Saturday, November 14, 2009

கடவுளின் குழந்தை


எனக்கு தமிழ் சேனல்களின் மீது வெறுப்பு இருந்தாலும் விஜய் டிவியில் ஏனோ ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. மற்ற தொலைக்காட்சிகளிடமிருந்து வேறுபட்டுநிற்பது இதன்சிறப்பம்சம்.மெகாசீரியல் கொடுமைகளும் குறைவாக இருப்பது விஜயின் பிளஸ். ஒளிபரப்பாகும் ஒருசில சீரியல்களும் ஓரளவு தரமானவையே. அது தவிர இளைஞர்களின் திறமைகளையும் குழந்தைகளின் திறமைகளையும் வெளிக்கொண்டுவரும் பணியை விஜய் நிறைவாக செய்துவருகிறது. அந்தவகையில் ஜுனியர் கலக்கப்போவதுயாரு,சுப்பர்சிங்கர் ஜுனியர் என அசத்தும் விஜய்டிவியில் சுப்பர்சிங்கர் ஜூனியரில் கலக்கும் ஸ்ரீகாந்தை நிகழ்ச்சியைப்பார்க்கும் யாருக்கும் பிடிக்காமல் இருக்காது.8 வயதுகூட நிரம்பாத பாலகன் அவனது திறமையைப்பார்க்கும்போது உண்மையில் மயிர்கூச்செறியும். என்ன ஒரு திறமை, ஸ்ரீகாந்த்தின் பாடலை கேட்பதற்கு வீட்டில் சிறுசு முதல் பெரிசு வரை எல்லோரும் ஒன்று கூடுவார்கள். இத்தனைக்கும் அந்தப்பையனுக்கு புதுப்பாடலெது பழையபாடலெது என்பதே தெரியாது. ஒருதடவை புதுப்பாடல் பாடுமாறு உன்னிமேனன் கேட்டதற்கு K.V.மகாதேவன் பாடல் ஒன்றைப்பாடியபோது அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அனைத்துப்பாடலுமே ஸ்ரீகாந்தினது தந்தை சொல்லிக்கொடுத்தே பாடுகிறான்.பாடலை மனப்பாடம் பண்ணுவதே கடினம் ஆனால் ஸ்ரீகாந்த் மனப்பாடம் பண்ணிய பாடல்களை பெரும்பாலும் தாளம்தவறாமல், ராகம் தவறாமல் பாவத்துடன் பாடுவதை என்னவென்று சொல்வது? சாதாரணமாக யாராலும் முடியாத இந்தச்செயலை இறைவன் அருளாலே செய்கிறார் என்று பலர் கூறினாலும் ஸ்ரீகாந்தின் கடினஉழைப்பு நிச்சயம் இருக்கத்தான்செய்கிறது. விளையாடப்போகாமல், ice cream சாப்பிடாமல் (சொந்தவிருப்பத்தில்) அதிகமானநேரம் சாதகம் செய்து தனது திறமையை சுயமாக வெளிக்கொண்டுவர போராடும் ஸ்ரீகாந்தை எந்தவார்த்தையால் பாராட்டினாலும் தகும். இவரது தாய் தந்தை இசையில் எவ்வளவு நாட்டமுள்ளவர்கள் என்பதை தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். பாடுவதில் மட்டுமில்லை கீபோட். ட்ரம்ஸ்,கிற்றார், மிருதங்கம் என இவருக்கு தெரியாத கலைகளே இல்லை. ஸ்ரீகாந்தின் முயற்சியும் அவரது தந்தையின் ஊக்குவிப்பும் நிச்சயம் ஸ்ரீகாந்தை எதிர்வரும்காலங்களில் இசைத்துறையில் மிகப்பெரியஇடத்துக்கு கொண்டுபோகும் என்பதில் சந்தேகமே இல்லை. . இவரது இசைப்பயணம் மேலும்மேலும் வளர வாழ்த்துக்கள்.

2 வாசகர் எண்ணங்கள்:

ஞானப்பழம் said...

விஜய் டீ.வீ. மற்ற தமிழ் அலைவரிசைகளைக்காட்டிலும் கொஞ்சம் பரவாயில்லைதான்.. ஆனால் அதற்காக அதுவே சிறந்த தொலைக்காட்சி எனக் கூறுவது சற்று முறன்பாடாக தோனுகிறது...
'ஸ்டார்' நெட்வொர்க்கின் பிற ஆங்கில அலைவரிசைகளை நீங்கள் பார்த்திருப்பீரானால் இவ்வாறு கூறியிருக்க மாட்டீர்!! எல்லா ஸ்டார் தொலைக்காட்சிகளிலும் இதேபோன்ற நிகழ்ச்சிகள்(அச்சு அசல் மாறாமல்!!) நடந்து வருகின்றனர்... அதிலும், "ஸ்டார் வொர்ல்ட்" அலைவரிசயில் பார்தீங்கன்னா இன்னும் தொழில் நெறியாய் நிகழ்ச்சிகள் நடக்கும்!! நமக்கு(பெரும்பாலோர்க்கு) அந்த தொலைக்காட்ச்சிகளைப் பற்றி தெரியாதிருப்பதால், விஜய் டீ.வீ. புதிதாகப் படுகிறது!! ஆனால் என்னைப் பொறுத்தவரை விஜய் டீ.வீ.யும் அதே குட்டையில் விழுந்த மட்டைதான்!!

விஜய் டீ.வீ.யையும் "ஸ்டார் வொர்ல்ட்"இயும் ஒப்பிட்டுப் பார்தீங்கன்னா, நம்ம விஜய், "ஸ்டர் வொர்ல்ட்"இன் தரத்தில் ஒரு பின்னம்கூட இருக்காது!!


தொலைக்காட்சிகளை தகவல் சாதனங்களாகக் கருதி, அதை முழு பயன்பாட்டிர்க்கு உட்படுத்துவது, என்று பார்த்தால், என்னைப் பொருத்தவரை ஆங்கில தொலைக்காட்சிகளான "நேஷனல் ஜியொக்ரஃபி"யும் "அனிமல் ப்ளானெட்"உம்தான்... இவற்றில் முன்புபோல வெறும் காட்டு விளங்குகளை மட்டும் மைய்யமாகக் கொள்வதில்லை... உலகம் முழுவதும் உள்ள சிறந்த தொழிற்சாலைகளின் இயக்கம் பற்றியும், சிறந்த நகரங்களின் செயல்பாடுகள், சிறந்த கட்டிடங்களின் கட்டமைப்பு... மற்றும் பல நாடுகளின் சமூகம்/கலாச்சாரம் பற்றியெல்லம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப படுகின்றன...

இப்படி ஒரு தொலைக்காட்சி தமிழில் இல்லையே என்பதுதான் வருத்தம்.. அந்த தொலைக்காட்சிகள் ஆங்கிலத்தில் இருப்பதினால், பெரும்பாலான தமிழ் சனங்களுக்கு அது சென்றடையாமல் பொய்விடுகிறது.. உதாரணத்திற்கு, இங்குள்ள ஆனைமலையில் நடக்கும் பல ஆர்வமிக்க சம்பவங்களை "அவன்" பதிவேடு செய்து நமக்கே ஒளிபரப்புகிறான்!!

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//விஜய் டீ.வீ. மற்ற தமிழ் அலைவரிசைகளைக்காட்டிலும் கொஞ்சம் பரவாயில்லைதான்.. //


(எனக்கு தமிழ் சேனல்களின் மீது வெறுப்பு இருந்தாலும் விஜய் டிவியில் ஏனோ ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது)

தமிழ் சானல்களில் மட்டும்தான் விஜய்டிவி better என்று குறிப்பிட்டுள்ளேன் மற்ரயபடி உங்கள் கருத்து 100 % சரியானதே.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)