Friday, October 16, 2009

தீபாவளி அலசல்

அனைவருக்கும் எப்பூடியின் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் இந்த தீபாவளிக்கு மூன்று படங்கள் மாத்திரமே வெளியாக உள்ள நிலையில் கடந்த எட்டு வருடமாக தீபாவளிகளுக்கு வந்த படங்களையும் அவற்றின் வெற்றி தோல்விகளையும் அலசி பின்னர் இந்த வருட தீபாவளி படங்களை பற்றி பார்ப்போம், 2002 முதல் 2009 வரையான 8 வருட தீபாவளிகளுக்கு எந்த ஒரு ரஜினி,கமல் படங்களும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் ரமணா ,பகவதி ,வில்லன் ஆகியன முக்கியமானவை இவற்றில் ஆரம்பம் முதலே ரமணா ஆதிக்கம் செலுத்தியது,முருகதாஸின் துல்லியமான திரைக்கதை, சிறந்த வசனம் மற்றும் இளையராஜாவின் மிரட்டல் பின்னணி இசை என்பவற்றால் விஜயகாந்தின் திரைப் பயணத்தில் ஒரு பெரிய மைல் கல்லாக அமையும் அளவிற்கு பெரு வெற்றி கண்டது.அஜித்தின் வில்லன் இரண்டாவதாக வந்தாலும் அதுவும் பெரும் வரவேற்ப்பை பெற்றது, அது மட்டுமல்லாது அஜித்திற்கு நல்ல நடிகன் என்ற பெயரையும் வாங்கி கொடுத்தது. பகவதி வெங்கடேஸின் ஒரே பாணி திரைக்கதை மற்றும் அளவுக்கதிகமான செண்டிமெண்ட் என்பவற்றால் எதிர் பார்த்தது போல் சரியாக போகவில்லை. 2003 ஆம் ஆண்டின் போட்டியும் மும்முனைப் போட்டியாகவே இருந்தது. பிதாமகன் ஆஞ்சநேயா திருமலை ஆகியன வெளிவந்தன, இவற்றுள் பிதாமகன் ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரமின் அபார நடிப்பாற்றல், சூர்யாவின் அற்புதமான காமடி, இளையராஜாவின் மயிர் கூச்செறியும் பின்னணி இசை மற்றும் பாலாவின் கதையின் போக்கிலான திரைக்கதை என்பன படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாகின, இரண்டாம் இடத்தில் திருமலை இருந்தாலும் வசூலில் பிதாமகனுக்கு இணையாகவே இருந்தது,முதல் நான்கு வாரம் மந்த கதியில் போனபோதும் பின்னர் நல்ல வசூலை பெற்றது. அஜித்திற்கு இது போதாத காலம் படம் வெளியான முதல் வரமே அட்டர் பிளாப் ஆனது. 2004 ஆம் ஆண்டை பொறுத்தவரை அட்டகாசம் மட்டுமே பெரிய நடிகர் ஒருவரது படமாக வெளிவந்தது. அதனுடன் வெளிவந்த சிம்புவின் மன்மதன், தனுசின் ட்ரீம்ஸ் என்பன இரண்டாம் தர படங்களாகவே கருதப்பட்டது.எதிர் பார்த்தது போலவே அட்டகாசம் முதல் இரண்டு வாரங்கள் முன்னணியில் இருந்தது ஆனால் இளைஞர்களுக்கு பிடித்த விதத்திலான திரைக்கதை,யுவனின் பாடல்கள்,சிம்புவின் மானரிசம் என்பவற்றால் மூன்றாம் வாரம் முதல் அட்டகாசத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு மன்மதன் மிகப்பெரும் வசூலை குவிக்க தொடங்கியது, அட்டகாசம் சாதாரன வெற்றியையே பெறமுடிந்தது. (இரண்டு படங்களுமே தயாரிப்பளர்களுக்கு கையை கடித்த படங்கள் ) தனுசின் ட்ரீம்ஸ் வந்தது தெரியாமலே திரையை விட்டுச்சென்றது . 2005 ஆம் ஆண்டு சிவகாசி, மஜா ஆகிய இரண்டு படங்களுமே பெரிய படங்களாக வெளிவந்தன. இதில் சிவகாசி வெற்றிப்படமாக அமைந்தது, சிவகாசி மோசமான படமாக இருந்தும் விஜயின் டான்ஸ்,ஹீரோயிசம் என்பவற்றாலும் சண் தொலைக்காட்சியின் உதவியாலும் வெற்றி பெற்றது,மஜா முதல் வாரத்தில் பணத்தை வசூலித்தாலும் படத்தில் எந்த விதமான மசாலாவும் இல்லாததால் தொடர்ந்து ஓட முடியவில்லை . 2006 ஐ பொறுத்தவரை பல படங்கள் வெளியாகின.அஜித்தின் வரலாறு, விஜயகாந்தின் தருமபுரி, சிம்புவின் வல்லவன், ஜீவாவின் ஈ, ஆரியாவின் வட்டாரம் என்பன வெளியாகின. 2006 இல் நடந்ததை அஜித் மீண்டும் அனுமதிக்கவில்லை இம்முறை வல்லவனால் வரலாற்றை நெருங்கவே முடியவில்லை,அஜித்தின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் வரலாறு மிகப்பெரும் வெற்றி பெற்றது.சிம்புவின் வல்லவன் மண்ணை கவ்வியது, தருமபுரி அரசியல் வசனங்களுடன் வெளிவந்ததாலும் பேரரசுவின் குட்டு வெளிப்பட்டதாலும் படு தோல்வி அடைந்தது.வட்டாரம் சரனின் வித்தியாசமான் திரைக்கதையில் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்றாலும் சரியாக போகவில்லை. குறைந்த செலவில் ஜெகனாதனால் எடுக்கப்பட்ட விஞ்ஞான பூர்வமான் படமான ஈ போட்ட காசை விட அதிகமாகவே வசூலித்தது. 2007 ஆம் ஆண்டு விஜயின் அழகியதமிழ்மகன்,தனுசின் பொல்லாதவன்,சூர்யாவின் வேல் ஆகியன பெரிய படங்களாக வெளிவந்தன.இந்தப்படங்களில் பொல்லாதவன் யாரும் எதிர் பாராதவகையில் விஜயின் அழகியதமிழ்மகனை வீழ்த்தி வெற்றி பெற்றது.முழுக்க முழுக்க இளைஞர்களால்(வெற்றிமாறன்,ஞானவேல்,ஜீவி பிரகாஸ்)எடுக்கப்பட்ட இந்தப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்றதோடல்லாமல் ரென்ட் செட்டர் ஃபில்மாகவும் பேசப்பட்டது. வேல் ஹரியின் வழமையான பாணியிலான ஒரு மினிமம் கரன்டி திரைப்படமாக இருந்தாலும் குடும்ப ஜனங்களை தியெட்டருக்கு வரவழைத்தது , வசூலில் பொல்லாதவனுக்கு இணையான வசூலை பெற்று வெற்றி படமாக அமைந்தது .மிகுந்த எதிர்பார்ப்புடன் விஜய்,ரகுமான் கூட்டணியில் வெளிவந்த அழகியதமிழ்மகன் ஈ.எஸ்.பி பவர் என்னும் கான்செப்டை தவறான முறையில் அணுகியதாலும் விஜய் ரசிகர்களுக்கு வேண்டிய சண்டை காட்சிகள் ,பன்ச் டயலாக் என்பன இல்லாததாலும் தோல்வி அடையநேரிட்டது. 2008 ஆம் ஆண்டு அஜித்தின் ஏகன் மட்டுமே பெரிய படமாக வெளிவந்தது . கூடவே சேவல் வெளிவந்தது.எந்த ஆண்டும் இல்லாதவாறு இந்த ஆண்டு அனைத்துப்படங்களுமே தோல்வியடைந்தன.குறிப்பாக ஏகனைப்பொறுத்தவரை அஜித் தன்னையே கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு பிடிக்காததாலும் மிகமோசமான இயக்கத்தாலும் (ரீமேக் தவறு) ரசிகர்களின் வரவேற்பை பெற முடியாமல்போனது. சேவல் இம்முறை ஹரியின் மினிமம் கரன்டி பெயரைக்கூட காப்பாற்றவில்லை. 2009 இந்த ஆண்டு ஜெகன்மோகினி , பேராண்மை , ஆதவன் ஆகிய மூன்று படங்கள் வெளியகினாலும் ஆதவன் மட்டுமே பெரிய படம், பேராண்மை மட்டுமே ஆதவனுக்கு சவாலானதாக இருக்க கூடிய சாத்தியத்தை கொண்டுள்ளதாயினும் அதுமிகக்குறைவே ,நயன்தாரா,ரவிக்குமார்,ஹரிஸ்ஜெயராஜ் என பலமான கூடணியை ஜெகநாதன்,ரவி,வித்தியாசாகர் என்ற பலம் குறைந்த கூட்டணி வெல்வது சாத்திய குறைவே ஓவரு விதையிலும் ஒரு விருட்சம் உள்ளது, ஆகையால் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம் ஆதவன் பலம் ->சூர்யா,ரவிக்குமார்,ஒரே பெரிய படம்,பப்ளிசிற்ரி ஆதவன் பலவீனம்->நயன்தாரா, அதிகமான எதிர்பார்ப்பு,20 விளையாட்டு கெட்டப் பேராண்மை பலம்->ரவி,ஜெகநாதன்,எதிர்பார்ப்பு இல்லாமை பேராண்மை பலவீனம் ->பப்ளிசிற்ரி இல்லாமை

1 வாசகர் எண்ணங்கள்:

Navtux said...

i think this kollywood database is collecting to make warehouse ....you go ahead

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)