Friday, November 13, 2009

கலக்கப்போவது யாரு?

இந்தியா அவுஸ்திரேலியா போன்றோ, இந்தியா பாகிஸ்தான் போன்றோ இந்திய இலங்கைக்கு இடையிலான போட்டி எதிர்பர்ப்புகள் நிறைந்தது என்று கூறமுடியாது. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்த இந்தியா தன்னை நிரூபிக்க கிடைத்த சந்தர்ப்பமாக இந்தியாவுக்கும், முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட்போட்டி ஒன்றை வெல்லும் எதிர்பார்ப்பில் இலங்கையும் இருப்பதால் நிச்சயம் இந்தத்தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும். கடந்தமுறை 2-௦ என இலங்கை தொடரை இழந்திருந்தாலும் அப்போது இந்தியா சென்ற இலங்கைஅணிக்கும் இப்போது இந்திய செல்லும் இலங்கைஅணிக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.சென்றமுறை மகேள தவிர வேறு எந்தவீரரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே தொடரின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.ஆனால் இம்முறை இந்தியா செல்லும் அணியின் துடுப்பாட்டவரிசை பலமாக இருப்பது இலங்கைக்கு சாதகமாக அமையலாம்.ஆனால் இந்தியாவின் பலமான துடுப்பாட்ட வரிசையை ஒரு ஆட்டத்தில் இரண்டு தடவைகள் வீழ்த்துவதில்த்தான் இலங்கையின் வெற்றிக்கனவு சந்தேகத்துக்கு இடமாகிறது. இரண்டு அணிகளின் பலங்களையும் பார்ப்போமானால் முதலில் துடுப்பாட்டவரிசையை ஒவ்வொரு வீரராக ஒப்பிட்டுப்பார்த்தால்...

சேவாக் vs டில்ஷான் இரண்டுபேரும் அதிரடியாக ஓட்டங்களை குவிப்பதில் கில்லாடிகள்,இதில் சேவாக் ஆரம்பம்முதலே கலக்கிவருகிறார்.ஆனால் டில்ஷான் கடந்த நியூசிலாந்து தொடரில்த்தான் ஆரம்பவீரராக பிரகாசிக்கத்தொடங்கியுள்ளார். சேவாக்கின் டெஸ்ட் கரியருக்கு முன்னாறு டில்சான் ஒன்றுமேஇல்லை ஆனால்டில்சானின் current form நிச்சயம் இந்திய பந்துப்வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும்.

கம்பீர் vs பரணவிதான கம்பீருக்கு பரணவிதான எந்தவகையிலும் ஈடு கொடுக்கமுடியாது.பரனவிதான் ஒரு வளர்ந்துவரும்வீரர் ,இவர் இந்த தொடரில் பிரகாசித்தால் நிச்சயம் அது இலங்கைக்கு ஒரு பெரியபலமாக இருக்கும், ஆனால் டில்ஷால் போலவே கம்பீரும் சிறந்த form இல் இருக்கும் ஒருவீரர் நிச்சயம் கம்பீர் இலங்கைக்கு பெரியதலையிடியை குடுப்பார்.

டிராவிட் vs சங்ககார டிராவிட் இந்தியாவின் சுவர் என்று வர்ணிக்கப்படும் வீரர். சேவக் சதம் அடித்தாலும் சச்சின் சதம் அடித்தாலும் திராவிட்டின் இணைப்பாட்டம் பெரும்பாலும் அங்குஇருக்கும். வேகப்பந்து , சுழல்ப்பந்து எல்லாமே இவருக்கு அத்துப்படி இவரது விக்கட்டை இரண்டுதடவை வீழ்த்துவது இலங்கைக்கு சாதாரணவிடயமில்லை.டிராவிட் கிரிக்கெட் வரலாறுகண்ட சிறந்த துடுப்பாட்டவீரர்களில் ஒருவர். ஆனால் சங்கக்கார ஒன்றும் சளைத்தவரில்லை. டிராவிட் எப்படி இந்தியாவுக்கு தூணோ அதுபோல இலங்கைக்கு இவர்தான் தூண். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தாலும் சுழல்ப்பந்துக்கு இவரது ஆட்டத்தில் பலவீனம் இருக்கத்தான் செய்கிறது.ஹர்பஜனிடம் ஆரம்பத்தில் தப்பித்தால் இந்தியா இவரது விக்கட்டை எடுப்பதற்கு கடுமையாக போராடவேண்டி இருக்கும். இவரது ஒவ்வொரு இனிங்க்சும் இலங்கைக்கு முக்கியமானது .

சச்சின் vs மகேல டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின், இலங்கையுடன் இவரது சராசரி 56.32 டெஸ்ட் வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்கள், அதிகூடிய சதங்கள் என இவர் வராற்றின் நாயகன்.சச்சினுக்கும் முரளிக்கும் இடையில் நிச்சயம் ஒரு சிறந்த போட்டியை காணலாம்.ஆனாலும் இரண்டு தடவைகள் இவரது விக்கட்டை வீழ்த்துவது இலங்கைக்கு சிரமமாகவே இருக்கும். வேகப்பந்து,சுழல்ப்பந்து என இரண்டுக்கும் சிறந்த முறையில் ஆடும் இவரதுவிக்கெட் இலங்கைக்கு கிடைப்பது மிகக்கடினமாகவே இருக்கும். எப்படி சச்சின் இந்தியாவின் பலமோ அதே போல் இலங்கையின் டெஸ்ட் நாயகன் மகேல. இவரை களத்தில் நுழைந்தவுடன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆட்டமிழக்க செய்யும் சந்தர்ப்பம் இருக்கின்றது, ஆனால் ஐந்து,ஆறு ஓவர்களில் இவர் ஆட்டமிழக்கவில்லை என்றால் இந்தியா ஆட்டத்தை மறக்கவேண்டியதுதான். சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பாக ஆடும், உலகத்தரம் வாய்ந்தவீரர்களில் இவரும் ஒருவர் இவருக்கு இந்தியாவுடனான சராசரி 68 .29 , இன்றைய திகதியிலிருந்து கடைசி இரண்டு வருடங்களில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற சர்வதேசவீரர் மகேலதான். இவர் 18 போட்டிகளில் 2054 ஓட்டங்களை 70.82 சராசரியில் 8 சதங்களுடன் பெற்றுள்ளார். இவரது பங்களிப்பு நிச்சயம் இலங்கைக்கு அவசியம்.

லக்ஸ்மன் vs திலான் சமரவீரா இரண்டு பேருமே ஐந்தாம் இலக்கத்தில் சிறந்தவீரர்கள் இவர்களில் லக்ஸ்மன் வேகப்பந்துவீச்சுக்கும் சமரவீரா சுலல்பந்துவீச்சுக்கும் விளையாடுவதி கில்லாடிகள். லக்ஸ்மன் ஆரம்பம்முதலே இன்றுவரை ஒரே மாதிரியாக ஆடிவந்தாலும் பாகிஸ்தானில் குண்டடிபட்ட பின்னர் சமரவீராவின் ஆட்டம் முன்னரை விட பலமடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது முன்பெல்லாம் மிகவும் ஸ்லொவ் வாக ஆடும் சமரவீரா இப்பவெல்லாம் 65 -70 strike rate இலேயே ஓட்டங்களை குவிக்கிறார். நிச்சயம் லக்ஸ்மன் இந்தியாவிற்கு வழங்கும் பங்களிப்பைவிட இவரது பங்களிக்கு இலங்கைக்கு அதிகமாகவே கிடைக்கும்.

யுவராஜ் vs மத்தியூஸ் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த அனுபவமுடயவர்கலாயினும் யுவராஜ் ஒருநாள் ஆட்டங்களில் வெளுத்துக்கட்டியவர் சில டெஸ்ட் இனிங்க்ஸ் களிலும் பந்துவீச்சாளர்களை பந்தாடியுள்ளார். சென்றதடவை இந்தியா சென்ற இலங்கை அணிக்கு கிடைக்க இருந்த வெற்றி வாய்ப்பை டோனியுடன் சேர்ந்து பெற்ற இணைப்பாட்டம் மூலம் கனவாக்கியவர்.இவருடன் மத்தியூஸை ஒப்பிட முடியாது. ஆனால் மத்தியூஸும் திறமையுள்ளவீரர்தான் இவர் ஜொலித்தால் நிச்சயம் அது இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதமே.

டோனி vs பிரசன்ன ஜெயவர்த்தன டோனி அனைத்துவிதத்திலும் பிரசன்னாவை விட சிறந்ததுடுப்பாட்டவீரர் என்பது வெளிப்படை உண்மை. முன்னணி வீரர்கள் சொதப்புமிடத்தில் 7 ஆம் இலக்கத்தில் டோனியைப்போல் பொறுப்பாக ஆடும்வீரர்கள் சர்வதேசரீதியிலே யாருமில்லை.ஆனால் டோனியை விட பிரசன்ன ஜெயவர்த்தன சிறந்த விக்கட்காப்பாளர் என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும். அடுத்து பந்து வீச்சாளர்களினை பார்ப்போமானால்

முரளி vs ஹர்பஜன் ஒருவேளை இலங்கை தனது கன்னி டெஸ்ட் வெற்றியை பெறுகிறது என்றால் நிச்சயம் முரளிதான் ஆட்ட நாயகன்.இலங்கை இந்தத்தொடரில் அதிகம் நம்புவது முரளியே.ஆனால் முரளிக்கு சச்சின் ,டிராவிட்,லக்ஸ்மனின் விக்கட்டை வீழ்த்துவது சுலபமில்லை.முரளியளவிற்கு இல்லாவிட்டாலும் ஹர்பஜனுக்கு சொந்த ஆடுகளங்கள் சாதகமாகவே இருக்கும். இந்தியா வெற்றிபெறும் பட்ச்சத்தில் இவரது பங்களிப்பு நிச்சயம் இந்தியாவுக்கு பக்கபலமாக இருக்கும்.

ஓஜா vs மென்டிஸ் இருவருமே வளர்ந்துவரும் பந்துவீச்சாளர்கள் ஓஜா இலங்கையுடன் விளையாடுவது இதுவே முதற்தடவை.இவர் சிறப்பாக பிரகாசித்தால் இந்தியாவிற்கு சாதகமே. மென்டிஸ் இந்தத்தடவை இந்தியவீரர்கள் துவம்சம் செய்யக்காத்திருக்கும் வீரர்.இலங்கையில் நடந்த டெஸ்ட்தொடரில் இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர். ஆசிய கோப்பையில் இந்திய விக்கட்டுகளை இவர் பறித்ததற்கு இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் வாங்கிக்கட்டியவர்.இந்தத்தடவையும் இந்தியா இலங்கையில் இழந்த விக்கட்டுக்கு பதில்கூறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


ஸ்ரீசாந்த் vs குலசேகரா

ஸ்ரீசாந்த், இவரும் நீண்ட நாட்களுப்பின்னர் விளையாட வருவதால் இவரது form சந்தேகமானதே. ஆனால் இவரது வெளிச்செல்லும் (out-swing ) பந்துகள் நேர்த்தியாக விழும் பட்ச்சத்தில் வலதுகை துடுப்பாட்டவீரர்கள் திணறவேண்டி இருக்கும். குலசேகர நேர்த்தியாக பந்துவீசும்வீரர், இவரது உள்வரும் (in-swing ) பந்துகள் இந்திய ஆரம்ப துடுப்பாட்டவரிசைக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.

ஷகீர்க்கான் vs துசார

ஷகீர்க்கான் வருகை இந்தியாவுக்கு பலமும் பலவீனமும், நீண்டநாட்களுக்கு பிறகு விளையாட வருவதால் அவரது form எப்படி இருக்கும் என்பது தெரியாது இதுபலவீனமாக இருப்பினும் இவர் நல்ல நிலையில் பந்து வீசினால் நிச்சயம் இலங்கைக்கு சவாலாக இருக்கும். துசார இலங்கையில் நடந்த போட்டிகளில் சிறப்பாக பந்துவீசினாலும் அனுபவம் குறைவானவீரர். இவர் அனுபவமிக்க இந்திய துடுப்பாட்டவரிசையை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
  துடுப்பாட்டம் பந்துவீச்சு என்பவற்றில் இருஅணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல, களத்தடுப்பிலும் அணிஒற்றுமையிலும்(team spirit )இலங்கை இந்தியாவை விட சிறப்பான நிலையில் உள்ளது.ஆனால் இந்தியஆடுகளங்களில் போட்டிகள் இடம்பெறுவது இந்தியாவுக்கு சாதகமானதே.பழக்கப்பட்ட ஆடுகளங்கள்,ரசிகர்கள் என இந்தியாவிற்கு விளையாடுவது சுலபமாக இருக்கும். அதேநேரம் இலங்கைஅணிக்கு புதிய ஆடுகளங்கள், எதிராக பெருந்திரளான ரசிகர்கள் என்பவருக்கிடையில் விளையாடுவது சுலபமான காரியமில்லை. கடைசி 4 வருடங்களில் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒருபோட்டியிலேனும் இந்தியாவில் வென்றுள்ளன.சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அவர்களைவிட சிறந்த சுழல்ப்பந்து வீச்சாளர்களை கொண்ட இலங்கையால் ஒருபோட்டியிலாவது இந்தியாவில் வெல்லமுடியாது என்றில்லை.ஆனால் இலங்கை மற்றைய நாடுகள் இந்தியாவுடன் விளையாடுவதை விட ஏனோதெரியவில்லை அதிகமான அழுத்தத்துடன்(under pressure) விளையாடுவதாலேயே இந்தியாவை இந்தியாவில் வைத்து இதுவரை வெல்ல முடியவில்லை. புதிய இளம்வீரர்கள்,புதியதலைமை என புதுச்சூழலுடன் களமிறங்கும் இலங்கையணி இந்த முறையாவது முதல்வெற்றியை பெறுகிறார்களா என்று பார்க்கலாம். ஏனோதெரியவில்லை இந்தியா 1-0என்று தொடரை வெல்லுமென்று உள்மனம் சொல்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.

2 வாசகர் எண்ணங்கள்:

thanu said...

NEW CAPTAIN NEW BEGINING LANKAN LIONS WAIT AND SEE

எப்பூடி ... said...

thanu said

//NEW CAPTAIN NEW BEGINING LANKAN LIONS WAIT AND SEE//

game over,beter luck next time

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)