Monday, November 16, 2009

வாங்கிக்கட்டியது இங்கிலாந்து

முதலாவது T/20 போட்டியை மழையின் உதவியுடன் பாழாய்ப்போன D/L method பிரகாரம் 1 ஓட்டத்தால் வென்ற இங்கிலாந்துக்கு இரண்டாவது T/20 போட்டியில் தென்னாபிரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.இங்கிலாந்து, தென்னாபிரிக்கா,பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய நாட்டுவீரர்கள் ஒருமித்து இங்கிலாந்து என்னும் பெயரில் தென்னாபிரிக்காவுடன் இரண்டாவது T/20 போட்டியில் மோதினார்கள்.(இந்தத்தடவை ஜிம்பாவே,இலங்கை,இந்தியா,பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா வீரர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்கவில்லை ) நாணயச்சுளர்ச்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா இங்கிலாந்து அணியை களத்தடுப்புக்கு அழைத்தது. முதல் 3 ஓவர்கள் மாத்திரமே இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு மதிப்புக்கொடுத்தனர் ஸ்மித்தும் பொஸ்மனும்.அதன் பின்னர் சிறியமைதானத்தில் சரவெடி கொளுத்தத்தொடங்கிய இந்தஜோடி முதல் விக்கட்டுக்காக மேற்கிந்திய தீவுகளின் கிரிஸ் கெய்லும் டேவன் ஸ்மித்தும் பெற்ற இணைப்பாட்டமான 145 ஓட்டங்களைத்தாண்டி 170 ஓட்டங்கள் என்னும் புதிய முதலாம் விக்கட்டுக்கும் எந்தவொரு விக்கட்டுக்குமான இணைப்பாட்ட சாதனையை புரிந்துள்ளனர். இதில் ஸ்மித் 44 பந்துகளில் 88 ஓட்டங்களையும் போஸ்மன் 45 பந்துகளில் 94 ஓட்டங்களையும் குவித்தனர். இறுதியாக 241 ஓட்டங்களை தென்னாபிரிக்கா பெற்றது. 242 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்துவீரர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை போராடும் எண்ணம் துளியளவும் இல்லாமல் ஒவ்வொருவரும் தத்தமக்கு ஓட்டங்களை சேகரிப்பதிலேயே குறியாக இருந்தனர். குறிப்பாக பீற்றசன்,ட்டுரோட் ஜோடி சொந்தநாட்டில் சொந்தநாட்டு அணிக்கெதிராக விளையாடுவதாலோ என்னமோ ஓட்டங்களை குவிப்பதிலும் பார்க்க தமதுவிக்கட்டை பாதுகாப்பதிலேயே குறியாக இருந்தனர்.இறுதியாக இங்கிலாந்து 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப்பெற்று 84 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்தது. நீண்ட நாட்களின்பின்னர் துடுப்பெடுத்தாடவந்த பீற்றசனின் body language வழக்கத்துக்குமாறாக இருந்ததை காணக்கூடியதாக இருந்தது. முன்பெல்லாம் free யாக விளையாடும் பீற்றசன் இந்தப்போட்டியில் மிகுந்தகவனத்துடன் விளையாடியதை காணமுடிந்தது. ஸ்ருவர்ஸ்,கொலிங்வூட் மீண்டும் அணிக்குவரும் பட்ச்சத்தில் டென்லி,பீற்றசன்,ரைட் இவர்களில் இருவர் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளதாலேயே பீற்றசனின் ஆட்டத்தில் நிதானமும் பொறுமையும் இருந்ததாக தெரிகிறது. எதிர்வரும் இருபதாம் திகதி Johannesburg மைதானத்தில் ஐந்து ஒருநாள் போட்டிகளைக்கொண்ட தொடரின் முதல் போட்டி நடைபெறவுள்ளது.இங்கிலாந்தில் இழந்த ஒருநாள் போட்டித்தொடர் தோல்வியை தென்னாபிரிக்கா ஈடுசெய்கிறதா என்று பார்ப்போம்.

2 வாசகர் எண்ணங்கள்:

thanu said...

stauss and crazzy chaps getback soon this is enough

எப்பூடி ... said...

thanu said

//stauss and crazzy chaps getback soon this is enough//

:)HI... HI... HI...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)