Thursday, October 22, 2009

அமைதியான நேரங்களில்

பரபரப்பாக இயங்கும் உலகில் அமைதியான நேரங்களில் சில நிகழ்வுகள் யதார்த்தமாக இடம்பெறும் போது அதனால் ஏற்ப்படும் சில உணர்வுகள் எங்களை அறியாமலே வருவதை தவிர்க்க முடியாது. உலகின் எந்த நாட்டில் எந்த பாதுகாப்பான இடத்தில் இருந்தாலும் அமைதியான நடு இரவில் நாய் குலைக்கும் போது மனதில் ஒரு கணமேனும் சிறு அச்சம் தோன்றி மறையும் , ஆமிக்காறன் ஞாபகம் வரும். அமைதியான நேரத்தில் வானில் ஒரு விமானத்தின் ஓசை எமக்கு உடன் ஞாபகப்படுத்துவது எதனை? அந்த பங்கர் நாட்களைத்தானே . எங்காவது ஒரு இடத்தில் கூட்டமாக நின்று முண்டியடிக்கும் மக்களை தூர நின்று பார்த்தால் பாணுக்கும், சங்கக்கடைகளிலும் நாம் பட்ட அவஸ்தைகள் தான் ஞாபகத்திற்கு வரும். எதாவது ஒரு பயணத்திற்கு தயாராகும் போது தனிமையில் உடுப்பு அடுக்கும் சந்தர்ப்பத்தில் அந்த இடம்பெயர்வுகள் ஞாபகம் வராமலா போகும்? அந்த வலிகள்தான் கண்முன்னே வராமலா போகும்? ஏதாவது ஒரு பொருள் விலை கூடிவிட்டால் வேறு இனத்தவருடனோ வேறு பிரதேசத்தவருடனோ பேசிக்கொண்டிருக்கும் போது "விலை ஏறும் ஏத்தத்தை பாருங்கள்" என்று அவர்கள் கூறும்போது நாம் அடிப்படை தேவைகளான தீப்பெட்டி 60 ரூபாக்கும் மண்ணெண்ணெய் 800 ரூபாக்கும் 17 ரூபா சவர்க்காரம் 180 ரூபாக்கும் வாங்கியதை நினைவு படுத்துவதில்லையா? பரபரப்பான இரவுகளில் மின்சார தடை ஏற்படும் நேரங்களில் பஞ்சு மண்ணெண்ணை விளக்குகளும் நிலா வானமும் கண் முன்னே வந்து போகும் நினைவுகள் வருவதில்லையா? இப்படி நம் வாழ்க்கையின் கடைசிவரை நம் கூடவே தொடரப்போகும் இந்த நினைவுகள் மனோதத்துவ ரீதியில் தாக்கமாயினும் அனுபவ ரீதியில் மனம் நான்கு விடயங்களை சொல்கிறது. எத்தனை துன்பங்கள் இருந்தாலும் அந்த வாழ்க்கையிலும் சுகமான அனுபவங்களும் இருக்கத்தான் செய்தன . எப்படி பட்ட சோதனைகளை தாண்டி வந்திருக்கிறோம் என்று எண்ணும் போது ஒரு தன்னம்பிக்கையும் இறுமாப்பும் ஏற்படுகிறது. ஆண்டவா மீண்டும் இடம்பெயர்வு வாழ்க்கையை மட்டும் தந்துவிடாதே என்று மனம் கடவுளை வேண்டுகிறது. எப்போது தான் எமக்கு சுதந்திரமான வாழ்வு கிடைக்கபோகிறது என்று மனம் பெருமூச்சு விட்டுகொள்கிறது . உங்களுக்கு .....(1981 முதல் 2007 வரையின் எந்த காலப்பகுதியிலாயினும் விபரம் தெரிந்த வயதில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு இவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஞாபகத்தில் வந்து போயிருக்கும் )

6 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...

its tru bro..........

ஞானப்பழம் said...

Its true naNbaa... As they say in english, "Whatever doesnt kill you, only makes you stronger"...
I just hope i could share your pains... (if there is any)

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//Its true naNbaa... As they say in english, "Whatever doesnt kill you, only makes you stronger"...
I just hope i could share your pains... (if there is any)//

thanks for your feel.....

ஞானப்பழம் said...

கிண்டலடிப்பது போல் தோணுதே!!!

அ.ஜீவதர்ஷன் said...

cshmech

//கிண்டலடிப்பது போல் தோணுதே!!!//

உங்களுக்கு எப்பவுமே சந்தேகம் தானா? no its true.

ஞானப்பழம் said...

ஹி ஹி.. சும்மா வாய புடுங்கிப் பாத்தேன்!!!

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)