Monday, November 9, 2009

வேட்டைக்காரனுக்கு நிபந்தனை ஜாமின்?

வேட்டைக்காரன் இப்பவாஅப்பவா என்ற இழுபறி எல்லாம் முடிஞ்சு ஒருமாதிரி மார்கழி 18 வெளியிடப்படும் என்று sun pictures அறிவித்துள்ளது.இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் திரைமறைவில் நடந்த ஒருவிடயம் இப்போதுதான் வெளியில் தெரியவந்துள்ளது. விஜயின் அரசியல் சம்பத்தப்பட்ட அனைத்துக்காட்சிகளும் நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக அந்தக்காட்சிகளில் அரசியல்வாடை இல்லாமல் புதிய காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட வேண்டும் என்ற sun pictures இன் நிபந்தனையை விஜயும், A.V.M உம் ஏற்றுக்கொண்டபின்னரே sun pictures இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொங்கலுக்கு ஜக்குபாய் அல்லது குட்டியை வெளியிட sun pictures முடிவுசெய்துள்ளது. இந்நிலையில் இடைப்பட்டகாலப்பகுதியில் (26 நாட்களில்) பெரிதாக வசூல் பார்க்கமுடியாதென்று முடிந்தவரை வாதாடியும் படத்தை பொங்கலுக்கு வெளியிட sun pictures மறுத்துவிட்டதாம். இதே sun pictures தயாநிதிமாறன்தான் விஜயை டெல்லிக்கு முதல்முதலாக அழைத்துச்சென்று அரசியல்ஆசையை ஊட்டியவர்.இன்று அவரது sun pictures நிறுவனமே விஜயின் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கச்சொல்லிஉள்ளது . நம்ம கவுண்டமணி சொன்னமாதிரி"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" விஜய் தற்போது சுறா படப்பிடிப்பில் உள்ளதால் எப்படி கெட்டப்பை மாற்றி மீண்டும் வேட்டைக்காரனில் நடித்துக்குடுக்கப்போகிறார்...? ஒரே குஷ்ரமப்பா சாரி கஷ்ரமப்பா....

3 வாசகர் எண்ணங்கள்:

சுடுதண்ணி said...

//விஜய் தற்போது சுறா படப்பிடிப்பில் உள்ளதால் எப்படி "கெட்டப்பை மாற்றி" மீண்டும் வேட்டைக்காரனில் நடித்துக்குடுக்கப்போகிறார்...? //

:))))

அகில் பூங்குன்றன் said...

கெட்டப்பை மாற்றி மீண்டும்

என்னது இது........

எப்பூடி ... said...

சுடுதண்ணி

// :)))) //

வேணாம்...வலிக்குது.... அழுதிடுவன்.

hi hi hi

----------------------------------

அகில் பூங்குன்றன்

//கெட்டப்பை மாற்றி மீண்டும்

என்னது இது........ //


வேட்டைக்காரனில் மூன்றுநாள் வளர்ந்த தாடியுடன் நடித்த விஜய் சுறாவில் ஒருநாள் மட்டுமே வளர்ந்த தாடியுடன் நடிக்கின்றார், இது கெட்டப் மாற்றம்தானே?

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)