Wednesday, October 28, 2009

டோனி த மாஸ்....இன்று டோனி 100 ரன்ஸ் அடிச்சதால இந்தப்பதிவை நான் எழுதவில்லை , டோனியைப்பற்றி ஆரம்பம் முதலே எழுதவேண்டுமென்று நினைத்திருந்தது இப்போதுதான் சரியானசந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இங்கு டோனியின் துடுப்பாட்டம் பற்றி மட்டுமே எழுத உள்ளேன். அவரது தலமைத்துவத்தைப்பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை,அந்தவிடயத்தில் எனக்கு டோனியுடன் உடன்பாடு இல்லை.பங்களாதேசில் நடந்த ஒருநாள் தொடரில்த்தான் எனக்கு டோனியைப்பார்த்த ஞாபகம்.அந்த சீரிசில ஒண்டும் பெரிசா டோனி சாதிக்கல.அதுக்கப்புறமா பாகிஸ்தானோட இந்தியாவில நடந்த ஒருநாள் தொடரில டோனி 148 ரன்ஸ் அடிக்கேக்க இந்த மேட்ச் மட்டும்தான் தம்பீட ஆட்டம் இனி இவர் ஒரு மச்சும் அடிக்க மாட்டார் ஏன்னா இவரது பேட்டிங் ஸ்ரையில் ஒரு கிரிக்கெட்டரை போல இல்லை என்று கூறியவர்களில் நானும் ஒருவன்.அதாவது டோனி அடிச்சது குருட்டு லக் என்று அர்த்தம்.


அதுக்கப்புறம் சிலகாலம் நான் டோனியை பெரிதாக அவதானிக்கவில்லை. அந்த இடைவெளியில் டோனி சில அரைச்சதங்களை அடித்திருந்தாலும் பாகிஸ்தானுடன் பாகிஸ்தானில் வைத்து அடித்த ஒரு அரைச்சதம் என்னை டோனியை திரும்ம்பிப்பார்க்க வைத்தது.ஏனெனில் முகமது அஸிவின் மூன்று ஜோக்கர் பந்துகளை சோட்மிட்விக்கட் மிடோன் இடைவெளி ஊடாக அடித்த டோனியின் பவுண்டரிகள் தான் இவன்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கு 'இவன் வேற 'என்று உணர்த்தியது .

அதன்பின்னர் டோனியை தொடர்ந்து அவதானித்தபோது ஒரு விடயம் நன்றாகத்தெரிந்தது டோனி கிரிக்கெட் புக் ஷொட் எதுவும் பெரிதாக விளையாடுவதில்லை , சாதாரண பற்ஸ்மனுக்குள்ள ஸ்ரையில் கூட டோனியிடமில்லை அப்பிடி என்ன தான் டோனி செய்கிறார்? நீங்களே அவதானிச்சுப்பாருங்கள் தெரியும். டோனி வரும் பந்தை கவனமாக அவதானித்து ரைமிங் , ப்லேஸ்மன் என்பவற்றை புத்திசாலித்தனமாக மேற்கொள்ளுவதன் மூலமே அதிகளவு ஓட்டங்களை பெறுகிறார், அந்த ஓட்டங்களை அன் ஓத்தோடக்ஸ் ஏரியா எனப்படும் வகுக்கப்படாத களத்தடுப்பு பகுதிகளுக்கு பந்தை அடித்து பெற்றுக்கொள்வது டோனியின் சிறப்பு. மற்றும் வலதுகை களத்தடுப்பு வீரருக்கு இடதுபுறமும் இடதுகை களத்தடுப்பு வீரருக்கு வலது புறமும் பந்தை அடித்து இரண்டு இரண்டாக நிதானமாகவும் வேகமாகவும் ஓட்டங்களை சேகரிப்பது அருமை, மற்றும் ரன்ஸ் ஓடும் வேகம் மின்னல். மைக்கல் பெவனும் இம்மாதிரி ஓட்டங்கள் குவிப்பதில் பெயர்பெற்றவர்.அவருக்கு பின்னர் டோனிதான் இம்மாதிரி ஓட்டங்களை குவிக்கின்றார்.


உடல்வலு,தன்னம்பிக்கை என்பன ரைமிங் , ப்லேஸ்மன் தவிர டோனியின் ஏனைய பலங்கள் .அதிகளவு புத்திசாலித்தனத்தையும் மனிதர் பயன்படுத்துகிறார். 5000 ஓட்டங்களை 60சராசரிக்கு மேல் பெற்ற மைக்கல் பெவனுக்கு பிறகு 5000 ஓட்டங்களை 50 சராசரிக்கு மேல் பெறப்போவது டோனி மட்டுமே, இது ஒன்றும் சாதாரண விடயமில்லை.


நான் ஒன்றும் டோனியை நல்ல ஸ்ரைலிஷான பற்ஸ்மன் என்றோ புக் ஸ்ரையில் பற்ஸ்மன் என்றோ கூறவில்லை, ஆனால் டோனி ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர். அவர் எடுக்கும் ஒவரு ஓட்டங்களும் பார்ப்பதற்கு சுவாரிசியமாக இருக்கும் அந்த தோசை பிரட்டுவது போன்ற அடியெல்லாம் யாரும் அடிக்க முடியுமா? டோனி அடுத்த பந்தை என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதே அது உண்மையிலேயே ஒரு திரிலிங், நீங்களும் அவதானித்துப்பாருங்கள் தெரிந்து கொள்வீர்கள். ஆக மொத்தத்தில் டோனி கிளாசில்லாவிட்டாலும் மாஸ்.

0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)