Saturday, November 28, 2009

இந்த 20 பேரும் இல்லாவிட்டால்?

எம்.ஜி.ஆர் - நடிகர்களுக்கு அரசியல் ஆசையே உருவாகியிருக்காது. சிவாஜி - நவரசத்தையும் ஒரு முகத்தில் ஒரே நேரத்தில் பார்த்திருக்க முடியாது. கண்ணதாசன் - பாமரனுக்கு தமிழின் இனிமை தெரிந்திருக்காது. எம். எஸ்.வி - எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கர்நாடகசங்கீத பாடல்களுக்கு வாயசைத்திருப்பார்கள். நாகேஷ் - உடல் மொழியின் உன்னதம் தெரிந்திருக்காது. கருணாநிதி - குடும்ப ஆட்சி தமிழகத்தில் இருந்திருக்காது. ஜெயலலிதா - ஊழல்என்றால் என்னவென்று பல பேருக்கு தெரிந்திருக்காது. வாலி - சில நேரங்களில் எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்திருக்க முடியாது. ஸ்ரீதர் - பெரிய நடிகர்கள் இல்லாமலும் ஜனரஞ்சகமான படங்கள் எடுக்கமுடியும் என்ற எண்ணம் தோன்றியிருக்காது. பாலச்சந்தர் - இயக்குனர்களுக்காக படம்பார்க்க யாரும் திரையரங்குகளுக்கு சென்றிருக்க மாட்டார்கள். இளையராஜா - தமிழனின் அடையாளம் திரையிசையில் இருந்திருக்காது. ரஜினி - திராவிட தோற்றத்தில் தமிழ் சினிமா நடிகர்களை பார்த்திருக்க முடியாது. கமல் - தெலுங்கு சினிமாக்களை விட மோசமான நிலையில் தமிழ் சினிமா இருந்திருக்கும். பாரதிராஜா - மண்வாசனையை தமிழ் சினிமாவில் சுவாசித்திருக்க முடியாது. மகேந்திரன் - சினிமாவின் இன்னொரு முகம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்திருக்காது. வைரமுத்து - கண்ணதாசன் இல்லாத வெறுமை தமிழை வாட்டியிருக்கும். மணிரத்தினம் - தமிழ் சினிமா சர்வதேச தரத்துக்கு தன்னை வளர்க்க ஆரம்பித்திருக்காது. பி.சி.ஸ்ரீராம் - ஒளிப்பதிவுக்காக மட்டும் படம் பார்க்குமளவிற்கு ரசனை அதிகரித்திருக்காது . ரஹ்மான் - இசையின் மறுபக்கம் தமிழனுக்கு தெரிந்திருக்காது. ரசிகர்கள் - மேலுள்ள ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். T.M.S, P.B.S, ஜேசுதாஸ், S.P.B, சுசீலா,ஜானகி,சித்ரா என பாடகர்கள் நிறைய பேர் உள்ளதால் அவர்களை மேலுள்ள 20 பேருடன் சேர்க்கமுடியவில்லை, ஆனால் இவர்களும் பட்டியலில் உள்ளவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. யாராச்சும் முக்கியமானவர்களை தவறவிட்டிருந்தால் சுட்டிக்காட்டுங்க.

12 வாசகர் எண்ணங்கள்:

முல்லைப்பிளவான் said...

good but add more person

Unknown said...

வடிவேலு / விவேக் இல்லை என்றால் , தற்போதைய சினிமா (அநேகம் ).............. உங்களுக்கே தெரியும் .

அ.ஜீவதர்ஷன் said...

dialog

/வடிவேலு / விவேக் இல்லை என்றால் , தற்போதைய சினிமா (அநேகம் ).............. உங்களுக்கே தெரியும் .//

வடிவேலு ஒகே ,விவேக் ?

----------------------------
முல்லைப்பிளவான்

//good but add more person//

நீங்க சொல்லுங்க யாரின்னு நான் அவங்க இல்லன்னா எப்பிடி இருந்திருக்குமென்னு சொல்றன்.

Tirupurvalu said...

A corection for Jayalalitha you have to mention for ordinary peoples now know Indian laws.If money in hand how can escape from court action

ஞானப்பழம் said...

என்னாபா நீ? கடைசீவரைக்கும் என்ன சேக்காம விட்டுட்டயே!!

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//என்னாபா நீ? கடைசீவரைக்கும் என்ன சேக்காம விட்டுட்டயே!!//

இருபத்தொராவதாத்தானே நீங்க இருக்கீங்க, சாரி பாஸ் அடுத்த தபா டாப் 25 போடேக்க உங்கள சேத்துக்கிரன்

...........................

Abiramii Fashions

//A corection for Jayalalitha you have to mention for ordinary peoples now know Indian laws.If money in hand how can escape from court action//

ha..ha..ha you are right

haris sachin said...

MAHINDA RAKAPAKSHA ELLA ENDA srilanka la mokan irukan endu world itku terenchu irukathuuu..

kehiliya rampukvala { srilankan minister} ella da oru world poiyan irukan endu ternhcu irukathu

அ.ஜீவதர்ஷன் said...

kathiravelu

//MAHINDA RAKAPAKSHA ELLA ENDA srilanka la mokan irukan endu world itku terenchu irukathuuu..

kehiliya rampukvala { srilankan minister} ella da oru world poiyan irukan endu ternhcu irukathu//

100% correct.

ஞானப்பழம் said...

"mokan" enraal?

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//"mokan" enraal?//


"மொக்கன்"

ஞானப்பழம் said...

"comedy piece"a?

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//"comedy piece"a?//


"மூளை குறைந்தவன்"

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)