Wednesday, November 11, 2009

தருண்கோபிக்கு வாழ்த்துகள்,மற்றும் கண்டனம்

புதுமணவாழ்வில் இணையும் தருண்கோபிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,நீங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். வாழ்த்துகள் மட்டும்தான் தருண்கோபிக்கு கண்டனம் அவருக்கு கிடையாது.அவரது திருமணசெய்தியினை வெளியிடும்போது விளம்பரத்துக்காக ஈழத்தை கொச்சைப்படுத்திய இணையதளங்களுக்கு வன்மையான கண்டனங்கள். தருண்கோபியின் திருமணசெய்தி நல்லசெய்திதான் ஆனால் அவர் ஈழத்துப் பெண்ணை திருமணம் செய்கிறார் என்பதையே பல இணையதளங்கள் பலவிதமான தலைப்புகளுடன் கோடிட்டுக்காட்டின. தருண்கோபி ஒரு வெள்ளைக்காரியை அல்லது ஜப்பான்காரியை திருமணம் செய்தால் கூட அது புதுமையான விடயம், அதற்கு வேண்டுமென்றால் முன்னுரிமை கொடுக்கலாம்.(அதற்கு கூட உண்மையில் முன்னுரிமை அவசியமில்லாதது ) அவர் மணக்கப்போவது ஒரு தமிழ்ப்பெண்,அவர் ஈழத்தில் பிறந்தால்என்ன தமிழகத்தில் பிறந்தால்என்ன? பலரும் அதில் தருண்கோபி யாரும் செய்யாததொரு தியாகத்தை செய்வது போன்று ஏன் பில்டப் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஈழத்தில் பிறந்தபெண் என்ன தீண்டத்தகாதவளா? ஈழத்துப் பெண்கள் திருமணத்துக்கு வழியில்லாமல் இருப்பது போன்றும், தருண்கோபி போன்ற தியாகிகள் அவர்களை மணக்க முன்வரவேண்டும் என்பது போன்றும் உள்ளது இவர்களின் கருத்து. அதிலும் குறிப்பாக ஒரு இணையத்தளம் "தருண்கோபியும் ஈழத்துப்பெண்ணும்" இவ்வாறு தலைப்பிட்டிருந்தது. உங்கள் தலைப்பை நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம் அது பார்வையாளரை கவர்வதற்காக இருக்கவேண்டும், காயப்படுத்துவதற்காக இருக்கக்கூடாது. குறிப்பாக ஈழத்தின்பெயரை களங்கப்படுத்தாதீர்கள். (அந்த இணையதளத்தின் உரிமையாளரது பத்திரிக்கை மாசிமாதம் 17 ஆம் திகதிமுதல் ஈழத்தைவைத்து பல புனைகதைகள் கூறி மக்களை ஏமாற்றி பணத்தை கறந்தது) மீண்டும் கூறுகின்றேன் தருண்கோபி மீது எமக்கு எந்த வருத்தமும் இல்லை ஆனால் தருண்கோபியின் திருமணத்தை ஈழத்தோடு சம்பத்தப்படுத்தி விளம்பரம் தேடுபவர்களுக்கு மட்டும்தான் இந்தக்கண்டனம். நன்றி.

5 வாசகர் எண்ணங்கள்:

Krishna said...

நெத்தியில அடிச்சா மாதிரி நல்லா நச்சுன்னு சொன்னிங்க. எப்படி சொன்னாலும் இவங்களுக்கு விளங்க போறதில்ல. விளங்காதமாதிரி நடிக்கிறவங்களுக்கு எப்படி சொன்னாலும் ஏத்துக்க போறதுமில்ல.

ஞானப்பழம் said...

எல்லாரும் கவணிக்க வேண்டிய ஒரு விடயத்தை சொல்லியிருக்கீங்க!! இப்படித்தானே எல்லரும் நிணைக்க வேண்டும்... உடலாலும் உள்ளத்தாலும் இருபாலாரும் விரும்பி இணையும் தம்பதிகளே திருமணத்தில் வெற்றி காண்பார்கள்... பரிதாபப்பட்டு செய்யும் திருமணம் எப்படி உண்மையான திருமணமோ காதலோ ஆகும்?

அ.ஜீவதர்ஷன் said...

நான் ஒரு விவசாயி!

//நெத்தியில அடிச்சா மாதிரி நல்லா நச்சுன்னு சொன்னிங்க. எப்படி சொன்னாலும் இவங்களுக்கு விளங்க போறதில்ல. விளங்காதமாதிரி நடிக்கிறவங்களுக்கு எப்படி சொன்னாலும் ஏத்துக்க போறதுமில்ல.//

------------------

cshmech

//எல்லாரும் கவணிக்க வேண்டிய ஒரு விடயத்தை சொல்லியிருக்கீங்க!! இப்படித்தானே எல்லரும் நிணைக்க வேண்டும்... உடலாலும் உள்ளத்தாலும் இருபாலாரும் விரும்பி இணையும் தம்பதிகளே திருமணத்தில் வெற்றி காண்பார்கள்... பரிதாபப்பட்டு செய்யும் திருமணம் எப்படி உண்மையான திருமணமோ காதலோ ஆகும்.//



உங்கள் இருவரது ஆதரவுக்கும் நன்றிகள், இவர்கள் திருந்தாதஜென்மங்கள்

ஞானப்பழம் said...

தினமும் இதைப் பார்ப்பேன்.. ஒரு சந்தேகம் வரும்.. உங்களிடம் கேட்கலாமா வேன்டாமான்னு நினைப்பேன்!! கடைசியில் கேட்கிறேன்...

"யார்" திருந்தாத ஜென்மங்கள்? :P

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

தினமும் இதைப் பார்ப்பேன்.. ஒரு சந்தேகம் வரும்.. உங்களிடம் கேட்கலாமா வேன்டாமான்னு நினைப்பேன்!! கடைசியில் கேட்கிறேன்...

"யார்" திருந்தாத ஜென்மங்கள்? :P


உங்களையில்லை சார் நீங்க ஜோசிக்காதீங்க

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)