Monday, November 30, 2009

தோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்? பகுதி 3

மூன்றாவது காரணகர்த்தாக்கள் நடிகர்கள்,இவர்களை நான்குவகையாக பிரித்தால் 1 ) முன்னணி நடிகர்கள் 2 ) இளம் நடிகர்கள் 3 ) மாக்கற் இழந்த நடிகர்கள் 4 ) பாவப்பட்ட நடிகர்கள் என்று பட்டியலிடலாம் முன்னணி நடிகர்கள் என்று பார்த்தால் ரஜினி,கமல் தவிர அஜித்,விஜய்,விக்ரம்,சூர்யா ஆகியோர் அடங்குவார்கள்.இவர்களில் ரஜினியும் கமலையும் விட்டுவிடுவோம். இன்றும் அவர்களது மாக்கற்றும் ,வெற்றிகளும் குறையவில்லை,மற்றும் இவர்களால் தோல்விப்படங்கள் அதிகரிக்க்கவுமில்லை என்பதால் இவர்களை விட்டுவிடுவோம். அஜித் தொண்ணூறுகளின் இறுதியில் அதிகமாக வெற்றிப்படங்களை கொடுத்த ஒருவர் 2000 களின் ஆரம்பத்தில் மோட்டார்கார் பந்தயங்களில் பங்குபற்றுவதற்காக இவர் சினிமாவிலிருந்து சற்று தள்ளியிருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது .மீண்டும் சினிமாவில் தன்னை நிலைநிறுத்த இவர் கடுமையாக போராட்டவேண்டி இருக்கின்றது. ஆரம்பகாலங்களில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த இவரால் தொடர்ந்து இரண்டு படங்களை வெற்றியடையவைக்க முடியவில்லை. வருடத்திற்கு 4 படங்கள் நடித்துவந்த அஜித் இந்த ஆண்டு இதுவரை ஒருபடம்கூட வெளியிடவில்லை. வருடத்திற்கு நான்குபடங்கள் இனிவரும் காலங்களில் சாத்தியமில்லை என்றாலும் இரண்டு படங்களையாவது தரும் பட்சத்தில் தலையால் தமிழ் சினிமாவிற்கு வெற்றிப்படங்களை பெற்றுத்தரமுடியும். விஜய் 2004 ,2005 ஆம் ஆண்டுகளில் தன்னை உச்சத்துக்கு கொண்டு சென்றபின்னர் ஒரே மாதிரியான கதைக்களம்,உடல்மொழி, வசனஉச்சரிப்பு என நடித்ததால் கடைசி ஐந்துபடங்களில் ஒரு வெற்றிப்படத்தையே கொடுக்கமுடிந்தது.(போக்கிரி). வருடத்திற்கு மூன்று படங்கள் நடிக்கும் விஜய் தனது படங்களிலும் நடிப்பிலும் சிறிதளவு மாற்றத்தை கொண்டுவந்தாலே போதுமானது,ஆனால் இப்படித்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்தால் யார்தான் என்ன செய்யமுடியும். விக்ரம் தனக்கென தனிமுத்திரை பதித்தநடிகர், நடிப்பாற்றல்,கமெர்சியல் என இவர் 2001 - 2005 வரை அதிகமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் குறிப்பாக 2003 ஆம் ஆண்டு சாமி, பிதாமகன்,தூள் என மூன்று சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர்,ஆனால் அந்நியன் வெற்றியின் பின்னர் இறுதி நான்கு ஆண்டுகளில் மூன்று படங்களில் மாத்திரம் நடித்துள்ள விக்ரம் ஒரு வெற்றிப்படங்களும் கொடுக்கவில்லை. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருபடம் நடிப்பது இவரது பெரியபிரச்சினை, படத்துக்குபடம் கெட்டப் மாத்துவதென்றால் கூட பரவாயில்லை இறுதி நான்கு வருடங்களில் நடித்த மூன்று படங்களுமே கமெர்சியல் படங்கள், விக்ரம் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்கும் பட்ச்சத்தில் வெற்றிப்படங்கள் அதிகரிக்கலாம். சூர்யா ஆதவன் காலைவாரினாலும் இவர் தற்போது நல்லநிலையில் இருக்கும் ஒருவர், வருடத்திற்கு இரண்டுபடங்களிலாவது சூர்யா நடிப்பதால் ஒருபடமேனும் வெற்றியடைகிறது. இதனை இவர் தொடர்ந்தும் தக்கவைத்திருப்பது நல்லது.ஆனால் தொடர்ந்து கமர்சியல் படங்களில் ஆர்வம் காட்டும் சூர்யா வித்தியாசமான கதைக்களங்களில் கவனம் செலுத்தாவிட்டால் இவரும் வெற்றிப்படங்களை தேடவேண்டி ஏற்படலாம். மிகப்பெரும் பிரச்சினை இந்த நான்குபேரும் அண்மைக்காலமாக கமெர்சியல் படங்களில் மட்டுமே நடிப்பதாகும். விக்ரம், சூர்யா கூட வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்காமை வருத்தப்படவேண்டிய விடயமே. கமெர்சியல் படங்கள் தேவைதான் இல்லாவிட்டால் வியாபாரரீதியாக தங்களை நிலைநிறுத்தமுடியாது,இது கடந்தகால அனுபவம் , ஆனால் இரண்டுபடங்களுக்கு ஒருமுறையாவது வித்தியாசமான படங்களில் நடிக்கலாம். எல்லோருமே கமர்சியல் படங்களில் நடித்தால் மக்களுக்கு கமர்சியல் படங்கள் மீது வெறுப்புதான் வரும்,கமெர்சியல் படங்களில்கூட வித்தியாசம் காட்டலாம், ஆனால் அண்மைக்காலமாக ஒருபடம் போலவே மற்றையபடம் வருவது அண்மைய இவர்களின் கமெர்சியல்படங்களின் தோல்விக்கு முக்கியகாரணம். வளர்ந்து வரும் நடிகர்களில் தனுஸ், ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் அதிகமாக வெற்றியடைகின்றன,இதற்க்கு முக்கியகாரணம் இவர்கள் தங்களுக்கு எந்தமாதிரி படங்கள் சரிவருமோ அந்தமாதிரியான படங்களில் நடிப்பதேயாகும்.அதனால்த்தான் இறுதிமூன்று ஆண்டுகளில் கிடைத்த வெற்றிகளில் இவர்களின்பங்கு அதிகமாக இருப்பதற்குகாரணம். இவர்களை தவிர விஷால்,சிம்பு,பரத் ஆகியோர் எடுத்த எடுப்பிலேயே ரஜினியாக ஆசைப்பட்டதன் விளைவுதான் மூன்றுவருடங்களாக ஒரு வெற்றிப்படங்கள்கூட கொடுக்காதது.இவர்களும் ஆண்டுக்கு ஒருபடம் நடிப்பது ரொம்பஓவர் அதிலும் சிம்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருபடம்.வருடத்திற்கு மூன்றுபடங்களில் நடித்து தங்களுக்கு என்னவருமோ அதை சரியாகசெய்தாலே இவர்களால் சாதிக்கமுடியும், ஆனால் சிம்பு ஹி ..ஹி ..ஹி ... மாக்கற் இழந்த நடிகர்கள் என்று பார்த்தால் சத்தியராஜ், சரத்குமார்,விஜயகாந்த்,அர்ஜுன் போன்ற நடிகர்கள் .ரஜினியும் கமலும் இன்னமும் ஹீரோவாகத்தானே நடிக்கிறார்கள், நாங்கள் நடித்தால் என்னவென்று இவர்கள் நடிக்கும் படங்களெதுவும் வெற்றிபெறுவதில்லை. தோல்விப்படங்களின் அதிகரிப்புக்கு இவர்கள் முக்கியகாரணிகள். தனக்கு இனியும் ஹீரோவேடம் சரிவராதென்று தெரிந்து கௌரவவேடங்களில் நடிக்கும் பிரபு இவர்களுக்கு நல்ல முன்னுதாரணம்.இவர்கள் கௌரவ வேடங்களில் நடிக்கும் பட்சத்தில் அந்தப்படங்கள் இன்னமும் பலம்பெறும் என்பதில் சந்தேகமில்லை. பாவப்பட்டநடிகர்கள் என்று பார்த்தால் அருண்குமார்,ஸ்ரீகாந்த்,ஷாம்,சிபிராஜ் என்பவர்கள் இந்தப்பிரிவில் அடங்குவார்கள் , இவர்கள் திறமைசாலிகள்தான்,ஆனால் இவர்கள் நடிக்கும் படங்கள் அதிகமாக தோல்விப்படங்களின் எண்ணிக்கையே அதிகரிக்கின்றன.இதற்கு இவர்களது அதிஷ்டமின்மை ஒருகாரணமாக இருபினும் நல்லபடங்களை தெரிவுசெய்யாமல் கிடைக்கும் சந்தர்ப்பத்திலெல்லாம் நடிப்பது இவர்களது தோல்விக்கு முக்கியகாரணம்.இவர்களால் தோல்விப்படங்கள் அதிகரித்தாலும் இவர்களை ஒதுக்கிவைக்க முடியாது. ஒருநாள் விக்ரம் ,சூர்யா தம்மை நிரூபித்ததுபோல் இவர்களும் தம்மை நிரூபிக்கும் சந்தப்பம் உள்ளதால் இவர்கள் நிச்சயம் தேவை, இவர்கள் நல்ல படங்களை தெரிவுசெய்து நடிப்பதன் மூலமோ அல்லது அஞ்சாதேயில் பிரசன்னாநடித்த பாத்திரத்தை போன்றபாத்திரங்களில் நடிப்பதன்மூலமோ தம்மை நிரூபித்துக்கொள்ளலாம். இவர்களைத்தவிர வருடத்திற்கு பத்து பதினைந்து புது முகங்கள் அறிமுகமாகின்றார்கள்,இவர்களின் படங்கள் 95 % ஆனவை தோல்வியடைகின்றபோதும் இவர்களது சினிமாக்கனவு ஒருநாள் நிறைவேறும் என்றகனவிலேயே இவர்கள் வருவதால் இவர்களை குறைகூறமுடியாது .ஆனால் மோசமான படங்களில் நடிக்காமல் ஓரளவேனும் நல்ல படங்களில் நடித்தால் படம் வெற்றியடயாவிட்டாலும்,ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் நல்லவேடங்கள் கிடைக்கலாம். அடுத்தபதிவில் மீண்டும் சந்திப்போம்........

2 வாசகர் எண்ணங்கள்:

பேநா மூடி said...

u r correct:-)

எப்பூடி ... said...

பேநா மூடி

//u r correct:-)//

thanks for your visit and comment

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)