Monday, November 2, 2009

பரத்தைப்பிடித்த சனி..

இளந்தலைமுறை நாயகர்களில் தனுஸ், ரவி அளவிற்கு அதிகம் பேசப்படாவிட்டாலும் பரத் ஒரு திறமைசாலி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.dance க்கு மட்டுமே இந்தப்பையன் லாயக்கு என்று ஊடகங்கள் கூறியவேளையில் செல்லமே படத்தில் நடிப்பிலும் பட்டயைக்கிளப்பி தன்னை நிரூபித்தவர். காதல் படத்தில் சந்தியா அதிகமாக பேசப்பட்டாலும் நம் பக்கத்துவீட்டு பையன் என்னும் இமேஜ் பரத்துக்கு இந்தப்படம் மூலம் கிடைத்தது.பின்னர் பரத் நடித்த படங்களில் வெயிலைத்தவிர ஏனைய படங்கள் எதுவும் பேசப்படவில்லை . இந்தநிலையில்த்தான் பரத்திற்கும் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வந்தவுடன் எல்லா ஹீரோக்கும் வரும் action hero ஆசைவந்தது. அந்தஆசை தவறில்லை, ஏன் என்றால் எம். ஜி .ஆரும் ரஜினியும் காட்டியபாதை அது.ஆனால் பரத் அவசரப்பட்டது மட்டுமல்ல தனக்கு சினிமாஅறிவும் குறைவு என்பதை பேரரசுவுடன் சேர்ந்து பழனி என்ற வரலாற்றுக்காவியத்தை நடித்தபோது எமக்கு உணர்த்தினார். அதன் பின்னர் நடித்த நேபாளி திரைப்படம் பரத்திற்கு மீண்டும் நல்ல ஒரு பெயரை கொடுத்தாலும் வர்த்தகரீதியாக சரியாகப்போகவில்லை.இதனைத்தொடர்ந்து பரத் தற்போது நடித்துள்ள படம்தான் கண்டேன் காதலை. படம் ஆகாஓகோ என்று இல்லாவிட்டலும் ஜனரஞ்சகமாக உள்ளது. திரைக்கதை சறுக்கல்கள் இருந்தாலும் இரட்டை அர்த்தவசனமற்ற வாய்விட்டு சிரிப்பை வரவைத்திருக்கும் சந்தானத்தின் காமடியுடன்(நீண்ட நாட்களுக்கு பிறகு )இளமைததும்ப colourfull ஆக வந்திருக்கும் ஒரு திரைப்படம்.போதாக்குறைக்கு படம் சன்டிவியின் வசம்வேறு உள்ளது .ஒண்ணுமே இல்லாத டுபாக்கூர்ப்படங்களையே ஓடவைத்த சன் ஓரளவு நல்ல படம் கிடைத்துள்ளது விடுவார்களா? உண்மையிலே பரத் இந்தப்படத்திற்கு அப்படியே பொருந்தயுள்ளார், என்னைப்பொறுத்தவரை jab we met இல் நடித்திருந்த சாயிட் கபூரைவிட பரத் நன்றாகவே நடித்திருந்தார். இது பரத்திற்கு தன்னை மீண்டும் வெளிக்கொண்டுவர கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம். சந்தப்பத்தைப்பயன்படுத்தி தனக்கு ஏற்ற பாத்திரங்களில் நடித்தால் மீண்டும் நல்லதொரு நிலைமைக்கு வரும் வாய்ப்பு பரத்துக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் விதி யாரைவிட்டது? பரத் மீண்டு மாட்டியுள்ளது உலகத்தரசினிமா இயக்குனர் பேரரசுவிடம். பேரரசுவுடன் சேர்ந்து இரண்டு வெற்றிப்படம் கொடுத்த விஜயே பேரரசுவை தனது ஐம்பதாவது படத்தில் போடமறுத்த நிலையில் பரத்துக்கு இது தேவையா? பரத் சனியனை தூக்கி பனியனுக்குள் போட்டுக்கொண்டுள்ளார்.பேரரசுவின் வசன, படல்வரிக்கொடுமைகளையே தாங்கமுடியாத நிலையில் படத்துக்கு அவர் தான் இசையும் அமைக்கின்றார், தாங்க முடயுமா சாமி ? எல்லோரும் action ஹீரோ என்று புறப்பட்டால் love story யார் நடிக்கிறது. தனது love story படங்கள் மூலம் உச்சத்திலிருந்த பிரஷாந்த் action hero வாக மாற ஆசைப்பட்டதன்விளைவு! இப்ப பிரஷாந்த் எங்கே? action hero ஆகனுமேன்று ஒரு படத்தில் 10 fight உடன் நடித்த விஷால் இப்போது எங்கே? சரி பரத் திருத்தணியில் காலை வைத்துவிட்டார் இனி ஒன்றும் செய்யமுடியாது , இனிமேல் பேரரசுவும் மக்களை ஒரேமாதிரி தரம்கெட்ட படமெடுத்து (?) ஏமாற்றமுடியாது என்பதால் இந்தப்படம் பேயடிவாங்குமென்பதில் சந்தேகமில்லை.சரி போனதுபோகட்டும் இனியாவது பரத் தனக்கு ஏற்ற கதாபத்திரங்களில் நடித்தால் (கண்டேன் காதலை,வெயில்,காதல் ) நிச்சயம் பரத்துக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு.இல்லாவிட்டால் நாம் ஒரு நல்ல இளம் கதாநாயகனை இழக்கவேண்டிவரும். .

4 வாசகர் எண்ணங்கள்:

கலையரசன் said...

அம்மாம் பாசமா பரத் மேல உங்களுக்கு?

அ.ஜீவதர்ஷன் said...

அம்மாம் பெரிய பாசமில்லாட்டாலும் தம்மாத்துண்டு பாசமாச்சும் இருக்கத்தானே செய்யுது.....

Anonymous said...

bharath unga sondhakaararaa?

அ.ஜீவதர்ஷன் said...

பரத் உங்களுக்கு எதிரியா என்ன?

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)