Thursday, November 26, 2009

2010 ரஜினியின் ஆண்டா ?

2010 பொங்கல் திருநாளுக்கு ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் Ocher Studios நிறுவனத்தின் முதல் வெளியீடான கோவா திரைப்படம் வெளியாகும் என்று தெரிகிறது , இதனது ஓடியோ ரிலீஸ் வருகிறமாத நடுப்பகுதியில் இடம்பெற உள்ளது , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓடியோவை வெளியிட்டுவைக்கிறார். வெங்கட்பிரபு இயக்க யுவன் இசையமைக்கும் இந்தப்படத்தில் ஜெய் ,பிரேம்ஜி ,சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சிம்புவும் நயன்தாராவும் சிறப்பு காட்சிகளில் நடித்துள்ளனர். அடுத்து எந்திரன், தலைவர் படம், 95 வீதமான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் டப்பிங்பேச ஆரம்பித்துள்ளார் சூப்பர் ஸ்டார், ஒருபுறம் போஸ்ட் புரடக்சன் வேலைகளும் வேகவேகமாக நடைபெறுகிறது. அநேகமாகே சித்திரை புத்தாண்டுக்கு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது,sun picture வசமுள்ள நான்கு படங்களும் சித்திரைக்குள் வெளியிடப்பட்டுவிடும் நிலையில் கோடை விடுமுறைக்கு எந்திரன் கலக்கவரும் என்றாலும் இறுதி திகதியை sun picture வெளியிடும்போதே நம்பகமாக இருக்கும். அடுத்து சுல்தான் தி வாரியார், Ocher Studios இக்காக ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் வரும் முதல் இந்திய அனிமேசன் படம்(ஒரு ஹீரோ அனிமேசனில் வருவது ).இது 80 வீதம் முடிவடைந்த நிலையில் உள்ளது. படத்தில் இடம்பெறுவது முழுக்க முழுக்க ரஜினியின் சொந்தகுரல்தான். அனிமேஷன் ரஜினிக்கு ஜோடி விஜயலட்சுமி. காமெடிக்கு மயில்சாமி, வில்லனாக ராகுல்தேவ் இதில் நடிக்க A.R.ரகுமான் இசையமைக்கிறார் .எந்திரன் வருட பிறப்புக்கு வரும் பட்ச்சத்தில் சுல்தான் தீபாவளிக்கு வரக்கூடிய சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது. எது எப்பிடியோ அடுத்த ஆண்டு தலைவர் சம்பத்தப்பட்ட மூன்று படங்கள் வெளிவர உள்ளதால் ஒவ்வொரு ரஜினி ரசிகனுக்கும் 2010 ஒரு ரஜினி ஆண்டாகவே இருக்கும். கலக்குங்க தலைவா....

7 வாசகர் எண்ணங்கள்:

ஞானப்பழம் said...

"கோவா" படப் பாடல்களாவது கேட்கிறமாதிரி இருக்கும்னு நிணைக்கிறேன்...

ஆமா... "கோவா"ங்கறது தமிழ் பேரா இல்ல ஆங்கிலப் பேரா? :P

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//"கோவா" படப் பாடல்களாவது கேட்கிறமாதிரி இருக்கும்னு நிணைக்கிறேன்... //

யுவனை 100 % நம்ப முடியாது.

//ஆமா..."கோவா"ங்கறது தமிழ் பேரா இல்ல ஆங்கிலப் பேரா? :P//

பஞ்சாப் தமிழ் பெயரா ஆங்கில பெயரா?

ஞானப்பழம் said...

பஞ்சாப் தமிழ் பெயரா ஆங்கில பெயரா?///
நல்ல கேள்வி... எதுக்குக் கேட்டேன்னா, தமிழ் பெயர் வைத்தால் தமிழக அரசு முழுமையான வரி விளக்கு செய்துவிடும்!!

யுவனை 100 % நம்ப முடியாது.///
நானும் அனுபவித்துள்ளேன்!!

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//நல்ல கேள்வி... எதுக்குக் கேட்டேன்னா, தமிழ் பெயர் வைத்தால் தமிழக அரசு முழுமையான வரி விளக்கு செய்துவிடும்!! //

கலைஞருக்கு துதி பாடினா english கூட தமிழ் பெயர் என்பார் .

Unknown said...

எனக்கு கோவா சாப்பிடுதான் பழக்கம்........ கலைஞருக்கு கொடுகாட்டி சரி .....

அ.ஜீவதர்ஷன் said...

dialog

//எனக்கு கோவா சாப்பிடுதான் பழக்கம்........ கலைஞருக்கு கொடுகாட்டி சரி .....//

ஒண்ணுமே புரியல

r.v.saravanan said...

ஒவ்வொரு ரஜினி ரசிகனுக்கும் 2010 ஒரு ரஜினி ஆண்டாகவே இருக்கும்.

yes 2010 எந்திரன் (ரஜினி) ஆண்டு

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)