்சிரியப்படுவதர்க்கு ஏதும் இல்ல!! இதே சமாளிப்பு நாடகத்ததான் திரை விருதுலயும் நடத்தீட்டிருக்கான்!!

ஆனா இந்த தி.மு.க காரங்ககிட்ட மட்டும் என்ன சொன்னாலும் கவணமா சொல்லனும்!! "வளர்ந்துவரும் இளம் கலைஞர்களுக்கு கொடுங்கள்"ன்னு நீங்கள் சொன்னத அவங்க தப்பா புரிஞ்சுட்டு, அடுத்த விருத தயாநிதி ஸ்டாலினுக்கு வழங்கினாலும் வழங்குவாங்க... நம்ம தமிழ் நாடு அரசு விருந்த்துதான் விளங்காம போகும்!!!

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//நீங்கள் சொன்னத அவங்க தப்பா புரிஞ்சுட்டு, அடுத்த விருத தயாநிதி ஸ்டாலினுக்கு வழங்கினாலும் வழங்குவாங்க... நம்ம தமிழ் நாடு அரசு விருந்த்துதான் விளங்காம போகும்!!!//


நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)