Monday, October 19, 2009

ஆதவன்- சூரியாவுக்கும் ஏழரை ஆரம்பம்

ரவிக் குமார் தனது வழமையான குடும்பம் செண்டிமெண்ட் ஆக்ஷன் மசாலாவினை தடவி ஒரு கம்ப்ளீட் கமர்சியல் படத்தை கொடுக்க நினைத்துள்ளார்.ஆனால்? கூலிக்கு கொலை செய்யும் கூட்டத்தில் இருக்கும் சூர்யாவுக்கு , முன்னாள் நீதிபதி முரளியினை முடிக்கும் வேலை கொடுக்கபடுகிறது.அவரை தீர்த்து கட்ட அவருடைய பெரிய குடும்பத்தினுள் வடிவேலுவின் உதவியுடன் நுழையும் சூரியா அவரை கொன்றாரா என்று நீள்கிறது கதை. ரமேஷ் கண்ணாவின் கதை,அதற்கு கே எஸ் ஆர் திரைக் கதை,படத்திற்கு இரண்டுமே மிகப் பெரும் பலவீனம்.அடுத்த காட்சி என்ன என்பதை முன்னரே ஊகிக்கும் அளவு திரைக் கதை ,திரையை விட பெரிய லாஜிக் ஓட்டைகள். ஆதவனாக சூரியா,தன்னால் முடிந்த வரை படத்தை தூக்கி நிறுத்த தோள் கொடுத்துள்ளார்.உடலினை கட்டுமஸ்தாக வைத்திருக்கிறார் மனிதர்.சண்டை காட்சிகளில் கலங்கடிதுள்ளார்.ஆனால் வாரணம் ஆயிரம் பாதிப்பில் இருந்து மீளாதது தெரிகிறது.அந்த பத்து வயது தோற்றம் ரொம்ப ஓவர். நயன்தாரா,ஏன் இந்த கொலை வெறி என்பது போல உள்ளது இவரின் முகம்,பிரபுதேவா பிரச்சினைகளின் பிரதிபலிப்போ??.மற்ற படி வழமையான தமிழ் பட ஹீரோயின். வடிவேலு,இவர் தான் உண்மையில் படத்தையும்,பார்ப்பவர்களையும் காப்பற்றியுள்ளார்.இந்த வருடம் அழகர் மலைக்கு பின் வடிவேலு பார்முக்கு திரும்பியுள்ளார்,படம் முழுவதும் பட்டையை கிளப்பியுள்ளார்.ஆனால் சூரியா வடிவேலுவினை அதட்டுவதை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது,சொல்லப் போனால் வடிவேலு தான் முதல் ஹீரோ. ஏனைய ரவிக்குமார் படங்களை போல ஒரே ஸ்டார் பட்டாளங்கள். மறைந்த முரளி கம்பீரமான நீதிபதியாக கலக்கி இருந்தார்.சரோஜா தேவிக்கு பெரிதாக ஒன்றும் வேலை இல்லை.ஏதோ எம் ஜி ஆரின் காப்பி ரைட் இவரிடம் இருப்பது போல இஷ்டத்துக்கு எம் ஜி ஆர் பாடல்கள் படத்தில் வந்து செல்கிறது. ஷாயாஜி சிண்டே கோடிக்கணக்கில் டீல் இருக்கும் தலைவன். காமெடி பண்ணுகிறார்.ஆனந்த் பாபு அவரின் மகனாக வந்துள்ளார்.இன்னும் கொஞ்சம் கட்டம் கொடுத்திருக்கலாம் அவருக்கு.வில்லன் ராகுல் தேவ்.விஜய காந்த் பட வில்லன்களை கண் முன் நிறுத்துகிறார்.வேறு எவரும் மனதில் பதியும் படி இல்லை. ஒளிப்பதிவாளர் ஆர்.கணேஷ்,கண்களுக்கு உறுத்தாமல் காட்சிகளை படமாக்கி உள்ளார்.பனித் துளி பாடல் கண்களுக்கு குளிர்ச்சி.ஒரு வீட்டிற்கு உள்ளே முக்கால் வாசி படம் நகர்வதால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. சண்டை பயிற்சி கனல்,பல இடங்களில் அனல் பறக்கிறது. இசை ஹாரிஸ்,அசிலி பிசிலி,வாராயோ பாடல்கள் காதல் மெலோடிகள்.டமக்கு டம்மு அதிரடி.பாடல்கள் இன்னும் நன்றாக படமாக்க பட்டிருக்கலாம்.தொடர்ந்து மூன்றாவது சூர்யா ஹாரிஸ் கூட்டணி என்பதாலோ ஒரே அசைவுகள் சூரியாவிடம்.பின்னணி இசையில் வேட்டையாடு விளையாடு,பீமா,அயன் படங்கள் பார்ப்பது போன்ற உணர்வு.மாத்துங்க ஹாரிஸ். விக்ரமை பல வழிகளில் காப்பி அடிக்கும் சூரியா அந்நியனில் பிரகாஷ் ராஜ் விக்ரமுக்கு புகழாரம் கூறும் வசனங்களையும் வடிவேலு மூலம் தனக்கு கூறி ஆனந்த பட்டிருக்கிறார்.வடிவேலு சொல்வதால் அதை காமெடி என்று நாமும் எடுத்து கொள்வோம். சூரியா நீங்களுமா?, என்று பலரும் வியக்கும் படியாக உள்ளது அந்த கிளைமாக்ஸ் காட்சி,வடிவேலுவை ஓவர் டேக் பண்ணும் காமெடி அந்த கிளைமாக்ஸ் என்றால் அது மிகை இல்லை.மற்றும் தமிழ் படம் என்பதாலோ என்னவோ கொல்கத்தாவில் அனைவரும் தமிழ் பேசி கொள்கிறார்கள்,லாஜிக் மீறல்களை பட்டியல் படுத்த வேண்டுமாயின் அதற்கு தனியாக பத்து பதிவிட நேரிடும் என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். சூரியாவின் அடுத்த படமும் ஹரி என்பதால் சூரியாவும்,அஜித் விஜய் விக்ரமுடன் சேர்ந்து தனுஷ் ரவி போன்றோருக்கு வழி விடுவார் என்றே தோன்றுகிறது. இதனால் தான் என்னமோ இன்னும் ரஜினியும் கமலும் ஓய்வு எடுக்காமல் உள்ளனர். ஆதவன் உதய நிதிக்கு ஹட்ரிக் அளிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் ஒரு கலை படைப்பு.

7 வாசகர் எண்ணங்கள்:

ARV Loshan said...

நல்ல விமர்சனம்..

நம்முடன் பல கருத்துக்களில் உடன் பட்டுள்ளீர்கள்.

//மற்றும் தமிழ் படம் என்பதாலோ என்னவோ கொல்கத்தாவில் அனைவரும் தமிழ் பேசி கொள்கிறார்கள்//
:)

//விக்ரமை பல வழிகளில் காப்பி அடிக்கும் சூரியா அந்நியனில் பிரகாஷ் ராஜ் விக்ரமுக்கு புகழாரம் கூறும் வசனங்களையும் வடிவேலு மூலம் தனக்கு கூறி ஆனந்த பட்டிருக்கிறார்.வடிவேலு சொல்வதால் அதை காமெடி என்று நாமும் எடுத்து கொள்வோம்.//

hahaha

Anonymous said...

superbbbb

அ.ஜீவதர்ஷன் said...

லோஷன் அண்ணா,
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

/பின்னணி இசையில் வேட்டையாடு விளையாடு,பீமா,அயன் படங்கள் பார்ப்பது போன்ற உணர்வு.மாத்துங்க ஹாரிஸ். /

ஏதாவது நல்லா ஆல்பம் சீடி கொடுங்க மாத்துவாரு...

SShathiesh-சதீஷ். said...

நல்ல ஒரு விமர்சனம்.

thanu said...

ithai earlya patha 500 micha paduthi irupan

thanu said...

RAMESH KANNAVIN SAPAM THAN ATHAVAN THOLVI.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)