Wednesday, November 18, 2009

அண்ணாச்சி டீக்கடையில் விஜயும் சூர்யாவும்

விஜய் ரசிகர் ஒருவரும் சூர்யா ரசிகர் ஒருவரும் ஒரு டீக்கடையில் சந்தித்தபோது நடந்த சுவாரிசியமான உரையாடல். விஜய் ரசிகன்: என்ன தம்பி ஆதவன் ஊத்திக்கிச்சா ? சூர்யா ரசிகன் : மூணு பிளாப் குடுத்தும் நீங்க இன்னும் திருந்தேல்லயாடா? விஜய் ரசிகன் : இப்பதானே ஆரம்பிச்சிருக்கீங்க அடுத்த படம்வேற ஹரி,பாக்கலாம் நீங்களும் எங்கலிஸ்ட்டில வாரீங்களா இல்லையான்னு ? சூர்யா ரசிகன் : இப்ப கூட உங்களுக்கு முன்னுக்குவாற எண்ணமில்லை , மற்றவனையும் பின்னுக்கிழுத்து உங்கலெவலுக்கு கொண்டு வர்ரதிலேயே குறியா இருங்க. விஜய் ரசிகன் : அதெல்லாம் சரி பெப்சி சங்க விழாவில உங்க தலைவர் எங்க தலைவரை எப்புடி புகழ்ந்தார்னு பாத்தமெல்ல. சூர்யா ரசிகன் : என்னான்னு சொல்லி புகழ்ந்தார்? விஜய் ரசிகன் : "உங்க ஆட்டத்தை பார்த்து செத்திருக்கிரன், மனுஷன் என்னமா ஆடுறார் , இதெல்லாம் தனிக்கலை, hats off to vijay sir " அப்பிடின்னு முப்பத்தி இரண்டு பல்லையும் இழிச்சிக்கிட்டே சொன்னாரே பாக்கலியா ? சூர்யா ரசிகன் : உங்க தலைவர் மாதிரி கிணத்துத் தவளையாவே இருக்கியேடா, விஜய் எவளவு பெரிய இடத்தில இருக்கிறார் (?), விஜய் படவசூலை பார்த்து மிரண்டு போயிருக்கிறன், விஜய் அற்புதமான நடிகர்(?), விஜய் நல்லவர் ,வல்லவர், நாலும் தெரிஞ்சவர் அப்பிடின்னு ஒரு வார்த்தை சொன்னாரா? இல்லையே நீ டான்சுக்கு மட்டும் தான் லாயக்கு என்று சொல்லாமல் சொன்னதை உன்னைப்போலவே உன் தலைவனும் புரிஞ்சிக்காம முன் வரிசையில இருந்து பல்லக்காட்டிக்கொண்டிருந்தததை நானும் பார்த்தனான் கண்ணு . விஜய் ரசிகன் : உன் தலைவனைப்பற்றி எனக்குத்தெரியாதா? நேருக்கு நேர் ,பிரன்ஸ் படங்கள்ல எங்க தலைவர் போட்ட பிச்சையில வளர்ந்தவன் தானே? இப்ப எல்லாத்தையும் மறந்திட்டீங்களோ? சூர்யா ரசிகன் : உன் தலைவர் கூடத்தான் விஜயகாந்த் கூட நடிச்சார், அப்பவெல்லாம் விஜயகாந்த் புகழ் பாடிகிட்டு திரிஞ்சார் , கொஞ்சம் நல்லாவந்தவுடன விஜயகாந்தை மறந்து ரஜினிக்கு மாறினார், அப்புறம் ஒரு படம் விடாம ரஜினி புகழ் பாடினார் ,அப்புறம் அப்பன் பேச்சை கேட்டு இனி ரஜினி வேண்டாம் நாம எங்கேயோ போட்டமேன்று நினைத்து இப்பவெல்லாம் M G R புகழ் பாடிக்கிட்டு திரியுறாரு, இது மட்டும் என்னவாம்? ஆனா ஒன்னு ரஜினி ரசிகர்களை பகைத்தது விஜயின் சினிமா வாழ்க்கையிலேயே மிகப்பெரும் தவறு, அதற்க்கான பலனைத்தான் இப்ப அனுபவிக்கிறார். விஜய் ரசிகர் : இதெல்லாம் அந்த பாழாய்போன சத்தியராஜ்சும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறானே ஒரு வில்லன் சந்திரசேகர் அவனுமா சேர்ந்து செய்தது அதுக்கு தலைவர் என்ன செய்வார் பாவம். சூர்யா ரசிகர் : வாய்க்க விரலவச்சா கடிக்க தெரியாத பாப்பாபாரு... இருவரும் பேசிக்கொண்டே நடையை கட்டுகிறார்கள். டீ கடை அண்ணாச்சி : ஏன் தம்பி விஜயும் சூர்யாவும் நல்ல ஒற்றுமையாதானே முன்பெல்லாம் இருந்தாங்க இப்ப என்ன ஆச்சு? சினிமா தெரிந்த கஸ்டமர் : இரண்டு பேரும் ஒற்றுமையாதான் இருந்தானுங்க அப்புறம் சூர்யா கலியாணத்தோட கொஞ்சம் விரிசல் ஏற்பட்டிச்சு. அப்புறம் பெரிசா ரெண்டு பேருக்கையும் சண்டை ஏதுமில்ல, ஏன் இப்பகூட அவங்க ரெண்டு பேருக்கையும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா விஜய் ரசிகர்கள் தான் சூர்யா மேல செம கடுப்பில இருக்கிறாங்க. டீ கடை அண்ணாச்சி : ஏன் தம்பி ? சினிமா தெரிந்த கஸ்டமர் : இரண்டு பேரும் தளபதி பாதிப்பில சினிமாவுக்குள் வந்தவர்கள்.விஜய் தளபதி பாதிப்பில் தனக்குதானே இளைய தளபதி என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தவர் . சூர்யாவோ சரவணன் என்னும் தனது இயற்ப்பெயரை மாற்றி தளபதியில் ரஜினியின் பெயரான "சூர்யா" வை தனது பெயராக்கியவர்.ஆரம்பத்தில் சூர்யாவால் விஜய்க்கு எந்த பாதிப்புமில்லை அதனால் தனது படங்களில் சூர்யாவிற்கு வாப்புக்கள் கொடுத்தார். நந்தாவின் பின்னர் சூர்யா கமலின் பாதையை தேர்ந்தெடுத்ததால் தொடர்ந்து எந்த குழப்பமும் ஏற்ப்படவில்லை. ஆனால் சூர்யா வேல், அயன் என்று கமெர்சியல் படங்கள் நடிக்க ஆரம்பித்தபோது விஜயின் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைய சூர்யாவின் கமெர்சியல் படங்கள் வெற்றியடைந்தது. இதனால் எங்கே சூர்யா விஜய்க்கு ஆப்பு வைத்து விடுவாரோ என்று பயந்த விஜய் ரசிகர்கள் இப்போதெல்லாம் அஜித்தை விட சூர்யாவுக்கே குறிவைத்துள்ளனர். ஆதவன் தோல்வியில் விஜய் ரசிகர்களின் பங்கு நிறையவே இருக்கிறது. டீ கடை அண்ணாச்சி : இவனுங்க எக்கேடாவது கெட்டு போகட்டும் எனக்கு நிறைய வேலையிருக்கு தம்பி , நான் உள்ள போறன் தம்பி...... சினிமா தெரிந்த கஸ்டமர் : சரிண்ண நேரமாச்சு நானும் கிளம்பிறன்.

5 வாசகர் எண்ணங்கள்:

Yoganathan.N said...

இந்த விசாரனையில் பல உன்மைகள் வெளிவரும் போலிருக்கே... ;)

Sathya said...

IS IT TRUE

அ.ஜீவதர்ஷன் said...

Sathya

//IS IT TRUE//

சம்பவங்கள் 100% உண்மை

haran said...

aadhavan is hit film dont put wrong information
if u have any doubt please log on sify.com or behindwoods.coom or wikipedia

அ.ஜீவதர்ஷன் said...

haran

//aadhavan is hit film dont put wrong information
if u have any doubt please log on sify.com or behindwoods.coom or wikipedia//

sify யில் பாருங்க கண்ணா சூரியாவின் ஆறு ஹிட் படமென்று இருக்கும் , அப்புறம் கந்தசாமி ஹிட் படமென்று இருக்கும், அப்பிடியே சண் நெட்வேர்க் வாங்கிற அனத்துப்படமும் ஹிட் என்று இருக்கும்.

விக்கிபீடியா.... அதில சிவாஜி தசாவதார வசூல்களை பாருங்க 350 ,250 கோடி என்று இருக்கும். விக்க்பீடியாவில் நீங்கள் எடிட் செய்தாலும் அப்படித்தான் இருக்கும், சந்தேகமேன்றல் ஒவ்வொரு வருடமும் ஹிட்டான படங்களின் வரிசையில் பாபா,குசேலன்,பாய்ஸ், எல்லாம் ஹிட் என்று இருக்கும் .

behindwoods ஆதவன் வருவதற்கு ஒருவாரம் முன்பிருந்தே முகப்பு அட்டையை ஆடவன் படத்தின் walpaper
ஆக வைத்திருந்தது தெரியாதா?

கண்ணா ஒரு படம் வெற்றி என்றால் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் , வெறுமனே ஓரிரு ஆங்கில இலத்திரனியல் ஊடகங்களாலும் படத்தினை வெளியிடும் தொலைக்காட்சிகளினதும் அவர்களினது பத்திரிகைகளிலும் வெளியாகினால் மட்டும் வெற்றிப்படம் ஆகிவிடுமா?

அப்படி என்று பார்த்தால் கந்தசாமி, வாரணம் ஆயிரம், படிக்காதவன், கண்டேன் காதலை, நினைத்தாலே இனிக்கும் எல்லாமே வெற்றிப்படங்கள்தான்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)