Saturday, October 31, 2009

"சனத் விலகிக்கிங்க" ஒரு ரசிகனின் அன்புமடல்

அன்புடன் சனத்திற்கு... எமக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து உங்க அளவுக்கு யாரையும் ரசிச்சதில்ல கிரிக்கெட் என்ற சொல் காதில் விழுந்தால் மனதில் பதியும் உருவம் நீங்கள் சனத்.அடுத்தவாரம் வரும் match க்கு முதல்வாரமே தயரகிவிடுவோம், அது ஒரு காலம் ! எல்லா நண்பர்களும் ஒன்றாக சேர்ந்தது ஒரே இடத்தில் tost போடுவதற்கு ஒரு மணி முன்னரே match பார்ப்பதற்கு தயாராகிவிடுவோம். உங்க wicket போனால் மயானஅமைதி போல இருக்கும் வீடு , அரை மணி நேரம் யாரும் யாருடனும் பேசமாட்டோம், பேயறைந்தது போலிருப்போம் அப்படி ஒரு விரக்தி எங்களுக்குள் இருக்கும்.படுத்தால்,சாப்பிட்டால் என சதா சனத் , ஸ்ரீலங்கா என்று திரிந்த காலங்கள் அவை.தற்போதும் match பார்ப்பது குறயாவிட்டாலும் சில பல காரணங்களுக்காக அந்தவெறித்தனம் குறைந்துவிட்டது.ஆனால் சனத் என்னும் சொல்லின் ஈர்ப்பு கடைசி வரை எம்மை விட்டு அகலாது. சனத் உங்களை மாதிரி ஒரு cricketer இனிமேல் சிறீலங்காவில் மட்டுமல்ல உலகத்திலேயே வரமாட்டான். 13000 runs 90 strike-rate இல் இனிமேல் எவன் அடிப்ப்பான்? அல்லது 13000 runs 320 wicket 100 catch தான் யாருக்கு வரும்.சனத் நீங்கள்தான் ஒருநாள் கிரிக்கட் வரலாற்றின் "best cricketer" என்பதை சவால் விட்டு கூறுவேன். ஓருவேளை நீங்கள் முதல் 100 match உம் ஏழாம் இலக்கத்திற்கு குறைவாக இறங்கி ஆடாமல் ஆரம்ப வீரராக ஆடியிருந்தால் யார்ர்கண்டது 18000 runs உடன் சச்சினின் one day batting record இலும் பார்க்க சிறந்த record உடன் வரலாற்றின் சிறந்த one day player ஆகக்கூட இருந்திருக்கலாம். இப்ப உங்களுக்கு வயசு நாற்பது , உங்க உடம்பு ஒத்துழைச்சாலும் மனம் முன்னர் போல திடகாத்திடமாக இல்லை.அதற்க்கு பல காரணங்கள் (சங்ககார , மகேல , சில பல தெரிவாளர்கள் ) நீங்கள் உங்களுடன் களமிறங்கும் சக ஆரம்பவீரர்களை விட அதிகம் ஆதிக்கம் செலுத்துபவர், ஆனால் சமீபகாலமாகவே நீங்கள் ஒருபுறம் நிற்க டில்ஷான் மறுபுறம் வேகமாக ஓட்டங்களை குவிப்பதுவும் அண்மைக்காலங்களில் உங்கள் wicket ஐ நீங்கள் பறிகொடுப்பதற்கு வழிகோலுகிறது.முக்கியமாக ஒவ்வொரு batsman க்கும் இருக்கும் அதிஷ்டம் உங்களை அண்மைக்காலமாக எட்டிக்கூடப்பார்ப்பதில்லை. 2005 ஆம் ஆண்டு நீங்கள் கட்டாயமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டுமென்று தெரிவாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டீர்கள் . அதே தெரிவாளர்கள் 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்காக உங்களை மீண்டும் அழைத்தார்கள், அந்த போட்டித்தொடரின் one day series 5- 0 என இலங்கையால் வெல்லப்பட்டபோது , நீங்கள்தான் தொடர் நாயகன் (man of the series) . (இங்கிலாந்தில் உங்களை யாரும் விமானநிலையத்தில் வரவேற்கவராதது மறக்கமுடியாதது ).அங்கும் நீங்கள்தான் தேவைப்பட்டீர்கள். மீண்டும் அணியிலிருந்து நீக்கப்பட முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டவேளை ஜனாதிபதியின் சிபாரிசில் 2007 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தது .அந்த தொடரில் 450 ஓட்டங்களை குவித்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிவரை சென்ற அணிக்கு பக்கபலமாக இருந்தீர்கள். அதன்பின்னர் சிலதடவை rest என்ற பெயரில் நீங்கள் நிப்பாட்டப்பட்டாலும் நேரடியாக drop பண்ணப்படவில்லை. ஆனால் இப்போது தெளிவாகத்தெரிகிறது உங்களுக்கு வலைவீசிவிட்டர்கள் என்று. உங்களை middle order இக்கு மாற்றியது ஏன்என்று எமக்கு நன்றாகத்தெரியும் . ஒரேயடியாகத்தூக்கினால் வரும் சர்ச்சையை தவிப்பதர்க்ககவே இந்த காய்நகர்வு .இதுவரை நீங்கள் middle order இல் பலதடவை விளையாட முயற்சித்தபோதும் நன்றாக விளையாடியதில்லை. ஆனால் இம்முறை நிச்சயம் runs அடிக்கவேண்டிய சுழ்நிலை. இருப்பினும் இது உங்களுக்கு மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலை. runs அடித்தால் தொடர்ந்தும் middle order , இல்லையேல் ஒரேயடியாக ஆப்பு. சனத் நீங்கள் புதுப்பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களை விரட்டிவிரட்டி அடித்தவர்.களத்தில் நுழைந்தவுடன் பழையபந்தில் சுழல்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது எவளவு கடினம் என்று எமக்குத்தெரியும்.ஆனால் உங்களால் முடயும், பல டெஸ்ட் innings களில் நீங்கள் middle order இல் சாதித்துள்ளீர்கள்.இந்த ஒருதொடரில் மட்டும் முளுக்கவனத்துடன் நிதானமாக நன்றாக ஆடுங்கள்.தொடர் முடிந்ததும் உடனடியாக முகத்திலடித்தமாதிரி உங்கள் ஓய்வை அறிவித்துவிடுங்கள். 10 வருடங்களுக்கு முன்பே சனத் இல்லாத இலங்கைஅணியை கற்பனைகூட செய்யமுடியவில்லை. சனத் ஒய்வு பெற்றால் நாம் எப்படி match பார்ப்பது என்று மோட்டுத்தனமாக யோசித்த காலங்கள் அவை. எங்கள் அளவிற்கு வேறு யாரும் உங்களுக்கு supporters இருக்கமாட்டர்கள் என்ற எண்ணமும் எங்களிடம் அதிகமாகவே இருந்தது.கொழும்பு சென்றால் சனத்துடன் புகைப்படம் எடுப்பது எம்மில் பலருக்கு கனவாக இருந்தது , சிலருக்கு நிறைவுமேறியது.இன்று நாங்களே சொல்கிறோம் போய்விடுங்கள் சனத், இல்லாவிட்டால் உங்களுக்கும் அரவிந்த,அர்ஜுன, இஜாஸ்,இன்சமாம்,கங்குலி,டிராவிட், என ஆசிய அணிகளின் வீரர்களுக்கு நடந்ததுதான் நடக்கும். நீங்கள் cooling glass அணிந்தோ அல்லது முகத்திற்கு பூச்சுக்கள் பூசியோ நாம் பார்த்ததில்லை, எதிரணி வீரரிடம் செய்கையாலோ வாய்ப்பேச்சாலோ மோதிப்பார்த்ததில்லை, நீங்கள் வேங்கை சனத், உங்களிடம் அடிவாங்கி படம் நடிக்க போன பந்துவீச்சாளரும் உண்டு, உங்க cut short உம் flick short உம் இனிமேல் எங்களால் பார்க்கமுடியாதுதான், என்ன செய்வது எல்லாவற்றுக்கும் முடிவென்று ஒன்று உள்ளதல்லவா. ஆனால் ஒன்று சனத் உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, அதேபோல் நீங்கள் இல்லாத இலங்கை அணி சூனியமானது.அந்த சூனியத்தை ரசிக்கமுடியுமா என்று தெரியவில்லை. உங்களை நாங்கள் அடிக்கடி பார்க்கணும் முடிஞ்சா வர்னணையாளராக வந்து சந்தோசப்படுத்துங்க.நீங்க உங்க குடும்பத்தோட சேர்ந்து மீதிக்காலங்களில் பூரண உடல்நலத்துடனும் பூரண ஆயுளுடனும் சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் . இப்படிக்கு என்றும் உங்கள் உண்மையான ரசிகன்

7 வாசகர் எண்ணங்கள்:

SShathiesh-சதீஷ். said...

உண்மையில் நாம் எல்லோரும் இப்போது சனத்துக்காக சொல்லும் ஒரே முடிவு இதுதான். நல்ல ஒரு வீரரை இலங்கை இழக்கப்போகின்றது என்ன செய்வது காலம் என்று ஒன்று இருக்கலவா. அதேபோல நீங்கள் சச்சினை விட சனத் அதிக ஓட்டம் குவித்திருப்பார் என்றீர்கள் சச்சினும் 72ஆட்டங்கள் ஆரம்ப துடுஒப்பாட்ட வீரராக வரவில்லை என்று நினைக்கின்றேன்.

அ.ஜீவதர்ஷன் said...

நீங்கள் சொல்வது 100 % சரி, நான் சச்சினை குறைவாக கூறவில்லை, சச்சின் 72 போட்டிகளிலும் no 7 க்கு முன்புதான் இறங்கியிருக்கிறார் (அதிகமாக no 4/5) ஆனால் சனத் முதல் 100 போட்டிகள் வரை no7 இக்கு பின்னல்த்தான் இறங்கயுள்ளார்

அப்பாவி தமிழன் said...

கண் கலங்க வச்சிடீங்க தல , இதே சனத் இல்லைனா இலங்கை இவ்வளவு பேர் வாங்கி இருக்குமானு கூட சந்தேகம் தான் ...முரளியும் சனதும் போன பிறகு நிச்சயமா என்னால இலங்கை மேட்ச் பாக்கறத நினைச்சு கூட பாக்க முடியல .நல்ல பதிவு தமிழ்10 ல ஓட்டும் போட்டுட்டேன்

Akshy said...

Superb one anna. thx. SANATH always ROCKS!!!

arun said...

nalla pathivu..
aanaal sachinai neengal thaazhthuvathu pondra vasanagal konjam sinthikka vaikindrana..
sanath indiavukku edhiraagavum sachin sri lanka'vukku edhiraagavum vizhaasi thalliya kaalagalai eppadi marakka mudiyum..
sachin idhuvarai 435 ODI pottigalil vizhaiyaadiyullar..
adhil avar oru 350 pottigalil panthu veesiyirunthaal 250-300 wicket'galai eduthirupaar..
idhu enadhu kanippu..
:-)..

Sathya said...

ARE U INDIAN u can like sanath but u should not degrade sachin

அ.ஜீவதர்ஷன் said...

Sathya

//ARE U INDIAN u can like sanath but u should not degrade sachin//

im not an indian, otherwise sanath is the best odi player(crickter) than sachin.sachin best batsman but sanath is the match winner.if u don't know watch the statis'tics.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)