Tuesday, November 10, 2009

மீண்டும் வசீம் அகரம்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தாலும் இறுதிவரை போராடிய அமீர், அஜ்மல் ஜோடி நியூசிலாந்தின் வயிற்றில் கடைசிவரை புளியைக்கரைத்தது என்றே சொல்லலாம் 212 என்னும் எட்டக்கூடிய இலக்கை நோக்கி ஆடத்துவங்கிய பாகிஸ்தான் 50 ஓட்டங்களை 10 ஓவர்களில் ஒருவிக்கடை மாத்திரம் இழந்து பெற்றிருந்தது.சல்மான் பட்டின் ரன் அவுட்டினைத்தொடர்ந்து மளமளவென சரிந்த விக்கட்டுகள் 101 ஓட்டங்களுக்கு 9 என்னும் நிலையில் இருந்தபொது ஜோடி சேர்ந்த அமீரும் அஜ்மலும் 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்படுமட்டும் சிறப்பாக ஆடிவந்தது.
அனால் கடைசி 3 ஓவர்களில் எந்த பவுண்டரிகளும் கிடைக்காததால் ஒவ்வொரு ஓட்டங்களாகவே இருவரும் சேகரித்தனர்.ஆனால் இறுதி ஓவரில் எப்படியும் ஒருநான்கு ஓட்டமாவது தேவைப்பட்ட நிலையில் ஒராம் வீசிய just short பந்தினை hugg செய்து fine leg திசையில் நின்ற மில்சிடம் பிடிகொடுத்து அஜ்மல் ஆட்டமிழந்தபோது அபுதாபி மைதானமே நிசப்தத்தில் மூழ்கியது. வெறும் ஏழு ஓட்டங்களால் வெற்றியையும் 3 ஓட்டங்களால் 10 ஆவது விக்கட்டின் இணைப்பாட்ட சாதனையையும் இருவரும் தவறவிட்டனர். (முன்னைய சாதனையாக 106 ஓட்டங்களை விவ்வியன் ரிச்சட்சும் மைக்கல் ஹோல்டிங்கும் இங்கிலாந்துக்கு எதிராக 1984 ஆம் ஆண்டு பெற்றிருந்தனர் )
போட்டி தோல்வியடைந்தாலும் அக்ரமின் காலத்து போராடும் பாகிஸ்தானை நீண்டகாலத்திற்கு பின்னர் காணக்கூடியதாக இருந்தது. முகமது அமீர் குறிப்பாக மீண்டும் வசீம் அகரம் எங்கே பாகிஸ்தான் அணியில் வந்து விட்டாரோ என்று சொல்லுமளவிற்கு பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஜொலித்ததை காணக்கூடியதாக இருந்தது. swing control , revers swing , joker , slow ball என அனைத்திலும் ஆரம்பகால வசீம் அக்ரமை இவர் ஞாபகப்படுத்துகிறார்.
அதே போல் 18 வயதுமட்டுமே நிரம்பிய உமர் அகமல் பாகிஸ்தானுக்கு கிடைத்த வரம். உயரம் குறைவாக இருந்தாலும் இவர் நேர்த்தியாக அடிக்கும் sixer கள் ஒவ்வொன்றும் big six களாகவே இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவர் book shot எனப்படும் கிரிக்கெட்டுக்கேஉரிய shot களையும் சிறப்பாகவே விளையாடும் ஒருதிறமைசாலி.
ஆனால் பாகிஸ்தான் அணியின் தேர்வாளர்களாலும், அணித்தலைவர்களாலும் இப்படி சிறந்தவீரர்களது கிரிக்கெட்வாழ்க்கை வீணடிக்கப்பட்டது வரலாறு . வக்கார் யூனிஸ், சொகைப் அக்தர், முகமது அஸிவ், யூஸப் யுகானா, அசார் முஹமட், அப்துல் ரசாக்,சக்லையின் முஸ்ராக் என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம் . யூனிஸ் ஹானும் பல தவறான முடிவுகளை அவ்வப்போது எடுத்து வருவதால் தற்போதுள்ள இளம்திறமைகளும் வீணடிக்கப்படலாம், சிறப்பாக ஆரம்பத்துடுப்பாட்டவீரராக விளையாடிய கமரன் அக்மல் ஏன் midle order க்கு மாற்றப்பட்டார் என்றே தெரியவில்லை.யுகானா இரண்டு ஆட்டங்களுக்கு ஒருதடவை நிறுத்தப்படுகிறார், சுழற்ச்சிமுறையில் யுகானா,மலிக், மிஸ்பா உல் ஹாக் நிறுத்தப்படுகின்றனர்.
இப்போது பாகிஸ்தானுக்கு தேவை ஒரு ஸ்திரமான தலைத்துவம். அப்ரிடி மட்டுமே அதற்க்குத்தகுதியானவர்.அப்ரிடி captain ஆகும்பட்சத்தில் இவற்றுக்கானதீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளது.இன்சமாம் சொன்னதுபோல் அப்ரிடியும் தனது ஆட்டத்தை பொறுப்பாக ஆடுவார், மற்றும் தலைமைத்துவத்துக்கான அறிகுறிகள் இவரிடம் நிறையவே உண்டு.பார்ப்போம் அப்ரிடி தலைமையிலாவது மீண்டும்ஒரு போராடும் வசீம்காலத்து பாகிஸ்தான்அணியை பார்க்கலாமா என்று.

2 வாசகர் எண்ணங்கள்:

shabi said...

யூஸப் யுகானா,///... இவர் பெயர் முஹம்மது யூசுப்

அ.ஜீவதர்ஷன் said...

shabi

// யூஸப் யுகானா,///... இவர் பெயர் முஹம்மது யூசுப் //

பழகிப்போச்சு அதனால்தான் எழுதும்போது வந்திரிச்சு, இனிவரும் காலங்களில் முஹம்மது யூசுப் என்று பயன்படுத்துகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)