Tuesday, October 27, 2009

தப்பா பீல் பண்ணிக்கிட்டாரு நம்ம சூர்யா

ரஜினி கமலுக்கு பிறகு அடுத்த தலைமுறை யார் என்று பேச்சுக்கள் எழுந்த வேளையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பிரஷாந்தான் அடுத்த தலைமுறை நாயகன் என பலராலும் எதிர்வு கூறப்பட்டது. ஆனால் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் விஜய் , அஜித்தின் வளர்ச்சியும் பிரசாந்தின் வீழ்ச்சியும் விஜயும் அஜித்தும்தான் அடுத்த ரஜினி,கமல் என்று கூறுமளவிற்கு இட்டுச்சென்றது. இருவருமே ரஜினி ஆக ஆசைப்பட்டதன் விளைவுதான் விக்ரமின் வருகை.பின்னர் விக்ரமை தொடர்ந்து சூர்யாவின் வருகை. ஆரம்பத்தில் சூரியாவால் மற்ற மூவருடனும் தாக்குபிடிக்க முடியவில்லை.விக்ரம், விஜய், அஜித் மாறி மாறி தங்களுக்குள் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டனர். விஜய் கமெர்சியல் படங்கள் மட்டுமே நடித்து வந்தார். அஜித் கமர்சியல் பாடங்களில் நடிப்பு திறனையும் வெளிக்காட்டி வந்தார்,விக்ரம் நடிப்பிற்கும் கமர்சியலுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து வந்தார் இருவகை படங்களையும் தனித்தனியாக நடித்தார் . சூரியா இரண்டு தோணுயில் கால் வைத்தாலும் கமெர்சியல் அந்தஸ்தை பெற முடியவில்லை. இந்த நால்வரில் நடிப்பாற்றலில் சூர்யா விக்கிரமுக்கு அடுத்து பேசப்பட்டாலும் மாஸ் அந்தஸ்தை 2007 வரை பெற முடியவில்லை. முளுநீள அக்ஸன் படம் எதுக்கும் சூரியாவிற்கு சரிவரவில்லை (ஆறு,ஸ்ரீ) இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த வேல் ஆக்ஸன் படமாக இருந்தாலும் குடும்ப பாங்கான கதைகளத்தை கொண்டிருந்தது. படம் வெற்றி அடைந்த போதும் பெரிய அளவில் வசூலிக்கவில்லை இந்நிலையில் அயன் முளுநீள கமெர்சியல் படமாக வந்து பெரும் வெற்றியை பெற்றது, சண் பிக்ஸர்ஸ் படத்தை வெளியிட்டதால் ஓடியதாக பலரும் கூறினாலும் படத்தின் ரீச் சூரியாவிற்கு கமெர்சியல் அந்தஸ்து கிடைத்து விட்டதாகவே எண்ண தோன்றியது. சூரியாவிற்கு கிடைத்த கமர்சியல் அந்தஸ்தை சூரியா தப்பாக நினைத்து விட்டார் போலுள்ளது அது ஆதவனில் நன்றாக தெரிந்தது. கமெர்சியல் ஹீரோவுக்கும் மாஸ் ஹீரோவுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை. (அனைத்து பொழுதுபோக்கு அம்சமும் நிறைந்த படங்கள் கமெர்சியல் படங்கள், ஹீரோவின் ஹீரோயிசத்தை அதிகமாக நம்பி ஹீரோவை கிட்டத்தட்ட சுப்பர் ஹீரோ ரேஞ்சில் எடுக்கப்படும் படங்கள் மாஸ் படங்கள்) சூரியாவிற்கு மாஸ் அந்தஸ்து இன்னமும் வரவில்லை எனபதே 100% உண்மை அதற்கு ஸ்ரீ ,ஆறு , ஆதவன் படங்கள் எடுத்துக்காட்டு மாஸ் அந்தஸ்தை பொறுத்தவரை இந்த நால்வரில் விஜய் முன்னணியில் உள்ளார். விஜய்க்கு 2000 ஆம் ஆண்டுக்குக்கு பிறகு கிடைத்த வெற்றி படங்கள் அனைத்துமே (கில்லி,திருமலை,திருப்பாச்சி, சிவகாசி,போக்கிரி) மாஸ் ஹீரோவாக நடித்ததில் கிடைத்தவையே, விக்ரம் சேது,காசி,பிதாமகன் என மாறுபட்ட படங்களில் முத்திரை பதித்தாலும் விக்கிரமின் மாஸ் அந்தஸ்தை தில்,தூள்,சாமி,ஜெமினி திரைப்படங்களின் வெற்றிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.அஜித்தை பொறுத்தவரை வரலாறு, அமர்க்களம், பில்லா என நிறைய கமர்சியல் வெற்றிகள் இருந்தாலும் மாஸ் அந்தஸ்தை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்திய தீனாவிற்கு பின்னர் அட்டகாசம் தவிர வேறொரு வெற்றிப்படங்களிலும் மாஸ் ஹீரோவாக அஜித்தை காணமுடியவில்லை. அதேபோல் ஓப்பினிங்கை பொறுத்தவரை அஜித் மற்ற மூவரைவிட முன்னணியில் உள்ளார் இவரை செல்லமாக 'கிங் ஒப் ஓப்பினிங்' , 'கில்லி ஒப் தமிழ் சினிமா' என்றும் அழைப்பதுண்டு, அஜித்திற்கு அடுத்து சாதாரண படங்களுக்கு விஜயும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு விக்கிரமும் ஓப்பினிங்கை பொறுத்தவரை இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர் , சூர்யாவுக்கு பெரியபடங்களுக்கு நல்ல ஒப்பினிங் வந்தாலும் சாதாரண படங்களுக்கு பெரிய அளவில் ஓப்பினிங் வருவதில்லை. ஆனால் தற்போது சூரியாவின் படங்களுக்கான ஒப்பினிங் கணிசமான அளவு அதிகரித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆக இன்றைய காலப்பகுதியில் சூர்யா மற்ற மூவரையும் விட முன்னணியில் இருப்பதனை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். விஜய் கடைசி 3 வருடங்களில் நடித்த 4 படங்களில் போக்கிரி தவிர மற்ற மூன்றும் பிளாப் . அஜித் 2007 முதல் இன்றுவரை 3 வருடங்களில் 4 படங்களில் பில்லா தவிர மற்ரைய படங்கள் தோல்வியடைந்தன ,விக்ரம் கடைசி 41/2 வருடங்களில் நடித்த மூன்று படங்களில் கந்தசாமி தவிர ஏனைய இரண்டும் தோல்விப்படங்களே.(கந்தசாமி ஓரளவு நன்றாக ஓடியதாகிலும் வெற்றிப்படமல்ல ) . சூர்யாவை பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளில் வெளியாகிய 3 படங்களில் வேல் சுப்பர்கிட் ஆகாவிடினும் வெற்றிப்படமாக அமைந்தது. வாரணம் ஆயிரம் சூரியாவிற்கு நல்ல பெயரை தந்ததோடல்லாமல் நகர்ப்புறங்களில் நல்ல வசூலையும் பெற்றுத்தந்தது ஆனால் கிராம புறங்களில் படம் சரியாக போகாததால் வர்த்தக ரீதியாக வெற்றி பெற முடியவில்லை (படத்தை வினயோகம் செய்த தயாநிதி அழகிரியே இதனை ஒப்புக்கொண்டுள்ளார் ) ,ஆனால் அடுத்து வந்த அயன் சிவாஜி , தசாவதாரம் படங்களுக்கு அடுத்து மிகப்பெரும் வசூலை பெற்றது. ஆனால் முதல் மூவரும் உச்சத்தில் இருந்த நேரத்தில் இருந்த அளவிற்கு சூரியா இன்னமும் வளரவில்லை என்பதை ஆதவன் உணர்த்தி உள்ளது, விஜய், விக்ரம் ,அஜித் தமது உச்ச காலங்களில் போட்டியாளர்களின் படங்களுடன் தமது படங்களை வெளியிட்டே தமது வெற்றியை வெளிக்காட்டியிருப்பர் உதாரணமாக (பகவதி,வில்லன்),(திருமலை,ஆஞ்சனேயா,பிதாமகான்)(தூள்,அன்பேசிவம்,வசீகரா),(கில்லி,அருள் ),(சிவகாசி,மஜா),(ஆதி,பரமசிவன்)(போக்கிரி,ஆழ்வார்) அனால் சூர்யா (வேல்,அழகியதமிழ்மகன்) போட்டியில் மட்டுமே இதுவரை ஜெயித்துள்ளார். அங்குகூட தனுசின் பொல்லாதவன் வேலுக்கு இணையாக வசூல் செய்தது தெரிந்ததே. மற்றப்படி சூரியா எந்த ஒரு பண்டிகைக்கும் சக போட்டியாளர்களின் படங்களுடன் போட்டிக்கு படங்கள் வெளியிட்டதே இல்லை என்பது அனைவரும் தெரியும். சூரியா முக்கியமாக கவனம் செலுத்தவேண்டிய விடயம் இரண்டு 1) கமெர்சியல் படங்களுக்கும் மாஸ் படங்களுக்குமான வித்தியாசம் : இதைபற்றி மேலே அலசிவிட்டோம். 2) கெட்டப்புக்கும் நடிப்புக்கும் உள்ள வித்தியாசம் : கமல் பத்து வேஷம் போட்டாரென்பதற்க்காக 20 வேஷம் போடுவதில்லை நடிப்பு ஒவ்வொரு கெட்டப்பிற்கும் உடல்மொழியில் (bodylanguage) வேறுபாடு காட்டவேண்டும், வார்த்தை வெளிப்பாட்டில் (dialog delivery) வேறுபாடு காட்டவேண்டும் என பல நுணுக்கமான விடயங்கள் உள்ளன. விக்ரம் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் படஙகளில் நடித்து ரொம்ப நாளாச்சு, வேறு யாரும் போட்டிக்கு இல்லை, இது தான் சந்தர்ப்பம் என்று வாறபோற படமெல்லாம் கெட்டப் கெட்டப்பா போட்டுத்தள்ளுறாரு நம்ம சூரியா. கெட்டப்தான் நடிப்பு என்றால் நாளை சிபிராஜ் 30 கெட்டப் போட்டால் இண்டஸ்ரியில ஒரு பெரிய நடிகனாகிவிடமுடயுமா? சூரியா கோபமாக நடிக்கும் காட்சிகள் நந்தாவையும் ஸ்ரைலிஷாக வரும் காட்சிகள் கஜினியையும் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றன என்பதை நன்கு அவதானித்தால் தெரியும். முதலில் சூர்யா உடல்மொழி , வார்த்தை வெளிப்பாடு என்பவற்றை முழுவதுமாக கெட்டப்பிற்கு கெட்டப் மாற்றவேண்டும் இல்லாவிட்டால் சூரிய கமலை இல்லை விக்ரமையே நெருங்கமுடியாது. தற்போது சூர்யாவின் நிலை தற்காலிகமான மாயையா? அல்லது சூரியா உண்மையிலேயே விஜய்,விக்ரம்,அஜித்தை ஓவர் டேக் செய்துவிட்டாரா என்பதை நாளை அஜித்தோ , விஜயோ ,விக்ரமோ பண்டிகைகளுக்கு படங்கள் வெளியிடும் நேரம் சூரியா அப்படங்களுடன் போட்டிக்கு படங்களை விட்டு ஜெயிக்கும் பட்சத்தில் தெரிந்துவிடும்.அப்படி சூரியாவால் ஜெயிக்க முடியாது போனால் இப்போது சூரியா இருப்பது அஜித், விக்ரம்,விஜய், இல்லாத தற்கால இடைவெளியில் என்பது வெளிச்சமாகும். சூரியாவால் அப்படங்களுடன் போட்டிபோட்டு ஜெயிக்க முடியுமா என்பதை காலம் பதில் சொல்லும். அதெல்லாம் இருக்கட்டும் இவர்கள் நான்கு பேருக்குள்ளேயே போட்டிபோட்டுகொண்டிருந்தால் எப்போதுதான் ரஜினி,கமலை பிடிப்பது? சரி அவர்களின் உச்சங்களை தொட முடியாவிட்டாலும் பாதி உயரத்தையாவது தொடலாமல்லவா, இவர்களுக்குள் ஒற்றுமை வரும் வரை அது நடக்குமா என்று தெரியல, பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .

19 வாசகர் எண்ணங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல திறனாய்வு

venkat said...

nalla irruku frnd...

Tamilmoviecenter said...

good post

puviharan said...

good one bro!!!!!!!!

aravindhan said...

அஜித் 2007 முதல் இன்றுவரை 3 வருடங்களில் 4 படங்களில் பில்லா தவிர மற்ரைய படங்கள் தோல்வியடைந்தன ,
Kireedom ajith'thirkku nalla peyar thantha padam..
aalwar matrum aegan mattume tholvi padangal..

aravindhan said...

அஜித் 2007 முதல் இன்றுவரை 3 வருடங்களில் 4 படங்களில் பில்லா தவிர மற்ரைய படங்கள் தோல்வியடைந்தன ,
Kireedom ajith'thirkku nalla peyar thantha padam..
aalwar matrum aegan mattume tholvi padangal..

எப்பூடி ... said...

நீங்கள் சொல்வது சரி கிரீடம் அஜித்துக்கு நல்லபெயரை ஏற்படுத்திக்கொடுத்தது உண்மைதான். ஆனால் படத்தின் வசூல் போதுமானதாக இல்லை. ஏகன் வசூலிலும் பார்க்க கிரீடத்தின் வசூல் மிகக்குறைவானது. சென்னை boxoffice நிலவரப்படி கிரீடம் 1.47 கோடி,ஏகன் 3.56 கோடி. கிரீடத்தின் தயாரிப்பு செலவு குறைவானதாக இருப்பினும் அஜித்தின் இமேஜுக்கு இது போதாது.

aravindhan said...

vasool pothumanathaaga illai endraalum kathai reethiyaaga adhu sirantha padame..
adhanai tholvipattiyalil serkka mudiyadhu..athey pola vetri pattiyalilum serkka mudiyadhu..

எப்பூடி ... said...

u are right kireedam is a above average film

sundar said...

dai vikram oru comedy piece avanukku mass.......dai masskku meaning theriyuma ..

எப்பூடி ... said...

sundar

//dai vikram oru comedy piece avanukku mass.......dai masskku meaning theriyuma ..//


முதலில் நீங்க யாரோட ரசிகரோ,அந்த தலைவரின் லட்சணம் உங்க பின்னூட்டத்தில் தெரிகிறது.ஆதவனின் சறுக்கல் உங்கள் கோபத்திற்கு காரணமென்றால் கே.எஸ்.ஆரினை அணுகவும்.மாஸ் என்றால் என்ன என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு தெரியாவிட்டால் தூள்,சாமி,ஜெமினி,தில்.இவற்றில் எதாவது ஒரு படத்தை பார்க்கவும்.வருகைக்கு நன்றி.

Yoganathan.N said...

வணக்கம். உங்கள் பதிவு நல்ல ஒரு அலசல்.
முதலில் நான் ஒரு அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்கிறேன்.

//மாஸ் அந்தஸ்தை பொறுத்தவரை இந்த நால்வரில் விஜய் முன்னணியில் உள்ளார்//
இதை என்னால் ஏற்க முடியவில்லை. அஜித் 'கிங் ஒப் ஓப்பினிங்'என்று சொன்னீர்களே... அப்புறம் எப்படி விஜய்தான் மாஸ் அந்தஸ்த்தில் முதலிடம் வகிப்பார்??? மாஸ் எவ்வளவுக்கு பெரிதாக இருக்கிறதோ, அது 'ஓப்பினிங்கை' பிரதிபலிக்கும், அல்லவா... அஜித் ரசிகன் என்பதால் அவர் தான் மாஸ் அந்தஸ்த்தில் முன்னனியில் இருக்கிறார் என்றும் சொல்ல மாட்டேன்... எனக்கு தெரிந்தவரை, நான் அறிந்தவரை அஜித், விஜய் இருவருமே மாஸ் அந்தஸ்த்தில் சம நிலைதான்.

//ஆனால் அடுத்து வந்த அயன் சிவாஜி , தசாவதாரம் படங்களுக்கு அடுத்து மிகப்பெரும் வசூலை பெற்றது.//
பில்லா என்ற படம் வந்ததே... அதுவும் சிவாஜி, தசாவதாரம் படங்களுக்கு அடுத்து மிகப் பெறிய வசூல் புரிந்த படம்தான். பில்லா, அயன் இரண்டுமே வசூலில் எறக்குறய ஒன்று தான். ஆனால், பில்லா படைத்தின் சாதனையைப் பற்றி யாரும் பேசவில்லை. மீடியாக்களுக்கு கோடி நன்றிகள்.

//அஜித்தை பொறுத்தவரை வரலாறு, அமர்க்களம், பில்லா என நிறைய கமர்சியல் வெற்றிகள் இருந்தாலும் மாஸ் அந்தஸ்தை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்திய தீனாவிற்கு பின்னர் அட்டகாசம் தவிர வேறொரு வெற்றிப்படங்களிலும் மாஸ் ஹீரோவாக அஜித்தை காணமுடியவில்லை.//

வரலாறு, அமர்க்களம் இரண்டுமே கமர்சியல் படங்கள். அட்டகாசம் - இரணுங்கெட்டான் நிலை.
தீனா - மாஸ் தான். பில்லா எப்படி கமர்சியலில் சேர்ந்தது??? பில்லா 'அவுட் & அவுட்' மாஸ் படம்.

//விக்ரம் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் படஙகளில் நடித்து ரொம்ப நாளாச்சு, வேறு யாரும் போட்டிக்கு இல்லை//
'வேறு யாரும் போட்டிக்கு இல்லை'- எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்??? ஒரு சாதாரன, 'அந்த காலக்கட்டத்தில் தமிழில் இன்னுமொரு' நடிகராக இருந்த அஜித், 'கெட்டப்' எல்லாம் இல்லாமல், 'வாலி' எனும் படத்தைக் கொடுத்தார். இன்றய தேதியில் கூட அந்த 'ரோல்'-ஐ சூர்யாவால் செய்ய முடியாது என்று எவரிடமும் சவால் விடுவேன்... வரலாறு, கிரீடம் (இந்தெர்மிஸ்ஸன் & க்லைமக்ஸ்) காட்சிகள் எல்லாம் சூர்யாவால் செய்ய முடியும் என எனக்கு தோனவில்லை.
விக்ரம், சூர்யா இருவரையும் தூக்கி விட்ட படங்கள் அனைத்துமே முதலில் அஜித் நடிக்க வேண்டியவை என்று நன்கு அறிந்திருப்பீர்கள். சூர்யாவையோ அல்லது விக்ரமயோ குறைத்து பேசுவது என் நோக்கமல்ல...அஜித் என்ற நடிகர் நீங்கள் சொன்ன போட்டியில் எப்போதும் இருப்பார் என்பதே என் கருத்து.

//அதேபோல் ஓப்பினிங்கை பொறுத்தவரை அஜித் மற்ற மூவரைவிட முன்னணியில் உள்ளார் இவரை செல்லமாக 'கிங் ஒப் ஓப்பினிங்' , 'கில்லி ஒப் தமிழ் சினிமா' என்றும் அழைப்பதுண்டு,//
நன்றி. இதை 'நியூட்ரல்'-ஆன நீங்கள் சொல்லும்போது கேட்பதற்க்கு மனமகிழ்ச்சி. ரசிகர்கள் ஆகிய நாங்கள் சொன்னால், எங்களை பைத்தியக்காரர்கள் என்பார்கள்.

மீண்டும் சொல்கிறேன். நல்ல ஆய்வு. வாழ்த்துகள்.
- நா.யோகா

எப்பூடி ... said...

Yoganathan.N ...

//இதை என்னால் ஏற்க முடியவில்லை. அஜித் 'கிங் ஒப் ஓப்பினிங்'என்று சொன்னீர்களே... அப்புறம் எப்படி விஜய்தான் மாஸ் அந்தஸ்த்தில் முதலிடம் வகிப்பார்??? மாஸ் எவ்வளவுக்கு பெரிதாக இருக்கிறதோ, அது 'ஓப்பினிங்கை' பிரதிபலிக்கும், அல்லவா... அஜித் ரசிகன் என்பதால் அவர் தான் மாஸ் அந்தஸ்த்தில் முன்னனியில் இருக்கிறார் என்றும் சொல்ல மாட்டேன்... எனக்கு தெரிந்தவரை, நான் அறிந்தவரை அஜித், விஜய் இருவருமே மாஸ் அந்தஸ்த்தில் சம நிலைதான்.//

ஓப்பினிங்கை பொறுத்து மாஸ்அந்தஸ்து இல்லை, அப்படி என்றால் பருத்திவீரனுக்கு கிடைத்த ஓப்பினிங் கார்த்தியின் மாஸா? ஓப்பினிங் எதிர்பார்ப்பிலும் தங்கியுள்ளது.விஜயை விட அஜித்திற்கு இளைஞர்கள் கூட்டம் அதிகம் என்பது அஜித்துக்கு விஜயைவிட அதிகஒப்பினிங் வரக்காரணம்.

நான் அஜித்துக்கு எதிரானவனில்லை ,மற்றும் அஜித் பக்கா கமர்சியல்ப்படம் நடிப்பது குறைவு என்பதாலேயே விஜய் மாஸ்அந்தஸ்தில் முன்னணியில் இருக்கிறார் என்பது எனது தனிப்பட்டகருத்து.

---------------------------------
//வரலாறு, அமர்க்களம் இரண்டுமே கமர்சியல் படங்கள். அட்டகாசம் - இரணுங்கெட்டான் நிலை.
தீனா - மாஸ் தான். பில்லா எப்படி கமர்சியலில் சேர்ந்தது??? பில்லா 'அவுட் & அவுட்' மாஸ் படம்.//

அஜித் மாஸ்அந்தஸ்துள்ள ஹீரோதான் அதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் அஜித் அண்மைக்காலங்களில் அப்படியான பாடங்களில் நடிக்கவில்லை என்பதே உண்மை. நீங்கள் சொல்வதுசரி பில்லா மாஸ் படம்தான் ஆனால் அதையும் தாண்டி அது ஒரு ஸ்ரைலிஷான படமாகவே பார்க்கப்பட்டது.

-----------------------------------

//வேறு யாரும் போட்டிக்கு இல்லை'- எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்??? ஒரு சாதாரன, 'அந்த காலக்கட்டத்தில் தமிழில் இன்னுமொரு' நடிகராக இருந்த அஜித், 'கெட்டப்' எல்லாம் இல்லாமல், 'வாலி' எனும் படத்தைக் கொடுத்தார். இன்றய தேதியில் கூட அந்த 'ரோல்'-ஐ சூர்யாவால் செய்ய முடியாது என்று எவரிடமும் சவால் விடுவேன்... வரலாறு, கிரீடம் (இந்தெர்மிஸ்ஸன் & க்லைமக்ஸ்) காட்சிகள் எல்லாம் சூர்யாவால் செய்ய முடியும் என எனக்கு தோனவில்லை.
விக்ரம், சூர்யா இருவரையும் தூக்கி விட்ட படங்கள் அனைத்துமே முதலில் அஜித் நடிக்க வேண்டியவை என்று நன்கு அறிந்திருப்பீர்கள். சூர்யாவையோ அல்லது விக்ரமயோ குறைத்து பேசுவது என் நோக்கமல்ல...அஜித் என்ற நடிகர் நீங்கள் சொன்ன போட்டியில் எப்போதும் இருப்பார் என்பதே என் கருத்து.//

நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.

-------------------------------
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி, மீண்டும் வருக.

haran said...

பில்லா 7 week collection 4.20 crore (source - behindwoods) படம் ஹிட்
ஆதவன் 7 week collection 4.72 crore (source- behindwoods) படம் தோல்வி
பிரபு ஸ்டைல் - என்ன கொடும சரவணன்
aadhavan movie flop only in stomach burning peoples blogsspot
* - Aadhvan Collected 1.2m dollars in two weeks in malaysian box office also ranged 1st in second week collection this is also record for tamil films. only ATM is ranged 1st in only 1st week collection
** - தலைவர் நடிச்சு அனைத்து சாதனைகளையும் உடைத்த சிவாஜி படம் கூட இந்த சாதனைய மலேசியாவில் (total collection 2.6 m dollars) நிகழ்த்தவில்லை
*** - UK இல அயன் படம் வசூல் செய்ததவிட இரண்டு மடங்கு வசூல் செய்துள்ளது

**** - நான் தலைவரோட மிகத்தீவிர ரசிகன் தயவு செய்து மற்ற நடிகர்களை பற்றி தவறாக எழுதாதீங்க இது எல்லாத்தையும் நல்லதாகவே சொல்லும் (மொக்க படத்த கூட ) செய்யும் தலைவரே ஏற்றுக்கொள்ளமாட்டார்

எப்பூடி ... said...

haran

பில்லா 7 week collection 4.20 crore (source -// behindwoods) படம் ஹிட்
ஆதவன் 7 week collection 4.72 crore (source- behindwoods) படம் தோல்வி
பிரபு ஸ்டைல் - என்ன கொடும சரவணன்//

கந்த சாமி 6 வார வசூல் 5 .42 கோடி என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி என்றால் அது வெற்றிப்படமா? நீங்க காமடி கீமடி பண்ணலையே?

//தலைவர் நடிச்சு அனைத்து சாதனைகளையும் உடைத்த சிவாஜி படம் கூட இந்த சாதனைய மலேசியாவில் (total collection 2.6 m dollars) நிகழ்த்தவில்லை
*** - UK இல அயன் படம் வசூல் செய்ததவிட இரண்டு மடங்கு வசூல் செய்துள்ளது //

லண்டனில் சிவாஜி தசாவதாரத்துக்கு அடுத்த பெரிய தொகை வசூலை எடுத்த படம் குசேலன், அப்படி என்றால் அது வெற்றிப்படமா?


//நான் தலைவரோட மிகத்தீவிர ரசிகன்//
wel come

// தயவு செய்து மற்ற நடிகர்களை பற்றி தவறாக எழுதாதீங்க இது எல்லாத்தையும் நல்லதாகவே சொல்லும் (மொக்க படத்த கூட ) செய்யும் தலைவரே ஏற்றுக்கொள்ளமாட்டார்//

தலைவரைப்போல நாங்கள் பொறுமை சாலிகள் இல்லையப்பா?

இருந்தாலும் பரவாயில்லை உங்கள் கருத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறேன்.

thanks

haran said...

//கந்த சாமி 6 வார வசூல் 5 .42 கோடி என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி என்றால் அது வெற்றிப்படமா? நீங்க காமடி கீமடி பண்ணலையே? //
கந்தசாமி பட்ஜெட் என்ன ஆதவன் பட்ஜெட் என்ன எண்டு தயவு செய்து சொல்லவும்

லண்டனில் சிவாஜி தசாவதாரத்துக்கு அடுத்த பெரிய தொகை வசூலை எடுத்த படம் குசேலன், அப்படி என்றால் அது வெற்றிப்படமா?

2002 இல் வெளிவந்த படங்களில அதிக வசூல் செய்த படம் பாபா அப்ப ஜெமினி ரன் யூத் எல்லாம் தோல்வி படமா?
இப்பிடியும் எழுதலாம் தானே

தலைவருக்கு 100% தான் வெற்றி எண்டா
அஜித், விஜய் 40% தமே வெற்றி
விக்ரம், சூரியா 30% தமே வெற்றி தானே
இது என் கணிப்பு

haran said...

கந்த சாமி 6 வார வசூல் 5 .42 கோடி என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி என்றால் அது வெற்றிப்படமா? நீங்க காமடி கீமடி பண்ணலையே?

THIS IS ONE OF YOUR POST
வெற்றிக் கனி
கடைசியாக அனைத்து எதிரான விமர்சனங்களையும் தாண்டி கந்தசாமி வெற்றி அடைந்துள்ளது. சென்னையில் 4.5 கோடிக்கு விற்கப்பட்ட கந்தசாமி மூன்று வாரங்களில் 3.9 கோடிகளுக்கு வசூல் செய்துள்ளது வரும் வாரம் அளவில் போட்ட முதலை எடுக்கும் நிலையில் உள்ளது பின்னர் வரும் ஒவ்வொரு பைசாவும் லாபமே அந்த வகையில் சென்னையில் மட்டும் 1.3 கோடி - 1.5 கோடி வரை லாபம் கிடைக்கும் அப்படி என்றால் மொத்த தமிழ் நாட்டில் எவ்வளவு லாபம் வரும் என்று பார்க்கலாம் . வெளி நாடுகளில் குறிப்பாக இலங்கை இங்கிலாந்து நாடுகளில் இன்னமும் வசூல் வந்த வண்ணம் உள்ளது இருப்பினும் சில விஜய் அஜித் ஆதரவு இணையதளங்கள் படம் சராசரி என்று ஒப்புக்கு சப்பாணி வாசிக்கின்றன. இருப்பினும் உங்களுக்காக சென்னை பாக்ஸ் ஆபீஸ் இதோ.

http://sify.com/movies/tamil/fullstory.php?id=14909140

00000

இப்ப எங்கடா கொண்டுபோய் உங்க மூஞ்சிகளை வைக்கபோறிங்க.

எப்பூடி ... said...

haran

//கந்தசாமி பட்ஜெட் என்ன ஆதவன் பட்ஜெட் என்ன எண்டு தயவு செய்து சொல்லவும் //

சரியான கேள்வி , நீங்கள் சொல்வது போல் கந்தசாமியை விட ஆதவனின் தயாரிப்பு செலவு குறைவுதான். அதே போலத்தான் பில்லாவின் தயாரிப்பு செலவை விட ஆதவனின் தயாரிப்பு செலவு அதிகம்.

இப்போதெல்லாம் படத்தை வெளியிடுபவர்களே அடுத்தநாள் படத்தை வெற்றி என்று அறிவிக்கின்றனர், அதனால் ஒரு படம் உண்மையான வெற்றி என்றால் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொண்டாலே இனிவரும் காலங்களில் சாத்தியம்.

//2002 இல் வெளிவந்த படங்களில அதிக வசூல் செய்த படம் பாபா அப்ப ஜெமினி ரன் யூத் எல்லாம் தோல்வி படமா?//

நன்றி, அதையே தான் நானும் சொல்கிறான் வசூலின் தொகை அடிப்படையில் மட்டும் படங்களின் வெற்றி தோல்வியை கணக்கிட முடியாது.

அதெல்லாம் சரி அதென்ன வெற்றிப்படங்களின் வரிசையில் யூத் ? (யூத் தொல்விப்படமென்பதை விஜயே ஒப்புக்க்ண்டுள்ளார்.)

//தலைவருக்கு 100% தான் வெற்றி எண்டா
அஜித், விஜய் 40% தமே வெற்றி
விக்ரம், சூரியா 30% தமே வெற்றி தானே
இது என் கணிப்பு//

நீங்கள் சொல்வது சரி, ஆனால் பெரிய பட்ஜெட் படங்களில் விக்ரம் படங்கள் மிகுதி மூவரையும் விட அதிக வசூலை அள்ளியது வரலாறு.

எப்பூடி ... said...

haran

//THIS IS ONE OF YOUR POST//

அன்றைய தேதியில் நானும் sify யை உங்களை போல நம்பியவன்தான் , பின்னர் எனது நண்பன் முன்னைய sify யின் box office களை காட்டியபோதுதான் தெரிந்தது அவர்களின் வண்டவாளம், அதன் பின்னர் இதே பதிவில் கந்தசாமி வெற்றிப் படமில்லை என்று பின்னர் நான் எழுதியதை நீங்கள் பார்க்கலாம் , இதோ உங்களுக்காக இந்தப்பதிவின் மேலுள்ள பகுதி

' விக்ரம் கடைசி 41/2 வருடங்களில் நடித்த மூன்று படங்களில் கந்தசாமி தவிர ஏனைய இரண்டும் தோல்விப்படங்களே.(கந்தசாமி ஓரளவு நன்றாக ஓடியதாகிலும் வெற்றிப்படமல்ல ) '.

நீங்கள் காட்டிய பதிவு நான் எழுத ஆரம்பித்த தொடக்கத்தில் போட்ட பதிவு , உண்மையில் அதக்கு மறுப்பு பதிவு போட்டிருக்கவேண்டும், சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)