Tuesday, October 27, 2009

கிரிக்கெட் வரலாற்றின் தலை சிறந்த வீரர் யார்?

ஒவ்வொரு விளையாட்டிலும் ஒவ்வொரு வீரர்கள் வரலாற்றின் தலை சிறந்த வீரராகளாக இருப்பார்கள் உதாரணமாக புட்போல் - பீலே , டெனிஷ் - ரோஜர் பெடரர் , கொல்ப் - டைகர் வூட்ஸ் , போர்முலா வண் - மைக்கல் சூமேக்கர் , மொர்டோ ஜி.பி - வாலன்சீனோ ரொசி, அப்படி என்றால் கிரிக்கெட்டின் தலை சிறந்த வீரர் யார்? மற்ற விளையாடுகளை போலல்லாது கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்டிங்,பௌலிங் என்று இரண்டு வகையான பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அந்தவகையில் பௌலிங்கை முதலில் பார்த்தால் டெஸ்ட் கிரிக்கட்டை பொறுத்தவரை முரளியும்,ஷேன்வானும் தங்களுக்குள் மோதிக்கொண்டாலும் இருவருமே சிறந்த வீரர்கள்தான். முரளி முரளியை பொறுத்தவரை அவர் வீழ்த்திய விக்கெட்டுகளில் அதிகமானவை ஸ்பினெர்ஸுக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களிலேயே பெறப்பட்டவை. மற்றும் பங்களாதேஷ் சிம்பாவேயுடன் 150 இக்கும் அதிகமான விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார் (வோன் 50 க்கும் குறைவான விக்கட்டுகள் ) மற்றும் ஷேன்வார்னை பொறுத்தவரை மக்ராத் பிரட்லீ கிலேப்சி ஆகியோர் விக்கட்டுகள் அள்ளிய பிறகே பந்து வீச சந்தர்ப்பம் கிடைக்கும்க் முரளிக்கு வாஸ் தவிர வேறு சிறந்த பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதும் சாதகமானதே. ஷேன் வோர்ன் அதேபோல் வார்னும் ஸ்பினெர்ஸுக்கு சிறப்பாக ஆடும் இந்திய பாகிஸ்தானுடன் முரளியைவிட குறைவான விக்கெட்டுகளையே பெற்றுள்ளார் .மற்றும் ஸ்பினெர்ஸுக்கு ஆடவராத தென்அபிரிக்க, இங்கிலாந்து, நியூசிலாந்து அகியநாடுகளுடன் அதிகமான போட்டிகளில் ஆடி அதிகமான விக்கட்டுகளை பெற்றுள்ளார் . ஆக இருவரும் வேறுபட்ட சம திறன் படைத்தவர்களே. வாசீம் அகரம் எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் முரளி, வோர்ன் இருந்தார்களோ அதைப்போலவே ஒருநாள் ஆட்டங்களில் முரளி , வாசிம் அகரம். இருவரும் சிறந்த வீரர்களே .எக்கானமி , அவரேஜ் , விக்கட் என அனைத்திலும் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல.முரளி எப்படி தூஸ்ராவில் புலியோ வாசிம் அகரம் ரிவர்ஸுவிங்கில் புலி. ஆனால் மொத்தமாக பௌலிங் என்று பர்க்கப்போனால் டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலும் உச்ச ஆதிக்கம் செலுத்துவது முரளி மட்டுமே. ஆக கிரிக்கெட்டின் தலை சிறந்த பந்துவீச்சாளர் முரளிதான் என்பதில் சந்தேகமில்லை லாரா பேட்டிங் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரட்மன் ஒப்பீட்டுக்கப்பாபற்ட்ட பற்ஸ்மனாக இருப்பதால் அடுத்தநிலையில் சச்சின், லாரா, பாண்டிங் மூவருக்குமிடையே போட்டி உள்ளது. லாரா தலைசிறந்த பற்ஸ்மன் இதில் மாற்றுக்கருத்து இல்லை அனால் சென் ஜோன்சில் அடித்த 400 ரன்ஸ் தவிர லாராவின் கரியர் மற்ற இருவருடன் பார்க்கும்போது குறைவாகவே உள்ளது .மீதி இருவரில் சச்சின் முன்னணியில் இருந்தாலும் தற்போதைய போம்,வயது,அவரேஜ் என்பவற்றை பார்க்கும் போது பாண்டிங் நிச்சயம் சச்சினுக்கு போட்டிக்கு நிற்பார். சனத் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை சச்சின் எட்ட முடியாத உயரத்தில் உள்ளார் விவ்வியன் ரிச்செட்ஸ் , சனத், லாரா ,அன்வர், கங்குலி , பாண்டிங் என காலத்துக்கு காலம் பலர் சச்சினுக்கு போட்டியாக இருந்திருப்பினும் யாரும் சச்சினை நெருங்க முடியவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரர் சச்சின் என்பதில் மாற்றுகருத்தில்லை. கலிஸ் சகலதுறைவீரர்களென்று பார்த்தால் ஒரு நாள் போட்டிகளில் சனத்தும் கலிசும் சிறப்பான தகமைகளை கொண்டிருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் கலிசளவிற்கு சனத்தின் பெறுபேறுகள் இல்லை. ஜாக் கலிஸ் 20 ,௦௦௦௦௦௦ ௦௦௦000 ரன்ஸ் மற்றும் 500 விக்கட்டுகளை இரண்டு வகையான போட்டிகளிலும் சேர்த்து பெற்றுள்ளார் உண்மையிலேயே கலிஸ் தான் பெஸ்ட் கிரிக்கெட்டர். ஆனால் அனைவரது பார்வையிலும் ஒரு பற்ஸ்மன் அல்லது ஒரு பௌலர் தான் பெரிதாக கணிக்கப்படுகின்றார். ஒரு ஆல் ரௌண்டர் பெரிதாக தெரிவதில்லை . இது தான் உண்மை இங்கு நாம் ப்லேயர்சின் கரியர் அடிப்படையிலேயே தான் வீரர்களை கணித்துள்ளோம் சிறந்த வீரர்களுக்கு நல்ல கரியர் இல்லாதிருப்பதும் உண்டு உதாரணமாக அரவிந்த டி சில்வா , நதன் அஸ்ரில்,டேமியன் மார்ட்டின் என சொல்லிக்கொண்டே போகலாம். பொண்டிங் யார் பெஸ்ட் பற்ஸ்மன் என்று பார்ப்போமானால் கிரிக்கெட்டில் பல சிறந்த பற்ஸ்மன்கள் இருந்தாலும் ஒருநாள் டெஸ்ட் என இரு துறையிலும் உச்ச திறனை வெளிப்படுத்திய, வெளிப்படுத்திகொண்டிருக்கும் சச்சினே வரலாற்றின் தலை சிறந்த பற்ஸ்மன் என்றால் மிகையாகாது. இதனை ஒவ்வொரு வீரர்களுக்கும் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து அவர்களது கரியர் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் சரி இப்ப சச்சினா முரளியா கிரிக்கெட்டின் தலைசிறந்தவீரர் என்று பார்த்தால் இருவருமே தத்தமது துறையில் உச்சத்தில் உள்ள வீரர்கள். ஒருவர் பௌலர் மற்றயவர் பற்ஸ்மன் இரண்டுமே கிரிக்கெட்டின் இரு கண்கள் என்னசெய்வது முதலில் பொவ்ல்ர்ஸுக்கா பற்ஸ்மனுக்கா கிரிக்கெட் விளையாடுவது சற்று கடினம் என்று பார்ப்போம். ஒரு பௌலருக்கு கடைசியாக வரும் 4 பற்ஸ்மனது விக்கட்டும் ஓவரு இனிங்சிலும் வீழ்த்த சந்தர்ப்பம் வரும் ஆனால் பற்ஸ்மனுக்கு எதிரணியிலுள்ள 4 சிறந்த பந்து வீச்சாளர்களை அதிகமாக் சந்திக்க வேண்டியிருக்கும். பற்ஸ்மன் ஒரு பந்து தவறு செய்துவிட்டால் கதைசரி, ஆனால் பௌலேர்ஸ் எத்தனை தவறுவிட்டாலும் ஒரு நல்ல பந்தில் விக்கட் வரும், ஏன் பல சமயம் தவறான பந்துகளுக்கும் விக்கட் வருவதுண்டு. அண்ட பிரசர் ஒரு பற்ஸ்மன் கண்டபாட்டுக்கு அடிச்சாதான் ஒரு பௌலருக்கு வரும் ஆனால் பற்ஸ்மனுக்கு மற்றபக்கம் நிக்கிற பற்ஸ்மன் அவுட் ஆனாலே அண்ட பிரசர் அதிகமாகும். பௌலருக்கு 10 வீரர்களும் அணித்தலைவரும் களத்தில் துணையாக இருப்பர். பற்ஸ்மன் ஒரே ஒரு நொன் ஸ்ரைக்கருடன் மட்டுமே களத்தில் நிற்கவேண்டும். ஒரு பௌலர் பந்துவீசும்போது எந்த தடையுமில்லை அனால் பற்ஸ்மன் ஓவரு ரன்சும் 10 வீரர்களை தாண்டித்தான் பெறவேண்டும். சச்சின் ஆகமொத்ததில் ஒரு பற்ஸ்மனுக்கே பௌலரை விட சவால்கள் அதிகம் என்பது தெளிவாக தெரிகிறது. மற்றும் போலிங்க்கை விட பற்டிங்கையே மக்களும் அதிகளவில் விரும்பி பார்க்கின்றனர்.ஐந்து விக்கட்டுக்கு ஒரு செஞ்சுரி சமம் என்று கூறினாலும் ஒரு செஞ்சுரிக்கு இருக்கும் மதிப்பு ஐந்து விக்கெட் எடுக்கும் பௌலருக்கு இருப்பதில்லை,இது தான் உண்மை.எனவேதான் முரளி தலைசிறந்த வீரராக இருப்பினும் மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் சச்சினே கிரிக்கெட்டின் வரலாற்றின் தலை சிறந்த வீ்ரர் என்பது எமது கருத்து. சத்தியமா நான் ஒரு இந்திய, சச்சின் ரசிகன் அல்ல,இது அதிகமானவர்களுக்கு தெரிந்திருக்கும். உங்களது கருத்துக்களை பின்னூட்டல் மூலமாக தெரியப்படுத்துங்கள்.

20 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...

Sachin is Great

சீனு said...

//கிரிக்கெட் வரலாற்றின் தலை சிறந்த வீரர் யார்?//

வேற யாரு? நம்ம தலீவரு தான்...

Unknown said...

உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு !!!!!!!!!!!

arun said...

Nice article..
If cricket is religion sachin is "God"..
:-)..

Unknown said...

கொஞ்சம் அல்ல நிறையவே பிந்தியிருக்கிறேன்....

என்றாலும் சில கருத்துக்கள்...

முரளி சிம்பாப்வே, பங்களாதேஷ் இற்கு எதிராக 150 விக்கட்டுகளை எடுத்தநிலையில் வோண் 50 மட்டுமே எடுத்திருக்கிறார் என்கிறீர்கள். சரி...
இந்த இரண்டு அணிகளுடனான போட்டிகளில் இருவரையும் ஒப்பிட்டால் முரளி தான் முன்னிலையில் இருப்பார். சிம்பாப்வே இற்று எதிராக வோணால் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியவில்லை என்பது அவரது திறமையல்ல.

முரளி சழற்பந்துவீச்சுக்கு எதிரான ஆடுகளங்களில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்கிறார் என்கிறீர்கள். ஆனால் இந்தியாவில் முரளி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.

ஆனால் வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் ஆதரவளிக்கும் இங்கிலாந்து மைதானங்களில் முரளி போட்டு வாங்கியிருப்பார்.

வோணை விட முரளி சிறந்த பந்துவீச்சாளர் தான்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் தலைசிறந்த கிறிக்கெற் வீரர் என்று தலைப்பிட்டிருக்கிறீர்கள்.
அதனால் சரியான தெரிவு சனத்.

சச்சின் 16000 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறார்.

ஆனால் சனத் 12000 ஓட்டங்களும் 300 அல்லது 350 விக்கட்டுகளைக் கைப்பற்றி இருக்கிறார்.

ஒருநாள் போட்டிகள் விளையாடப்படும் முறையினையே மாற்றி அமைத்த பெருமை சனத்தையே சாரும்.

கிறிக்கெற் வீரர் என்றால் அது சனத்தே....

(துடுப்பாட்ட வீரர் என்றால் அதில் சனத் வரமாட்டார். சோகமான விடயம் சச்சினும் வரமாட்டார்.)

அ.ஜீவதர்ஷன் said...

கனககோபி

//முரளி சிம்பாப்வே, பங்களாதேஷ் இற்கு எதிராக 150 விக்கட்டுகளை எடுத்தநிலையில் வோண் 50 மட்டுமே எடுத்திருக்கிறார் என்கிறீர்கள். சரி...
இந்த இரண்டு அணிகளுடனான போட்டிகளில் இருவரையும் ஒப்பிட்டால் முரளி தான் முன்னிலையில் இருப்பார். சிம்பாப்வே இற்று எதிராக வோணால் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியவில்லை என்பது அவரது திறமையல்ல//

வோன் இந்த இரு அணிகளுடனும் அதிக விக்கட்டுகள் எடுக்காததற்கு காரணம் ஆஸ்திரேலியா இந்த இரு அணிகளுடனும் அதிக போட்டிகள் விளையாடாததே அன்றி வோனின் திறமை குறைவில்லை

வோன் வெறும் மூன்று போட்டிகளில்தான் ஜிம்பாவேயுடனும் பங்களாதேசுடனும் விளையாட சந்தர்ப்பம்கிடைத்தது, அந்த மூன்று போட்டிகளில் வோன் 17 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார்,ஆனால் முரளி 25 போட்டிகள்ளி இந்த இரு நாடுகளுடனும் 176 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

அ.ஜீவதர்ஷன் said...

கனககோபி

//முரளி சழற்பந்துவீச்சுக்கு எதிரான ஆடுகளங்களில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்கிறார் என்கிறீர்கள். ஆனால் இந்தியாவில் முரளி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.//

எதிரான அல்ல சாதகமான, இந்தியா மட்டும் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல,ஆசிய ஆடுகளங்களில் 90 % ஆனவை சுழல் பந்து வீச்சுக்கு சாதகமானவையே. அந்தவகையில் முரளி சுழல் பந்துக்கு சாதகமான ஆசிய ஆடுகளங்களில் 95 போட்டிகளில் 600 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார். வோன் வெறும் 25 போட்டிகளில் 127 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார். இருவரும் இந்தியாவில் சம அளவான விக்கட்டுகளை வீழ்த்தியிருப்பது(அவர்களின் திறமைக்கு குறைவான )வோன்,முரளி உள்ள அணிகள் அதாவது ஆஸ்திரேலியா ,ஸ்ரீலங்கா போன்ற அணிகள் வரும்போது இந்திய ஆடுகளங்கள் வெறும் களிமண் தரயாகவே இருக்கும், இதற்கு இந்திய ஆடுகள பராமரிப்பாளர்கள்தான் பொறுப்பாகமுடியும்.

அ.ஜீவதர்ஷன் said...

கனககோபி

//ஆனால் வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் ஆதரவளிக்கும் இங்கிலாந்து மைதானங்களில் முரளி போட்டு வாங்கியிருப்பார்.//


மீண்டும் தவறானகூற்று, இங்கிலாந்து ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் தென்னாபிரிக்கா,மேற்கிந்தியா,நியூசிலாந்து ஆடுகளங்கள் போல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டும் சாதகமானதல்ல, சுழல்பந்தும் இந்த இரண்டு நாட்டு ஆடுகளங்களில் நன்கு எடுபடும்,குறிப்பாக இங்கிலாந்து ஓவல்,ஆஸ்திரேலியாவின் அடிலயிட் ,சிட்னி என்பன சுழல்பந்து வீச்சுக்கு நன்கு சாதகமானவை.

இங்கிலாந்தில் சுழல் பந்து வீச்சாளர்களின் பெறுதி

வோன் 22 போட்டிகளில் 129 விக்கட்டுகள்,கிப்ஸ் 16 போட்டிகளில் 62 விக்கட்டுகள்,முரளி 6 போட்டிகளில் 48 விக்கட்டுகள்,கும்ளே 10 போட்டிகளில் 46 விக்கட்டுகள்,முஸ்தாக் 8 போட்டிகளில் 32 விக்கட்டுகள்.

இவர்கள் அனைவரும் தமது கரியரில் ஒரு போட்டியில் சராசரியாக பெறும் விக்கட்டுகளை விட அதிகமாகவே இங்கிலாந்தில் பெற்றுள்ளனர்,முரளி குறிப்பாக ஓவல் மைதானத்தில்(உலகில் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஒன்று ) இரண்டு போட்டிகளில் 27 விக்கட்டுகளை வீழ்த்தியதாலேயே ஒரு போட்டிக்கு 8 விக்கட்டுகள் வீதம் பெற்றுள்ளார்

அ.ஜீவதர்ஷன் said...

கனககோபி

//ஆனால் பிரச்சினை என்னவென்றால் தலைசிறந்த கிறிக்கெற் வீரர் என்று தலைப்பிட்டிருக்கிறீர்கள்.
அதனால் சரியான தெரிவு சனத்.

சச்சின் 16000 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறார்.

ஆனால் சனத் 12000 ஓட்டங்களும் 300 அல்லது 350 விக்கட்டுகளைக் கைப்பற்றி இருக்கிறார்.

ஒருநாள் போட்டிகள் விளையாடப்படும் முறையினையே மாற்றி அமைத்த பெருமை சனத்தையே சாரும்.

கிறிக்கெற் வீரர் என்றால் அது சனத்தே....//


மீண்டும் தவறு, நீங்கள் ஒருநாள் போட்டியை மட்டுமே கணக்கில் சேர்த்துள்ளீர்கள், டெஸ்ட் போட்டிகளை மறந்து விட்டீர்கள், அப்படி பார்த்தால் காலிஸ்தான் best cricketer in the cricket history. அப்படி இருந்தும் ஏன் சச்சின் கிரிக்கட்டின் தலை சிறந்த வீரர் என்றால் பொதுவாக ஒரு துடுப்பாட்டவீரருக்கோ பந்து வீச்சாளருக்கோ தரும் முன்னுரிமை சகலதுறை வீரருக்கு கிடைப்பதில்லை,இது இன்று நேற்றல்ல,இம்ரான்,ஹட்லி,போத்தம் காலத்திலிருந்தே வரும் மரபு. இதற்கான காரணத்தை நான் பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் உங்களுக்காக மீண்டும் இதோ

**
சகலதுறைவீரர்களென்று பார்த்தால் ஒரு நாள் போட்டிகளில் சனத்தும் கலிசும் சிறப்பான தகமைகளை கொண்டிருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் கலிசளவிற்கு சனத்தின் பெறுபேறுகள் இல்லை. ஜாக் கலிஸ் 20,௦௦௦௦000 ரன்ஸ் மற்றும் 500 விக்கட்டுகளை இரண்டு வகையான போட்டிகளிலும் சேர்த்து பெற்றுள்ளார் உண்மையிலேயே கலிஸ் தான் பெஸ்ட் கிரிக்கெட்டர். ஆனால் அனைவரது பார்வையிலும் ஒரு பற்ஸ்மன் அல்லது ஒரு பௌலர் தான் பெரிதாக கணிக்கப்படுகின்றார். ஒரு ஆல் ரௌண்டர் பெரிதாக தெரிவதில்லை . இதுதான் உண்மை.
**

அ.ஜீவதர்ஷன் said...

கனககோபி


//(துடுப்பாட்ட வீரர் என்றால் அதில் சனத் வரமாட்டார். சோகமான விடயம் சச்சினும் வரமாட்டார்.)//

நீங்கள் சச்சினை சிறந்த batsman இல்லை என்று கூறுவதற்குஅவர் match winner இல்லை என்பதே காரணம் என்று நின்னைக்கிறேன்.சச்சின் match winner இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஒரு batsman ஆல் மட்டும் match சை வெல்லமுடியாது,வெற்றி என்பது அணியின் ஏனைய வீரர்களிடமும் தங்கயுள்ளது, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு சிறப்பான பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் இல்லாமையும் ஆஸ்திரேலியாவில் இருந்தமையுமே பொண்டிங் சச்சினை விட அதிகமான வென்ற போட்டிகளில் ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் முன்னுக்கிருப்பதற்கு காரணம்.தோல்வியடைந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டம் குவித்தவர் பிரையின் லாராதான் என்பது உங்களுக்கு தெரியுமா?

மற்றும் சச்சின் எல்லாநாட்டுடனும் எல்லாநாட்டு ஆடுகளங்களிலும் சாதித்தவீரர், மற்றும் உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளர்களான வோல்ஸ்,அம்புரூஸ்,டொனால்ட்,அகரம்,இம்ரான்,ஹட்லி போன்றோர் ஒய்வு பெறும் வரை சச்சின்,லாரா தவிர வேறு தற்போதுள்ள எந்த வீரரும் 50க்கு மேல் சராசரி வைத்திருக்கவில்லை.(பாண்டிங்கிற்கு 2000௦௦௦ ஆம் ஆண்டு வரை சராசரி 38),மற்றும் 86 SR இல் 45 சராசரியில் ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்களை குவிக்கும் ஒருவீரரை சச்சினை தவிர வேறொருவரை உங்களால் காட்ட முடிமா?சச்சின் இறுதிவரை போட்டியை கொண்டு செல்பவர் இல்லைதான், எல்லாமே சச்சின் செய்வதென்றால் மற்றவர்களுக்கு என்ன வேலை? மற்றும் match winner இல்லாத ஒருவர் எப்படி ஒருநாள் போட்டிகளில் 60 ௦ ஆட்டநாயகன் விருது வாங்கமுடியும்?(தோல்வியடைந்த போட்டிகளில் 5 இற்கும் குறைவான விருதுகளே பெற்றுள்ளார்).

Unknown said...

அதையே தான் நான் சொல்கிறேன்....

3 போட்டிகளில் 17 பெரிதா 25 போட்டிகளில் 176 பெரிதா?

அதைத் தான் ஒப்பிடச் சொன்னேன்....

'சழற்பந்துக்கு எதிரைன ஆடுகளங்கள் என்பது தவறாக தட்டச்சப்பட்டது. சுழற்பந்துக்கு ஆதரவானது என்பது தான் சரியான சொல்.

இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துக்கு சாதகமானவை என்று சொல்லக் காரணம் அவை நன்றாக காய்ந்தவை.
ஆனால் இந்திய மண்ணில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை விட மற்ற நாட்டு வீரர்கள் பிரகாசித்த வரலாறு குறைவு.


இங்கிலாந்தை வேகப்பந்துக்கு சாதகமான என்று கூறிய விடயம் அதன் ஆடுகளங்களில் இருக்கும் புல் மற்றும் அவர்களின் காலநிலை.
அங்கே சுழற்பந்துவீச்சுச் செய்து இலக்குக் கைப்பற்றுவது என்பது சாதாரணமானது அல்ல.

Unknown said...

ஷேன் வோண் அதிக இலக்குகளை கைப்பற்றக் காரணம் ஆஷஷ் தொடரில் அதிக பச்சைத் தன்மையான அல்லது புற்தன்மையான ஆடுகளங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
ஆஷஷ் தொடரில் காய்ந்த ஆடுகளங்களை கூடுதலாக பயன்படுத்துவார்கள்.
ஆனால் சாதாரண தொடர்களில் அந்தளவுக்கு காய்ந்த ஆடுகளங்களை பயன்படுத்துவது குறைவு.
அதனால் தான் முரளியை ஒப்பிட்டுசு் சொன்னேன்.

நான் ஒருநாள் போட்டிகளை கருத்திற்கொண்டது தவறு தான்...

ரெஸ்ற் போட்டிகள் என்றால் சனத்தைக் கருத்திற் கொள்ளவே முடியாது.
ஒட்டுமொத்தமாக நீங்கள் சேர் டொன் பிரட்மனை எவ்வாறு தவறவிட்டீர்கள்?

ஒட்டுமாத்தமாக பிரட்மனை மிஞ்ச யாருமே இல்லையே...?


சச்சினை நான் சொல்லாததற்றுக் காரணம் அவரின் போட்டி வெல்லும் திறமை பற்றி அல்ல...

ஒருநாள் போட்டிகளில் சேர்.விவியன் றிச்சட்ஸை தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக கருதுகிறேன்.
றிச்சட்ஸையும், சேர் ஹரி சோபர்ஸையும் நீங்கள் தவறவிட்டிருக்கிறீர்கள்....

இவர்களை பெரிதாக மதிக்கக் காரணம் இவர்கள் விளையாடிய காலத்தில் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்... முழுப் பச்சையாக இருக்குமாம்.
அப்படிப்பட்ட ஆடுகளங்களில் பெரிதாக பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஆடி இவர்கள் பெற்ற ஓட்டங்களை இவர்களின் தரவுகளில் பார்த்தால் புரியும்.
அதனால் தான் இவர்களின் ஓட்டங்கள் தற்போதைய பெரும்பாலும் தட்டையான ஆடுகளங்களில் சச்சின் பெற்ற ஓட்டங்களை விட பெறுமதியானது என்பேன்.

வேண்டுமானால் நவீன கிறிக்கெற்றின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராக சச்சினை தாராளமாக, கட்டாயமாக சொல்லலாம்...

கலிஸ் ஓய்வுபெறும் போது கலிஸின் சாதனைகள் மதிக்கப்படும் பாருங்கள்...
அண்மையில கூட கெவின் பீற்றர்ஸ்ன கலிஸை உலகில் தோன்றிய மிகச்சிறந்த கிறிக்கெற் வீரர் என்று விளித்திருந்தார்.

அ.ஜீவதர்ஷன் said...

கனககோபி

//ஷேன் வோண் அதிக இலக்குகளை கைப்பற்றக் காரணம் ஆஷஷ் தொடரில் அதிக பச்சைத் தன்மையான அல்லது புற்தன்மையான ஆடுகளங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
ஆஷஷ் தொடரில் காய்ந்த ஆடுகளங்களை கூடுதலாக பயன்படுத்துவார்கள்.
ஆனால் சாதாரண தொடர்களில் அந்தளவுக்கு காய்ந்த ஆடுகளங்களை பயன்படுத்துவது குறைவு.
அதனால் தான் முரளியை ஒப்பிட்டுசு் சொன்னேன்.//

உங்களுக்கு ஒருவிடயம் தெரியுமா காய்ந்த தரைகளில் மட்டும்தான் சுழல் பந்து எடுபடும் என்றில்லை, பச்சை ஆடுகளங்களான இந்தியாவின் டெல்லி,ஆஸ்திரேலியாவின் அடிலயிட், இங்கிலாந்தின் ஓவல் என்பன சுழல் பந்து வீச்சுக்கு சாதகமானது , மற்றும் ஆசஸ் தொடரில் காய்ந்த ஆடுகளங்கள் வோனுக்கு சாதகமென்றால் மக்ராத்,பிளின்டோப்,காடிக்,கொகாட் எப்படி ஆசஸில் விக்கட்டுகளை சரித்தார்கள்?

அ.ஜீவதர்ஷன் said...

கனககோபி

//ஒட்டுமொத்தமாக நீங்கள் சேர் டொன் பிரட்மனை எவ்வாறு தவறவிட்டீர்கள்?

ஒருநாள் போட்டிகளில் சேர்.விவியன் றிச்சட்ஸை தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக கருதுகிறேன்.
றிச்சட்ஸையும், சேர் ஹரி சோபர்ஸையும் நீங்கள் தவறவிட்டிருக்கிறீர்கள்....

இவர்களை பெரிதாக மதிக்கக் காரணம் இவர்கள் விளையாடிய காலத்தில் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்... முழுப் பச்சையாக இருக்குமாம்.
அப்படிப்பட்ட ஆடுகளங்களில் பெரிதாக பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஆடி இவர்கள் பெற்ற ஓட்டங்களை இவர்களின் தரவுகளில் பார்த்தால் புரியும்.//


நீங்கள் முதலில் கட்டுரையை முழுமையாக வாசிங்கள்,அதிலே பிரட்மன், விவியன் ரிச்சட்ஸ் என்பவர்களை கவனத்தில் எடுத்துகொண்டது தெரியும், பிரட்மன், சோபஸ் டெஸ்ட் போட்டிகளிலும் ,ரிச்சர்ட்ஸ் ஒருநாள் போட்டிகளிலும் மட்டும் பிரகாசித்துல்லார்கள் ,(பிரட்மன் காலத்தில் ஒருநாள் போட்டிகள் இல்லாததால் ஒட்டு மொத்த கிரிக்கெட்டின் சிறந்த வீரராக கணிக்க முடியாது. 1970 ,1980 களில் முழுமையாக பச்சையான ஆடுகளங்கள் என்பது தவறு, அப்போதும் மேற்கிந்தியா தவிர ஏனைய நாடுகளின் ஆடுகளங்கள் மட்டையாகதான் இருந்தவை(star sports இல் வரும் பழைய ஆட்டங்களை பாருங்கள் தெரியும்),பச்சை ஆடுகளங்களில் ஓட்டம் குவிப்பது மற்ற நாட்டு வீரர்களுக்குத்தான் சிரமம், ஏனெனின் வேகப்பந்தினால் உலகை அடக்கிய மேற்கிந்திய பந்து வீச்சாளர்களை சோபசும் , ரிச்சர்ட்சும் சந்திக்கவில்லையே)

பாதுகாப்பு அணிகலன்கள் இல்லை என்பது தவறு, ரிச்சட்ஸ் அணியவில்லை என்பதே சரி.

அ.ஜீவதர்ஷன் said...

கனககோபி

//கலிஸ் ஓய்வுபெறும் போது கலிஸின் சாதனைகள் மதிக்கப்படும் பாருங்கள்...
அண்மையில கூட கெவின் பீற்றர்ஸ்ன கலிஸை உலகில் தோன்றிய மிகச்சிறந்த கிறிக்கெற் வீரர் என்று விளித்திருந்தார்.


3 போட்டிகளில் 17 பெரிதா 25 போட்டிகளில் 176 பெரிதா? //


கலிஸ் தான் best cricketer of the cricket history என்றும் அவர் கவனிக்கப்படவில்லை என்றும் நான் முதலே குறிப்பிட்டுவிட்டேன்.

எனது பதிவில் உள்ளது, முரளிக்கு பலம் குறைந்த ஜிம்பாவே , பங்களாதேஷ் அணிகளுடன் அதிக போட்டிகள் விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்ததால் வோனை விட அதிக விக்கட்டுகள் பெறகாரணம் என்று,நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

அ.ஜீவதர்ஷன் said...

கனககோபி

//இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துக்கு சாதகமானவை என்று சொல்லக் காரணம் அவை நன்றாக காய்ந்தவை.
ஆனால் இந்திய மண்ணில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை விட மற்ற நாட்டு வீரர்கள் பிரகாசித்த வரலாறு குறைவு.

இங்கிலாந்தை வேகப்பந்துக்கு சாதகமான என்று கூறிய விடயம் அதன் ஆடுகளங்களில் இருக்கும் புல் மற்றும் அவர்களின் காலநிலை.
அங்கே சுழற்பந்துவீச்சுச் செய்து இலக்குக் கைப்பற்றுவது என்பது சாதாரணமானது அல்ல//

இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் சாதித்ததை காட்டிலும் ஏனைய நாட்டு வீரர்கள் இந்தியாவில் சாதிக்காததர்க்கு காரணம் ,அவர்கள் சுழல் பந்துக்கு சிறப்பாக ஆடும் இந்தியாவுடன் ஆடியதே அன்றி திறமை குறைவல்ல, மற்றும் தென்னாபிரிக்க,இங்கிலாந்து,நியூசிலாந்து,மேற்கிந்தியதீவுகள் வரும்போது முழுக்க முழுக்க சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் போடப்படுவது உலகறிந்த விடயம்.

உங்களுக்கு இங்கிலாந்து ஆடுகளங்களை பற்றி சரியாக தெரியாததற்கு எனது வருத்தங்கள்,இங்கிலாந்தில் புற்கள் உள்ள ஆடுகளங்கள் மிக குறைவு, தற்போது எட்ஜ்பாஸ்டன் தவிர எந்த ஆடுகளங்களும் வேகப்பந்து வீச்சுக்கு மட்டும் சாதகமானதல்ல, இங்கிலாந்தில் வேகப்பந்து சுழல்பந்தை விட அதிகம் எடுபடலாம், ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கும்(இருவருக்கும்) சாதகமான ஆடுகளங்கள் இங்கிலாந்து,ஆஸ்திரேலியாவிலேயே அதிகம் உள்ளது , கடந்தகால தரவுகளையும் இனிவரும் காலங்களில் ஆட்டங்களையும் அவதானித்து பாருங்கள் தெரியும்.

haran said...

where is SIR Donald Bradman
world best test all rounder Sir Garfield Sobers
Best ODI Batsman Sir Vivian Richards

அ.ஜீவதர்ஷன் said...

haran

//where is SIR Donald Bradman//

பதிவை முழுமையாக படியுங்கள்,அதில் எதற்காக பிரட்மனை கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த வீரராக கருதவில்லை என்ற காரணம் இருக்கிறது. உங்களுக்காக இதோ மீண்டும் 'பேட்டிங் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரட்மன் ஒப்பீட்டுக்கப்பாபற்ட்ட பற்ஸ்மனாக இருப்பதால் அடுத்தநிலையில் சச்சின், லாரா, பாண்டிங் மூவருக்குமிடையே போட்டி உள்ளது. ' அனால் பிரட்மன் ஒருநாள் போட்டிகளில் விளையாடாததால் அவரை போட்டியில் சேர்க்க முடியவில்லை

//world best test all rounder Sir Garfield Sobers//


நிச்சயமாக , ஆனால் ஒருநாள் போட்டிகளில்? வரலாற்றின் சிறந்த வீரராக இவரை எப்படி கருத முடியும்?.


//Best ODI Batsman Sir Vivian Richards//

இதில் எனக்கு உடன்பாடில்லை, இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் இவரது ஆளுமை போதாது என்பதை மறுக்க முடியாது.

priyamudanprabu said...

தல போல வருமா

அ.ஜீவதர்ஷன் said...

பிரியமுடன் பிரபு
//தல போல வருமா//

):

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)