Friday, October 30, 2009

நடிகர்களின் தயவை நாடும் கலைஞர்?

அண்மைக்காலமாகேவே கருணாநிதி அதிகமாக நடிகர்களையும் நடிகர் சங்கத்தினரையும் தன் பக்கம் சாய்ப்பதற்கு அதீத முயற்ச்சி எடுத்து வருகின்றார். நடிகைகளின் விபச்சார செய்திகளுக்காக பத்திரிகையாளரை கைது செய்தது முதல் இன்று சரத்குமாரின் பழஸிராஜா திரைப்பட சிறப்பு காட்சி பார்த்தது வரை நிறைய சம்பவங்கள்.இது அவர் தன்மீதும் தன்கட்சி மீதும் வைத்துள்ள அவநம்பிக்கையையே காட்டுகிறது. சிலகாலமாகவே சுப்பர் ஸ்டார் ரஜினியின் அருகிலேயே அனைத்து பொது நிகழ்வுகளிலும் காணப்படுகின்றார். ரஜினியைப்பற்றி புகழ்ந்து தள்ளுகின்றார். இதன்மூலம் ரஜினியை தன் அன்பு வலையில் விழவைத்து எதிகாலத்தில் அரசியலில் இறங்காமல் ஸ்டாலினை பாதுகாப்பதற்காகவோ? அல்லது அரசியல் ஒரு சாக்கடை தம்பி நீ இமயமலைக்கே போ என்று ரஜினிக்கு உணர்த்தவா? இப்ப கடைசியாக சரத்குமார்; முன்னாள் தி.மு.கா உறுப்பினரான இவர் கடந்த பொதுத்தேர்தலில் தனது மனைவி? ராதிகா சகிதம் ஜெயலலிதாவின் காலில் போய் விழுந்தவர். பின்னர் விஜயகாந்த்தை பார்த்து தனிக்கட்சி தொடக்கி பூசை போட்டுக்கொண்டவர். இவரைப்போய் எதற்கு கருணாநிதி வளைக்கணும்? ஆரம்பத்தில் நடிகர் சங்க சந்திப்பில் சரத்குமார் கருணாநிதியை சந்தித்தபோது சரத்குமார் தான் வலியப்போய் ஒட்டிக்கொள்ள பார்க்கிறாரோ என்று நினைத்தேன் ஆனால் இன்று முடியாத உடல் நிலையிலும் பழஸிராஜா திரைப்பட சிறப்பு காட்சி பார்த்து சரத்குமாரை பாராட்டியது கருணாநிதி சரத்குமாருக்கும் பயப்படுகின்றார் என்றே எண்ணத்தோன்றுகிறது. நடிகர்சங்கத்தை கையில் வைத்திருந்தால் கூப்பிட்டபோதெல்லாம் வந்து தன்னை துதி பாடுவார்கள் என்றோ என்னமோ அவர்கள் வைக்கும் எந்த கோரிக்கையையும் கலைஞர் தட்டுவதில்லை.இதற்காகவே சந்திரசேகரை தூதுவிட்டு ராதாரவியையும் நல்லவிலைக்கு வாங்கிவிட்டார். இதனால் இருவருக்கும் நன்மையே அண்றி மக்களுக்கு? இப்படியே போனால் இனி செந்தில் கோவைசரளா சிம்ரன் என அனைவரது காலிலும் விழுந்தாலும் விழுவார். இவருக்குத்தான் வெட்கம் மானம் என்பதே இல்லையே.இல்லாவிட்டல் எம். ஜி.ஆர் இடம் தொடர்ந்து 3 தடவை தோற்றபின்னரும் 5 முறை முதலமைச்சரகியத்தை பெருமையாய் கூறுவாரா?அந்த ஐந்து முறையில் ஒருமுறை அண்ணா காலமானபோதும் மறுமுறை எம்.ஜி.ஆரின் அதரவோடும் 96 இல் ரஜினியின் ஆதரவோடும் ஜெயித்ததை மறந்து விட்டார் போலும். தான் ஜெயித்த்து கூட ஜெயலலிதாவின் மீது மக்களுக்கிருந்த அதிர்ப்தியால் ஒழிய இவர் மீதிருந்த நம்பிகையாலல்ல. சரி ஏன் தான் இவருக்கு இந்த நடிகர்களின் செல்வாக்கு தேவைப்படுகிறது? தனது காலம் முடியப்போகிறது, தன்னால் இயன்றளவு குடும்பத்திற்கு சொத்து சேர்த்தாகிவிட்டது, பதவிகளும் கொடுத்தாச்சு. ஆனால் தான் இல்லாத காலத்தில் தன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளின் அரசியல் வாழ்க்கையை எவனாவது ஒரு நடிகன் பறித்து விட்டால் என்ன செய்வது? அதுதான் ஒரு நடிகன் பறித்தால் இன்னொரு நடிகன் வாங்கி கொடுக்கமாட்டானா என்ற ஒரு நப்பாசைதான். கருணாநிதி சபாவில் நடத்திய நாடகங்களை விட அரசியலில் நடத்திய நாடகங்கள்தான் அதிகம், இன்று கடைசியாக முல்லைப் பெரியாறு அணை கண்டனக்கூட்டம் வரைக்கும்.ஆனால் சக்கைபோடு போட்டது என்னவோ யுத்தநிறுத்த உண்ணாவிரதமும் எம்.பிக்களின் இலங்கை விஜயமுமே , ஒவ்வொரு தமிழனும் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாடகங்கள். படிப்பறிவுள்ள மக்களுக்கு புரிந்த இந்த நாடகங்கள் வெகு சீக்கிரமே பாமர மக்களுக்கும் புரியும், இது கருணாநிதிக்கு விளங்கியிருக்கும் அதனால்த்தான் இந்த நடிகர்கள் சகவாசம்.போதாக்குறைக்கு உலகத்தமிழ் மகாநாடு...? என்னதான் நடிகர்களையும் நடிகர்சங்கத்தையும் கையில் வைத்திருந்தாலும் பாரதி பாஞ்சாலி சபதத்தில் சொன்னது போல் கலைஞர் அவர்களே.... '' தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கௌவும் தர்மம் மறு படியும் வெல்லும் " "கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் தர்மத்தை அப்போது வெல்லக் காண்பாய் "

4 வாசகர் எண்ணங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

//ஆனால் சக்கைபோடு போட்டது என்னவோ யுத்தநிறுத்த உண்ணாவிரதமும் எம்.பிக்களின் இலங்கை விஜயமுமே , ஒவ்வொரு தமிழனும் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாடகங்கள். படிப்பறிவுள்ள மக்களுக்கு புரிந்த இந்த நாடகங்கள் வெகு சீக்கிரமே பாமர மக்களுக்கும் புரியும், இது கருணாநிதிக்கு விளங்கியிருக்கும் அதனால்த்தான் இந்த நடிகர்கள் சகவாசம்.போதாக்குறைக்கு உலகத்தமிழ் மகாநாடு...? //
நல்ல அரசியல் பார்வை நண்பா..............................
ஆம் தமிழன் உயிரோடு இல்லையாம் எதற்கு மாநாடு ...வெட்க்ககேடு

Anonymous said...

//இன்று முடியாத உடல் நிலையிலும் பழஸிராஜா திரைப்பட சிறப்பு காட்சி பார்த்து சரத்குமாரை பாராட்டியது கருணாநிதி சரத்குமாருக்கும் பயப்படுகின்றார் என்றே எண்ணத்தோன்றுகிறது. //

நிறைய எண்ணத்தோன்றுகிறது

Jacks said...

நல்ல பதிவு. ஆனால் தமிழன் சிந்திப்பான் என்று நான் நம்பவில்லை. இனி வரும் காலத்தில் இன்னும் அதிகமாக நடிகர்கள் பின்னல் ஒரு கூட்டம் இருக்கும். அதற்குதான் இப்போதே நடிகர்களை வளைத்து போடுகிறார்கள்.

அமர்ஹிதூர் said...

"நான்" என்ற சுயநலம் இப்போதுல்ல தமிழர்களின் பண்பு, இது கருணாவுக்கு நல்லாவே தெரியும். என்னதான் மக்கள் பணத்தை கோடி கோடியா கொள்ளை அடிச்சாலும் அந்த பணம் உடன் பிறப்புகளால் கொள்ளை அடிக்கப்படும் என்பதை தெரியாதவர் இந்த கருணா.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)