Saturday, November 14, 2009

இனொருவிஜய்...! தாங்காதடா சாமி...

நம்ம இளையதளபதி, டாக்டர், நாளைய தமிழகமுதல்வர், நாளைமறுதின இந்தியப்பிரதமர், அதற்கடுத்தநாள் அமெரிக்கஜனாதிபதி விஜய் அவர்களின் அக்ஷன் திரைப்படங்களின் அன்புத்தொல்லையையே தாங்கமுடியாமல் தவிக்கும் ரசிகர்களுக்கு இன்னுமொரு அன்புத்தொல்லை காத்திருக்கிறது. அது வேறு ஒன்றுமில்லை நம்ம வித்தகக்கவிஞர்(?) பா.விஜய் அவர்கள் அடுத்ததாக நடிக்கப்போகும் படம் "பிரபா" ஒரு முழுநீள அக்ஷன்படமாமாம்... ஞாபகங்கள் படம் மூலம் தனக்குத்தானே சூடு போட்ட பின்பும் இவர் திருந்தவில்லை. ஞாபகங்கள் திரைப்படம் கமர்சியல் மசாலாக்கள் இல்லாததாலேயே தோல்வியடைந்ததாக தனக்குத்தானே ஆறுதல்கூறும் இவர் அடுத்த படமான பிரபாவில் அந்தக்குறை இல்லாமலிருக்க பக்கா கமர்சியல் ஹீரோவாக அவதாரம் எடுக்கப்போறாராம்.இதனால் அவர் கூறிக்கொள்வது என்னவென்றால் "விஜய்,விஷால்,சுந்தர்.சி, பரத் நீங்கள் எல்லோரும் எனது போட்டியை சமாளிக்க தயாராகுங்கள்" என்பதாகும். இயக்குணர்கள்,இசையமைப்பாளர்கள்,தயாரிப்பாளர்கள்,பாடகர்கள்,பாடலாசிரியர்கள் என அனைவரும் ஏனோ தெரியவில்லை அண்மைக்காலங்கலாகவே நடிப்பதற்கு வந்துவிடுகிறார்கள்.இதற்க்கு நான்கு காரணங்கள்தான் இருக்கமுடியும். 1. நடிப்பது சுலபமான காரியமாக இருக்க வேண்டும். 2. நடிப்பதால் அதிகளவு பணத்தை நோகாமல் சம்பாதிக்கலாம் . 3. இருக்கும் துறையில் இனியும் குப்பைகொட்ட முடியாதென விளங்கியிருக்கலாம் . 4. அரசியலில் இறங்குவதற்கு தன்னை தயார்ப்படுத்திக்கொள்வதற்கு. பா. விஜய்க்கு நான்காவது காரணம் நோக்கமாக இருப்பினும் மூன்றாவது காரணம்தான் சரியாகப்பொருந்தும் என்று நினைக்கிறேன். நா.முத்துக்குமாரின் அசுரவளர்ச்சிக்கு முன்னால் இவரால் ஈடுகொடுக்க முடியாமை இவரது நடிகர் அவதாரத்துக்கு முக்கியகாரணமாக இருக்கலாம். கலைஞருக்கு துதிபாடியதால் கிடைத்த வித்தகக்கவிஞர் பட்டத்தோடு இன்னும் எத்தனை நாட்கள்தான் குப்பைகொட்டமுடியும் என்று நினைத்திருப்பார் போலுள்ளது. ஒருவேளை இவரது "பிரபா" சூப்பர் ஹிட்டாகி இவரும் நாளை ஒரு அக்ஷன்ஹீரோவாக உருவெடுத்தால் தமிழ்சினிமாவின் நிலைஎன்ன? எங்களுக்கு ஒருவிஜயே போதுண்டா சாமி இன்னொரு விஜயை பூமி தாங்காது.

7 வாசகர் எண்ணங்கள்:

Admin said...

மிக்க நன்று,,, இன்னொரு விசயா நிஜமாலுமே பூமி தாங்காதுடா சாமி

ஞானப்பழம் said...

பா.விஜய் நடிக்க வந்துள்ளாரா? கிடக்கறான் போக்கத்த பைய!!! தமிழ் திரையுலகத்தில நல்லா நடிக்க, அடுத்த முறை எதாவது தெலுங்கன் வருவான்!!! :P

விட்டுத்தள்ளுங்க சார்... அடுத்த சாப்பாட்டுக்கு மோர் ஊத்துங்க... அதுல பூன இருக்கான்னு பார்ப்போம்!!!

அ.ஜீவதர்ஷன் said...

cshmech


//விட்டுத்தள்ளுங்க சார்... அடுத்த சாப்பாட்டுக்கு மோர் ஊத்துங்க... அதுல பூன இருக்கான்னு பார்ப்போம்!!!//

பூனை என்ன புலியே இருக்கும் பாத்து சாப்பிடுங்க.

ஞானப்பழம் said...

புலி இருந்தால், கவலையில்லை!!

thanu said...

p.vijay msg ethum pass panurathu enda sms podunga.theatre ellam varasolathinga-thanushan

ஞானப்பழம் said...

ஹி ஹி... அருமை தனுசரே....

Yoganathan.N said...

எவ்வளவோ பார்த்துட்டோம்... இத பார்க்க மாட்டோமா???

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)