Saturday, November 28, 2009

தோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்? பகுதி 2

லிஸ்ட்டில இருக்கிற அடுத்த காரணகர்த்தா நம்ம இயக்குனர்கள் (முதல் காரணத்தை பார்க்க தோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்? பதிவை பாருங்கள் ) 2000 - 2006 வரையான தமிழ்சினிமாவின் வளர்ச்சியில் எப்படி இயக்குனர்களின் பங்கு பெருமளவில் இருந்ததோ அதேபோல் அதிகபடங்கள் தற்போது தோல்வியடைவதிலும் இந்த இயக்குனர்களின் பங்கு நிறையவே உண்டு. தற்போதுள்ள இயக்குனர்களை நான்குவகையாக பிரித்தால், 1) வர்த்தகரீதியான படங்களை இயக்குபவர்கள் 2 ) தமக்கென்று ஒரு பாணியில் வித்தியாசமான புதிய களங்களை படைப்பவர்கள் 3 ) ரீமேக் பிரியர்கள் 4 ) ஒன்றுக்கும் உதவாத கோஷ்டி என நான்காக பிரிக்கலாம். வர்த்தக ரீதியான வெற்றி படங்களை அதிகளவில் கொடுப்பவர்கள் வரிசையில் ரவிக்குமார் ,ஹரி , சரண், முருகதாஸ், லிங்குசாமி போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் ரவிக்குமாரும் ,ஹரியும் மட்டும்தான் தற்போது ஓரளவேனும் நல்ல நிலையில் இருப்பவர்கள். இவர்களில் ஹரியின் படங்கள் ஒரே மாதிரியாக இருப்பது அண்மைக்காலங்களில் ஹரியின் படங்கள் வீழ்ச்சியடைந்து வருவதற்கு முக்கியகாரணம், இவரது வெற்றி படங்களின் வீச்சு வரவர குறைவடைந்து கொண்டேவருகிறது. ஆனாலும் ரவிக்குமார் மட்டும் இன்னமும் மினிமம் கரண்டி இயக்குனராகவே உள்ளார்,அதற்க்கு அவர் கையாளும் காலத்திற்கேற்ப திரைக்கதை மாற்றமும்(ஆதவன் விதிவிலக்கு ) அவரது படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளும் முக்கியமான காரணங்கள். ஆனால் மற்றைய மூவரில் சரண் 2005 க்கு பின்னர் ஒரு வெற்றிப்படங்களும் கொடுக்கவில்லை இதற்கு முக்கியகாரணம் ஆரம்பகாலங்களில் இருந்த தெளிவான திரைக்கதை அண்மைக்கால இவரது படங்களில் இருப்பதில்லை ,இவரது அண்மைக்கால படங்கள் கீழ்தட்டு மக்களுக்கு புரிம்படி இல்லாமல் போனதும் ,பெரியஹீரோக்களுடன் படம் பண்ணாததும் இவரது தோல்விக்கு முக்கிய காரணங்கள். லிங்குசாமி ஆரம்பத்தில் நேர்த்தியான திரைக்கதைமூலம் ஆனந்தம்,ரன்,சண்டைக்கோழி ஆகியபடங்கள் மூலம் நாளைய இயக்குனர்கள் வரிசையில் இடம்பிடித்தவர், ஆனால் பெரிய ஹீரோக்களுடன் படம் பண்ணும்போது ஏனோதெரியவில்லை கோட்டைவிடுகின்றார்(ஜி,பீமா). அடுத்து முருகதாஸ், இவர் தமிழ்சினிமாவின் எதிர்காலமாக எதிர்வு கூறப்பட்டவர், இளம்வயதில் தீனா, ரமணா,கஜினி என யாரும் எதிர்பார்க்காத பிரமாண்டங்களை கொடுத்தவர், திரைக்கதை,வசனம்,இயக்கம் என அனைத்தும் இவருக்கு அத்துப்படி. அனால் இவர் வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவை மறந்து தன்னை வளர்க்க தெலுங்கு, ஹிந்தி என்று அலைந்து கொண்டிருக்கின்றார். முக்கியமான இரண்டு வெற்றிப்பட இயக்குனர்களான சுந்தர். c , s .j . சூர்யா இருவரும் இயக்குனர்களாக இருந்து நடிகர்களாக புதிய களத்துக்கு சென்றதுவும் முக்கியகாரணம், இவர்கள் நடிப்புக்கு தாவியதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் ,ஒன்று அதிக பணம் சம்பாதிக்க, மற்றையது இவர்களிடம் இருந்த மசாலா தீர்ந்திருக்கவேண்டும்.இவர்கள் நடிகர்களாகி சாதித்தது தோல்விப்படங்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன்றி வேறொன்றுமில்லை.ஆனால் இருவரும் இயக்குனர்களாக இருந்தபோது அதிகமாக வெற்றிப்படங்களையே கொடுத்தவர்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அடுத்து தமக்கென்று ஒரு பாணியில் வித்தியாசமான புதிய களங்களை படைப்பவர்கள், இந்தவரிசையில் பாலா,அமீர்,சேரன்,சசிகுமார்,பாலாஜிசக்திவேல்,வசந்தபாலன்,சிம்புதேவன், சசி,செல்வராகவன்,வெற்றிமாறன் என நிறையபேர் இருந்தாலும் இவர்கள் ஒருபடத்தை முடித்து அடுத்த படம் தொடங்கவே ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகின்றன,பின்னர் அந்தப்படத்தை முடிக்க மேலும் ஒன்று அல்லது ஆண்டுகள்வரை செல்கிறது, இதனால் இவர்களின் படங்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கொருமுறைதான் வெளிவருகின்றது. இதனால் ஆண்டுக்கு இவர்களில் இரண்டு பேருடைய படங்களே வெளிவருகின்றது. இவர்களது படங்கள் ஒவ்வொன்றுக்கும் நிச்சயம் காலஅவகாசம் தேவைதான் என்றாலும் மூன்றுஆண்டுகள் என்பது அதிகம் என்றே படுகிறது. இந்த இடைவெளியை குறைத்தால் தமிழ்சினிமா அதிக வெற்றிகளைக்காணும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலையில் அமீர்,சசிகுமார் ஆகியோர் நடிப்பு,தயாரிப்பு என்று வேறு திசைகளில் செல்வது நிச்சயம் வேதனைக்குரியவிடயம்,இவர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது சிறந்த படைப்புக்களையே,நடிப்பதற்கு நிறையபேர் இருக்கிறாங்க ஆனா நல்ல இயக்குனர்கள் ரொம்ப ரொம்ப கம்மி ,அதனால இவர்கள் படைப்புகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். அடுத்து ரீமக் இயக்குனர்களில் ஜெயம்ராஜா , தரணி,கவுதம்மேனன்(இவர் ஆங்கில படங்களை சொல்லாமல் கொள்ளாமல் ரீமேக் செய்வதில் கில்லாடி) இந்த மூன்று பேரும் முக்கியமானவர்கள், இவர்களில் ஜெயம்ராஜா மட்டுமே ஆரம்பம் முதல் இன்றுவரை ஹிட் கொடுத்துக் கொண்டுள்ளவர். தரணி ஆரம்பகாலங்களில் நேரடியாக வர்த்தகரீதியான மூன்று படங்களை இயக்கி அவற்றில் இரண்டில் வெற்றிகண்டவர் (எதிரும்புதிரும்,தில்,தூள்). ஆனால் கில்லி ரீமேக்வெற்றி அவரை ரீமேக்கின்பால் ஈர்த்தது, நீண்டகால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அவர் இயக்கிய ரீமேக் படமான குருவி சரியாக போகாதநிலையில் தனது அடுத்தபடம் என்ன என்பதை அறிவிக்காத நிலையில் இவர் உள்ளார். 2001 - 2004 வரை மூன்று சுப்பர் ஹிட் கொடுத்தவர் இறுதி ஐந்து வருடங்களில் எந்த வெற்றிப்படமும் கொடுக்கவில்லை. கவுதம்மேனன், இவர் ஆங்கிலபட சாயல்களில் மணிரத்தினத்தின் வசன உச்சரிப்புகளுடன் படமெடுக்கும் ஒருவர், ஆரம்பகாலங்களில் இவரது இயக்கத்தை ரசித்தமக்கள் கடைசி இரண்டு படங்களையும் முழுமையாக வரவேற்காததற்கு காரணம் இவரது அதிமேதாவித்தனமான திரைக்கதை,மற்றும் கௌதம் 3 1/2 மணி நேரப்படம் எடுத்தாலும் இவனுங்க எப்பிடியும் பாப்பானுங்க என்கிற அசட்டு தைரியம், மற்றும் ஆங்கில வசனங்களின் திணிப்பு என்பன இவரது படங்களின் சரிவுக்கு காரணமாயின. இந்த மூன்றுபேரைத்தவிர இன்னும் நிறைய இயக்குனர்கள் ரீமேக்கை கையில் எடுத்தாலும் அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை.காலங்காலமாக ரீமேக் படங்கள் வர்த்தகரீதியில் வெற்றிபெற்றது தமிழ்சினிமா வரலாறு, ஆனால் இறுதி ஐந்து வருடங்களில் ரீமேக்கின் வெற்றி மிககுறைவாக உள்ளமை வெற்றிப்படங்கள் குறைந்தமைக்கு முக்கியகாரணம். இதில் நான்காவது தான் மிகமுக்கியமானது, இவர்கள் தயாரிப்பாளருக்கு வேண்டிய ஒரு ஹீரோ அல்லது ஹீரோயினுடன் 1980 களில் வந்த படங்களின் கதை,திரைக்கதை,வசனத்துடன் வருவார்கள், இவர்களது படங்கள் கவனிக்கப்படுவதுமில்லை வெற்றிபெறுவதுமில்லை,ஆனால் ஒரு வருடத்திற்கு வெளிவரும் படங்களில் 60 % ஆன படங்கள் இந்தவகைப்படங்களே. இப்படியான படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தாலும் எதற்காக தயாரிப்பாளர்கள் பணத்தை இறைக்கிறார்கள் என்று பார்த்தால், கறுப்பு பணங்களுக்கு கணக்கு காட்டவாக இருக்கலாம்,தங்களது பெயரை பிரபல்யபடுத்துவதற்காக இருக்கலாம், அப்பிடி இப்பிடி மேட்டருக்காக இருக்கலாம்,அல்லது மூளை வளர்ச்சி குறைந்தவராக இருக்கலாம்.அதற்காக புதிய திறமைகள் வரக்கூடாதென்று அர்த்தமில்லை,அரைவேக்காட்டு படங்களுடன் தயவுசெய்து வராதீர்கள். தனியார் தொலைக்காட்சிகளில் திரைக்குவந்து சிலமாதங்களேயான என விளம்பரபடுத்த மட்டும் உதவும் இந்தமாதிரி படங்கள் தமிழ் சினிமாவிற்கு சாபகேடு.இந்தவகை படங்களை இயக்கும் இயக்குனர்கள்தான் தோல்விப்படங்களின் அதிகரிப்புக்கு முக்கிய காரணகர்த்தாக்கள். இவர்களைவிட பேரரசு,தருண்கோபி,ரமணா போன்ற உல(க்கை)க தரம் வாய்ந்த இயக்குனர்கள்(?) திரையரங்கிற்கு வரும் மக்களையும் ஓட ஓட விரட்டுகிறார்கள். பத்தாததற்கு அவ்வப்போது வீராச்சமிவேற பயப்பிடுத்தினா மக்கள் எப்பிடி திரையரங்கிற்கு வருவாங்க? மாத்தணும் எல்லாத்தையும் மாத்தணும் ....... அட இது நம்ம மணிரத்தினம் டயலாக் ஆச்சே! ஆமா அவர் இப்ப எங்க? அவரு தமிழில நேரடியாக படமெடுத்து 6 வருடங்கள் ஆகின்றது, இப்பெல்லாம் அவர் அமிதாபச்சன் குடும்பத்தில ஒருத்தர்,பழச மறக்கக்கூடாது மணி சார்....

7 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...

பழச மறக்கக்கூடாது மணி சார்....

real words..

அ.ஜீவதர்ஷன் said...

SIMMA

//real words..//

Thanks for your comment.

Yoganathan.N said...

//பழச மறக்கக்கூடாது மணி சார்....//

அவர் ஒன்றும் பழசை மறந்தவர் அல்ல. அவரது எத்த்னை தமிழ் படங்களை நமது அசட்டு மக்கள் வரவேர்கிறார்கள்???
அவரது 'approach in film-making' தமிழ் சினிமா பிரயர்களுக்கு இன்னும் புல்லபடவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து...
உதாரனம் - 'குரு' படத்தை தமிழில் (மட்டும்) எடுத்திருந்தால், எந்த அளவில் ஓடியிர்க்கும்???
'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தை ஆதரித்தவர் (தமிழ் நாட்டில்) எத்தனைப் பேர்???

Yoganathan.N said...

//தோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்?//

உங்கள் காரணங்களில் இருந்தியாக, மிகப் பெரிய காரணம் - 'நமது மக்கள்' என்பது இருக்கும் என நம்புகிறேன். அடுத்த காரணங்களுக்காக காட்டிருக்கிறேன்...

Btw, இயக்க்குனர் ஷங்கரை பற்றி எதுவும் சொல்லவில்லையே... அவர் அந்த நான்குப் பிரிவில் எந்த பிரிவைச் சேர்ந்தவர்???
அவருக்கென்று ஒரு தனி பிரிவை சேர்ப்போமா... "தயாரிப்பாளர் பணத்தை பிரமாண்டமாக கிரியாக்கும் பிரிவு" என்று...

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//Btw, இயக்க்குனர் ஷங்கரை பற்றி எதுவும் சொல்லவில்லையே... அவர் அந்த நான்குப் பிரிவில் எந்த பிரிவைச் சேர்ந்தவர்???
அவருக்கென்று ஒரு தனி பிரிவை சேர்ப்போமா... "தயாரிப்பாளர் பணத்தை பிரமாண்டமாக கிரியாக்கும் பிரிவு" என்று...//

ஷங்கர் ஆரம்பம் முதலே நீண்ட இடைவெளிகளில் பிரம்மாண்டமாக படமெடுக்கும் ஒருவர், இயக்குனராக எனக்கு சங்கரை அதிகம் பிடிப்பதில்லை,ஆனால் சங்கர் இதுவரை தமிழில் இயக்கிய 8 படங்களில் பாய்ஸ் தவிர மீதி ஏழு படங்களும் மிகப்பெரிய வெற்றிப்படங்களே , ஆதலால் அவரை தொல்விப்படங்களுக்கான காரணகர்த்தாக்களில் சேர்க்க முடியாது.

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//அவர் ஒன்றும் பழசை மறந்தவர் அல்ல. அவரது எத்த்னை தமிழ் படங்களை நமது அசட்டு மக்கள் வரவேர்கிறார்கள்???
அவரது 'approach in film-making' தமிழ் சினிமா பிரயர்களுக்கு இன்னும் புல்லபடவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து...//

மக்கள் மீது மட்டும் பிழை கூறமுடியாது ,தளபதிவரை தமிழ் ரசிகர்களுக்காக படங்களை இயக்கிய மணிரத்தினம் ஹிந்தி ரசிகர்களையும் திருப்திப்படுத்தவே தற்போது படமெடுத்து வருகிறார், பம்பாயின் பின்னர் இவரது படங்களில் வடஇந்திய சாயல் உள்ள நடிகர்களே முழுவதுமாக நடித்துள்ளனர்(அரவிந்த சாமி, மாதவன்).இவர் தன்னை ஹிந்தி திரைஉலகில் நிலைநிறுத்திகொள்ள மேற்கத்தைய சாயலில் படங்களை எடுக்க ஆரம்பித்தார். படிப்படியாக மாற்றவேண்டிய ரசனையை உடனடியாக மணிரத்தினம் மாற்ற நினைத்தது மணிரத்தினத்தின் தவறே அன்றி மக்களது அல்ல. மணிரத்தினம் ஆரம்பகாலங்களில் எடுத்த பகல்நிலவு, மௌனராகம், அக்கினி நட்சத்திரம்,இதயக்கோவில்,நாயகன்,தளபதி போன்றபடன்களை வரவேற்ற மக்கள் ஏன் ஆயுதஎழுத்து, திருடாதிருடா போன்ற படங்களை வரவேற்கவில்லை என்றால் அதற்கு காரணம் மக்கள் இல்லை மக்களிக்கு புரியாத திரைக்கதையேதான் .

அ.ஜீவதர்ஷன் said...

Yoganathan.N

//'குரு' படத்தை தமிழில் (மட்டும்) எடுத்திருந்தால், எந்த அளவில் ஓடியிர்க்கும்???
'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தை ஆதரித்தவர் (தமிழ் நாட்டில்) எத்தனைப் பேர்???//

கன்னத்தில் முத்தமிட்டல் மணிரத்தினம் தெரியாத ஒருவிடயத்தில் மூக்கை நுளைத்ததற்கு விழுந்த அடி (இவர் இலங்கை பிரச்சினையை கையாண்ட விதம் பேரரசு படங்களை விட காமடி ).

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)