Monday, October 12, 2009

இரட்டை தீபாவளி

வேட்டைக்காரன் தீபாவளிக்கு வராததால் தமிழ் நாட்டில் பல வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன இதனால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாதுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரத்தான வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வுகள் இதோ அதிகாலை ஒன்பது மணிக்கு கல்லூரி மாணவ மாணவியர் ஜெயா டிவி காம்பியருடன் சேர்ந்து விஜயுடன் அடிக்கும் ரகளை. எப்படி உங்களால் இன்னமும் யூத்தாக இருக்க முடிகிறது என்று கேட்கும் மாணவிக்கு விஜய் தரும் அசட்டு சிரிப்புடன் கூடிய பதிலை எப்படி பார்க்காமல் இருப்பது ? பத்து மணிக்கு கலைஞர் தொலைக்கட்சியில் தேவதர்ஷினியுடன் ஒரு நேர்காணல், அதில் நம்ம உதயநிதி தயாரிப்பில் நீங்க நடிச்ச குருவியோட மாபெரும் வெற்றி பற்றி ஒருவர்த்தை என்ற கேள்விக்கு மானங்கெட்டதனமா எல்லாமே டீம் வேர்க் என்று கூறும் காட்சி வீணாப்போச்சு. மாலை நான்கு மணிக்கு விஜய் டிவியில் டீடீ உடன் சேர்த்து விஜய் வளிக்கும் அசடும் அதில் இன்றைய இந்தியாவின் நம்பர்வண் நடிகர் நீங்களாக இருப்பதைப்பற்றி என்ற கேள்விக்கு கொஞ்ச்சம் கூட வெட்கபடாமல் எல்லாம் அப்பாவால்தான் என எச்சிலை விழுங்கியபடி விஜய் சொல்லும் பதிலும் மிஸ்ஸிங். சன் டிவியில் ஆனந்தகண்ணன் முன்னிலையில் கனிஸ்காவுடன் அடிக்கும் லூட்டி இல்லாமல் போனது முன்னர் நயன்தாரா, திரிஷாவுடன் நடந்த விஜயின் நேர்காணல்களை விட அபத்தமாகவும் ஆபாசமானதாகவும் இருக்கும் என நம்பிய ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது படம் ரிலீசான அடுத்தநாளே தியேட்டர் தியேட்டராக சென்று படத்தை மாபெரும் வெற்றியாக்கிய ராசிகளுக்கு நன்றி என விஜய் கூறும் பச்சை பொய்கள் மிஸ்ஸிங் மற்றும் பசுதானம், இரத்ததானம், ஓட்டோ அன்பளிப்பு என அனைத்து சுய பொது நலன்களும் இரத்து அடுத்த வார குங்குமத்திற்கு விஜய் தரும் நேர்காணல், அதிலே அவர் கூறும் அனைத்து படங்களின் வசூலையும் வேட்டைக்காரன் உடைத்துவிட்டது என்று அடிக்கும் காமடி முதல் இந்தியாவின் அடுத்த பிரதமர் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தல்களில் தனது கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது பற்றியும், பத்திரிக்கைகளும் இணையதளமும் வேண்டுமென்றே எனது படத்தைப்பற்றி தப்பு தப்பாக விமர்சனம் பண்ணுகிறார்கள் என்ற கோபத்தயும் வெளிக்காட்டியிருக்கும் அந்த சிறப்புப்பதிவை பார்க்கமுடியாதே. இப்படியாக பல இழப்புக்களை இந்தியாவும் தமிழகமும் சந்தித்தாலும் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு கொடிய நரகாசூரனிடம் இருந்து தப்பித்ததால் இரட்டை தீபாவளி கொண்டாடுகிறார்களாம்.

5 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...

superrr..... ahhh.. எப்படித்தான் ஜோசிகிரங்களோ தெரியல!!!

Vaanathin Keezhe... said...

ஹாஹாஹா... நல்ல கற்பனை...

-வினோ

அ.ஜீவதர்ஷன் said...

thanks vino

தேவன் மாயம் said...

உங்கள் வலையைப் பின் தொடரும் முதல் நபர் நான்!!!!

ஞானப்பழம் said...

haha... great man!!! Thanx for understanding our plight...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)