Thursday, November 5, 2009

இதுக்கு பெயர்தான் கிரிக்கெட்

யார் எதிர்பார்த்தார்கள் இந்தியா தோர்க்கப்போகுத்தென்று 19 பந்தில் 21 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நேரத்தில் இரண்டு power play over கள் மீதமுள்ள நிலையில் சச்சினும் ஜடேஜாவும் களத்தில் இருக்கும்போது இப்படி மளமளவென்று விக்கட்டுகள் போகுமென்று,இதுதான் கிரிக்கெட். கையுக்குள் இருந்த match கைவிட்டுபோனது இந்திய ரசிகர்களுக்கு வருத்தமாக இருப்பினும் இந்தப் போட்டி பார்வையாளர்களை கதிரையின் விளிம்புக்கே கொண்டு சென்றது.காலையில் பங்களாதேஷ் 1 விக்கெட்டால் வென்றதுபோல் இந்தியாவும் வெல்லப்போகிறது என்று அருகிலிருந்த நண்பர் கூறிக்கொண்டிருக்க மோசமான run selection ஆல் மீண்டும் ஏமாற்றியது இந்தியா. 3 போட்டியிகளில் தோற்றாலும் மூன்றையும் போராடியே தோற்றது இந்தியா.இன்னமும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் நாணயசுழர்ச்சியில் வெல்லும் அணிக்கே சாதகமான வாய்ப்பு அதிகமுள்ளநிலையில் இந்தியா மூன்று துறைகளிலும் சிறப்பாக ஆடினால் மாத்திரமே தொடரை கைப்பற்ற முடயும். ஒருநாள் போட்டிகளில் 17000 ஓட்டங்களை கடந்துள்ள சச்சின் இதுவரை மொத்தமாக அனைத்து சர்வதேசப்போட்டிகளிலும் சேர்த்து 595 போட்டிகளில் 686 இன்னிங்க்ஸ்களில் 48.25 சராசரியுடன் 29921 ஓட்டங்களை 87 சத்தங்கள் 144 அரைச்சதங்களுடன் பெற்றுள்ளார் 30000 ஓட்டங்களுக்கு இன்னமும் 79 ஓட்டங்கள் மட்டுமே தேவை.அது தவிர 234 catch உம் 199 விக்கட்டுகளையும் வீழ்த்திஉள்ளார். இன்னமும் 1 விக்கட்டை வீழ்த்தினால் 200 விக்கட்டுகள் சச்சினுக்கு கிடைக்கும். கிரிக்கெட் வரலாற்றில் யாரும் முறியடிக்கமுடியாத சாதனை இது. ஆனால் சச்சின் ஒருபோட்டியில் பெறப்படும் எந்த சாதனையையும் இதுவரை பெறாதது ஆச்சரியமான உண்மை. டெஸ்ட்,ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் பெறப்படும் சாதனைகளான அதிகபட்ச ஓட்டம், விரைவான சதம், விரைவான அரைச்சதம் , இணைப்பாட்டம் , ஒரு ஓவரில் பெறப்பட்ட (ஓட்டங்கள் , பவுண்டரிகள், சிக்சர்கள்) என்று எதிலும் சச்சின் சாதிக்கவில்லை. அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று ஒருநாள் தொடரின் அதிகபட்சக் ஓட்டமான சாயிட் அன்வரின் 194 ஓட்டத்தினை முறியடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தும் சச்சின் தவறவிட்டுவிட்டார். இத்தனை சாதனைகளைச்செய்த சச்சின் ஒரு போட்டியில் வரும் சாதனைகளையும் முறியடிக்கின்றாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

3 வாசகர் எண்ணங்கள்:

cshmech said...

எனக்கென்னமொ சச்சின் சாதனை செய்ததைவிட இந்தியா தொற்றதில்தான் அதிகமான மகிழ்ச்சிபோல உள்ளது!!!

எப்பூடி ... said...

cshmech

//எனக்கென்னமொ சச்சின் சாதனை செய்ததைவிட இந்தியா தொற்றதில்தான் அதிகமான மகிழ்ச்சிபோல உள்ளது!!!//

நிச்சயமாக எனக்கு இந்தியா தோற்றது வருத்தமே,எனக்கு பிடித்த மூன்றுஅணிகள் முறையே "இலங்கை,தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான்" இந்தியாவை எனக்கு அவளவாகப்பிடிக்காது(ஹர்பஜன், ஸ்ரீசாந்த், சகீர்கான் இருக்கும் இந்தியஅணியை எனக்கு பிடிக்காது ) ஆனால் ஆஸ்திரேலியாவைக்காட்டிலும் எனக்கு இந்தியாவைப்பிடிக்கும். ஏன்என்றால் ஆஸ்திரேலியாவும் , இங்கிலாந்தும் எனக்கு பரம எதிரிகள்.

thanu said...

aus play better than ind -sachin real master.ind loose the movementum after won the 3rd match-thanushan

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)