Wednesday, November 4, 2009

ஏன்டா இப்பிடி?

கடவுளே தீபாவளி வந்ததும் வந்திச்சு இந்த புதுப்படம் ரிலீஸ் பண்ணுறவங்க தொல்லை தாங்கலமுடியல. எந்த தமிழ் டிவிக்கு சனல் மாத்தினாலும் இவனுங்கதான் வந்து நிக்கிறாங்க. முன்னரெல்லாம் எதாவது பண்டிகையின்னா டிவி பார்க்க அவளவு ஆசையாய் இருக்கும். அப்பவெல்லாம் Doordarshan தமிழ் அலைவரிசையில் நல்ல நல்ல நிகழ்ச்சிகள் போடுவாங்க.கிரேசிமோகன் நாடகம்,குறிப்பிட்ட பண்டிகை சம்பந்தமான பழையபாடல்கள்,பின்னர் புதுப்பாடல்க்ளின் தொகுப்பாக ஒளியும் ஒலியும்,இறுதியாக ரஜினி அல்லது கமலின் superhit படம் ஒன்று போடுவார்கள்.அத்தோடு பண்டிகை நிகழ்ச்சிகள் முடிவடையும். ஆனால் இப்பவெல்லாம் தொலைக்கா(க)ட்சி அலைவரிசைகள் அதிகமாகி ஒன்றோடொன்று போட்டிபோட்டு குறித்த தினத்தில் மூன்று படங்கள், பின்னர் அந்தப்பண்டிகைக்கு படம் ரிலீஸ்செய்த நடிகர்,நடிகயருடன் நேர்காணல் என்று குறைந்தது பத்து அலைவரிசைகளிலாவது இது நடக்கும். ஒரே முகத்தை எத்தனை தடவை திருப்பித்திருப்பி பார்ப்பது.போதாக்குறைக்கு சிறப்புப்பார்வை எண்டபேர்ல எல்லாத்தொலைக்காட்சிகளிலும் ஒரே சீனை திருப்பித்திருப்பி போட்டு கழுத்தறுப்பானுங்கபார் அதில இருக்கிற நல்ல சீனுமே வெறுத்துப்போயிடும். சரி அண்றுடன் தொலைந்தது சனி என்று பார்த்தால் அடுத்தடுத்த வாரங்களுக்கும் இந்தத்தொல்லை தொடர்கிறது. இயக்குனர் , நடிகர் , தயாரிப்பாளர் ஒரு தொலைக்காட்சியில் என்றால் நாயகி வேறொரு தொலைக்காட்சியில், இப்பிடி மாத்திமாத்தி உசிர எடுக்கிறாங்கள்.அதுவும் குறிப்பா கலைஞர் டிவி படமென்றால் மானாட மயிலாடவில் பெரிய கூத்தே நடக்கும்.படத்தை புரமோட் பண்ணுறன் என்றபோர்வயில படம் வெளியான அடுத்தநாளே இந்தப்படத்தை வெற்றி ஆக்கிய அனைவருக்கும் நண்றியென்று வாய் கூசாமல் பொய் பேசுகிறது என்று இந்த கூத்து இரண்டு வாரம் தொடரும். கடைசி போட்டோவை பாருங்க திருவிழாவுக்கு கழுத்தறுக்க கொண்டுபோன ஆடுமாதிரி மூன்றுபேரையும். நெஞ்சத்தொட்டு சொல்லுங்க இந்த இரண்டு வாரமும் ரவிக்குமாரும், உதயநிதியும், சூர்யாவும் உங்களை வெறுப்பாக்கல?

9 வாசகர் எண்ணங்கள்:

ரோஸ்விக் said...

//நெஞ்சத்தொட்டு சொல்லுங்க இந்த இரண்டு வாரமும் ரவிக்குமாரும், உதயநிதியும், சூர்யாவும் உங்களை வெறுப்பாக்கல? //

இல்லை நண்பா! ஏன்னா, நான் இவனுங்க தொல்லைகாட்சிகளை, இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்கிரதில்ல...

ங்கொய்யால ! கொன்னு எடுத்துடுரானுக...நல்ல வேலை இன்னும் விஜய் டிவி படம் தயாரிக்க ஆரம்பிக்கல...:-)
நீங்க குறிப்பிட்ட அந்த தொல்லைகாட்சிகளைப் பார்தீங்கன்னா அப்புறம் நம்மளையும் அவய்ங்கள மாதிரி குப்பை ஆக்கிடுவானுக...தப்பிச்சு போயிடுங்க...

Unknown said...

என்ன தான் பண்றது.... ஆரம்பத்துல கூட ஒன்னும் தெரில ... ஆனா படம் பார்த்த அப்புறம் தான் தாங்க முடில.........

அ.ஜீவதர்ஷன் said...

//என்னபண்ணுறது எனக்கும் ஸ்போர்ட்ஸ் சனலும் விஜய் டிவியும் தான் பேவரிட் ஆனா வீட்டில இருக்கிற பெரிசுங்க ? பகல் நேரம்னா வெளியில போகலாம் ராத்திரியில என்னபண்ணுறது பாஸ்? //

என்னபண்ணுறது எனக்கும் ஸ்போர்ட்ஸ் சனலும் விஜய் டிவியும் தான் பேவரிட் ஆனா வீட்டில இருக்கிற பெரிசுங்க ? பகல் நேரம்னா வெளியில போகலாம் ராத்திரியில என்னபண்ணுறது பாஸ்?

Varatheeswaran Kajan said...

இவனுங்க தொல்லை தாங்க முடியலேயப்பா .....

சரி இந்த தொல்லைகாட்சிகளை என்ன பண்ணலாம் ?
நாயகன் ஸ்டைலில் "தெரியலையே "

அ.ஜீவதர்ஷன் said...

Gudjen

//இவனுங்க தொல்லை தாங்க முடியலேயப்பா .....

சரி இந்த தொல்லைகாட்சிகளை என்ன பண்ணலாம் ?
நாயகன் ஸ்டைலில் "தெரியலையே //

your 100 % correct

ஞானப்பழம் said...

அதெல்லாம் பரவாயில்ல.... சரியான மொக்க படத்துக்கெல்லாம் மூனு வாரம் விளம்பரம் தர்ராங்கப்பா!!! அதுலயும், அந்த ஹீரோவ உக்கார வச்சுகிட்டு... எதோ உலகசாதனை பன்னின மாதிரி பாரட்டுவாங்க பாருங்க... தாளாது!!! அந்த ஹீரோவே வாயோரமா சிரிச்சிட்டு இருப்பாரு.. என்னா அந்தப் படம் flopனு உலகத்துக்கே தெரியும்!!

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//அதெல்லாம் பரவாயில்ல.... சரியான மொக்க படத்துக்கெல்லாம் மூனு வாரம் விளம்பரம் தர்ராங்கப்பா!!! அதுலயும், அந்த ஹீரோவ உக்கார வச்சுகிட்டு... எதோ உலகசாதனை பன்னின மாதிரி பாரட்டுவாங்க பாருங்க... தாளாது!!! அந்த ஹீரோவே வாயோரமா சிரிச்சிட்டு இருப்பாரு.. என்னா அந்தப் படம் flopனு உலகத்துக்கே தெரியும்!!//

after veddaikkaaran release watch more drama.

ஞானப்பழம் said...

ஐயோ!! நான் தமிழ் நாட்டை விட்டே ஓடீடுவேன்!!! என்னால தாங்கமுடியாதுப்பா!!!

Please pa.. எதாவது அதிகாரமுள்ளாவரைத் தெரிந்திருந்தால், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கச் செய்ய வேன்டும்!!

It has become a real nuisance.. No more its a joke to me!! :(

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//ஐயோ!! நான் தமிழ் நாட்டை விட்டே ஓடீடுவேன்!!! என்னால தாங்கமுடியாதுப்பா!!!//

வேட்டைக்காரன் ரிலீசுக்கு மூன்று வாரம் முன்பும் பின்பும் சன் குடும்பத்தினரை தொலைக்காட்சி வழியாக தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் pressure மாத்திரை வாங்கிவைக்க வேண்டியதுதான்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)