Tuesday, November 3, 2009

பழிதீர்க்கப்போவது யார்?

இந்திய அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான தொடர் சூடுபிடித்துள்ள நிலையில் யார் யாரைப்பழிதீர்க்கப்போகின்றார்கள் என்பதை போட்டித்தொடர் முடயும் வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இரண்டுக்கு இரண்டு என்னும் நிலையில் இருக்கும் தொடரில் ஐந்தாவது போட்டி விறுவிறுப்பாக இருக்கப்போகிறது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இறுதியாக ஆஸ்திரேலியாவில் 2007 /2008 இல் நடந்த ஒருநாள் முக்கோண தொடரை மூன்று இறுதியாட்டங்களில் முதல் இரண்டையுமே தோற்று இந்தியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது. அதன் பின்னர் மீண்டும் இருஅணிகளும் மோதிக்கொள்ளும் போட்டித்தொடர் இதுதான்.ஆஸ்திரேலியாவில் இழந்த கோப்பையை இந்த தொடரில் வெல்வதன் மூலம் இந்தியாவை பழிதீர்க்கும் சந்தர்ப்பம் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவும் அதேபோல் 20 /20 உலக கிண்ணத்தை வென்று நாடு திரும்பியவுடன் நடந்த முதல் போட்டித்தொடரை (2007 /2008) ஆஸ்திரேலியா 4-2 என்று வென்றதற்கு பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு இது நல்ல சந்தப்பம். 20 /20 உலக கிண்ணத்தை வென்றவுடன் நடந்த ஒருநாள் போட்டித்தொடரை அவுஸ்திரேலியா எப்படி வென்றதோ அதேபோல் சம்பியன்ஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வென்றபின்னர் நடக்கும் முதல் போட்டித்தொடர் இது.சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாதிக்குமா இந்தியா? இப்போது நாளைமறுதினம் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் போட்டியைப்பற்றி பார்ப்போமானால் இந்தப்போட்டியில் வெல்வதற்கான சந்தர்ப்பம் யாருக்கு அதிகமென்று பார்த்தால் முதலில் bating ஐ பொறுத்தவரை இந்தியாவிற்கு கம்பீர் இல்லாவிட்டாலும் சச்சின்,சேவாக்,டோனி, யுவராஜ், ரெய்னா என வலுவான துடுப்பாட்ட வீரர்கள் இருக்கின்றார்கள்.ஆனால் ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் கடந்த முறை இந்தியாவில் பிரகாசித்த கில்க்கிரிஸ், ஹெய்டன், சிமன்ஸ்,கிளார்க், ஹெடின் என முன்னணி வீரர்களில் கில்க்கிரிஸ், ஹெய்டன் ஒய்வு பெற்றதாலும் சிமன்ஸ் ஒழுக்கப்பிரச்சினைகளாலும் கிளார்க், ஹெடின் காயத்தினாலும் இல்லாமல் போனது துடுப்பாட்ட வரிசையை நன்கு பாதித்துள்ளது.இரண்டு அணிகளின் தலைவர்களும் தத்தமது அணிகளுக்கு இதுவரை உச்ச பங்களிப்பை கொடுத்துள்ளனர்.ஆனால் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை அன்றையதினம் யாராவது ஒருவீரர் பிரகசித்தாலே ஆட்டத்தின் போக்கை மாற்றமுடியும். பந்து வீச்சில் இரு அணிகளும் சமபலத்தில் இருந்தாலும் களத்தடுப்பில் இந்தியா சிறப்பாக இந்த தொடரில் செயற்பட்டாலும் அவுஸ்திரேலியா இந்தியாவை விட சிறப்பான நிலையில் உள்ளது. ஹைதராபாத் ஆடுகளம் 90 வீதமான் ஆசிய ஆடுகளங்களைப்போலவே துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளமே.முதலில் துடுப்படும் அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருப்பினும் முதலில் துடுப்பாடும் அணி 280 ஓட்டங்களுக்கு மேல் பெற்றாலே பாதுகாப்பான இலக்காக இருக்கும்.இரண்டு நல்ல இணைப்பாட்டம் பெறப்பட்டால் இது இலகுவாக சாத்தியமாகும். அல்லது regular interval இல் விக்கட்டுகள் விழாமலும் collapse ஆகாமல்பார்த்துக்கொண்டாலும் 280 சாத்தியமே. ஆனால் கிரிக்கெட்டில் எதனையும் முதலில் கூறமுடியாது, யுவராஜ், வொட்சன் போன்றோருக்கு அன்றையநாள் சாதகமானதாக இருந்தால் 280 என்ன 330 ஓட்டங்களையும் துரத்தமுடியும். ஆஸ்திரேலியாவுக்கு கடந்தமுறை இந்தியாவில் பெற்ற வெற்றியையும் சம்பியன்ஸ் கிண்ணத்தில் பெற்ற வெற்றியையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். அதேபோல் இந்தியா இந்தப் போட்டித்தொடரை வென்றால்தான் தரவரிசையில் முதலிடம் பெறமுடியும். சச்சின் 17000 ஓட்டங்களை பெறும் சந்தர்ப்பமும் தோனி தரவரிசையில் முதலிடம் பெறும் சந்தர்ப்பமும் காத்திருக்கின்றது. ஆக இந்தப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது. பார்க்கலாம் யார் கலக்கப்போவதென்று.

0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)