Friday, October 2, 2009

இம்முறையாவது கிட்டுமா

எந்த விளையாட்டாக இருந்தாலும் இங்கிலாந்து ஊடகங்களும் சரி வர்னணையாளர்களும் சரி தங்கட டீமயோ அல்லது வீரர்களையோ பெரிய லெவலிலேயே கதைப்பாங்க. மத்தவங்க ஏதூ கொசுறு மாதிரியே பீல் பண்ணுவாங்க.ஆனா அவங்க பசங்க எந்தத் கேமிலையும் இதுவரை சாதிச்சதா தெரியல. கிரிக்கெட்டை எடுத்து கொண்டால் சர்வதேச கிரிக்கெட் சபை நடத்தும் எந்த ஒரு தொடரையும் இன்கிலாந்து கைப்பற்றவில்லை , வேர்ல்ட் கப், டுவன்டி டுவன்டி , சாம்பியன் கிண்ணம் என எந்த ஒரு பட்டத்தையும் வென்றதில்லை. சொந்த நாட்டில் வைத்து போராடி ஆசெஸ் வெல்வது தான் அவர்களது அதிகபட்ஷ சாதனை. இந்த லட்சணத்தில கிரிக்கெட்டை கண்டுபிடிச்சதா பெருமை வேற. கிரிக்கெட் தான் இப்படி என்றால் புட்பால் சொல்லவே வேண்டம் ஒரு வேர்ல்ட் கப்பும் அடிக்கேல்லை என்று சொல்வதை விட கேவலம் ஒரு ஜூரோ கப் கூட அடிக்கேல்ல. ஏன் ரன்னர்சப்பாக் கூட வந்ததில்லை. கடைசி ஜூரோ கப் குவாலிபை கூட ஆகலை, கேட்டா புட்பால் தேசிய விளையாட்டம். டென்னிஸ் என்று பார்த்தல் மேன்ஸ் (mens) டெனிசில அதுவும் ஒன்னே ஒன்னு. அண்டி முரே எண்டு ஒரு ஸ்காட்லாந்து பையன், கடவுளே.... முரேக்கு குடுக்கிற பில்டப் என்றால் தாங்கல. ஒரு கிராண்ட்சிலாம் அடிக்கல, இயர் எண்டு சாம்பியன்ஷிப் அடிக்கல, 1000 மாஸ்டர் சீரிசில கொஞ்சம் அடிச்சதால ரங்கிங்கில 2ம் இடம் வந்திச்சு, அது கூட ஒரு மாசம் நிலைக்கல நடால் வைச்சான் ஆப்பு. கடந்த எழுபந்தைந்து வருடங்களா எந்த ஒரு கிராண்ட்சிலாம் போட்டிகளிலும் வெல்லாதது எல்லோருக்கும் தெரிந்ததே. ரக்பியில் மட்டும் 2000 ஆம் அண்டு சாம்பியன் 2008 ஆம் அண்டு ரன்னர்சப் ஆகியது சிறப்பானதாக இருந்தாலும் தென் ஆபிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகள் இங்கிலாந்தை விட சிறப்பான நிலையில் உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது ஒரே தனிமனித ஆறுதல் லுவிஸ் ஹமில்டல். போர்முலா வண்ணில 2008 ஆம் அண்டு ஹமில்டன் வென்ற பட்டம் ஒன்று மட்டும் தான் ஒரே ஆறுதல். அது கூட கடைசி ரேசில கடைசி நிமிடம் டிமோ க்ளொக் தன்ர காரை ஸ்டாப் பண்ணி ஒரு பொயின்சால கமில்டன வெல்லவச்சது எல்லோருக்கும் வெளிச்சம். ஜென்டில்மன் என்று காலரை தூக்கும் இங்கிலாந்து ஊடகங்கள் அபப என்ன செஞ்சுது. கமில்டன் ஒட்ர காரோட என்கின் மெர்சிடிஸ்பென்ஸ் ஜெர்மனி தயாரிப்பு என்பதும் முக்கியமான ஒன்று. மோடோ ஜீபி, கொல்ப், தடகளம், ஸ்நூக்கர், கொக்கி, என எதிலும் இங்கிலாந்து பெரிதாக சாதித்தது இல்லை.தற்போது இருக்கும் நிலையில் சாதிக்க போவதுமில்லை.இந்த சாம்பியன் கிண்ணத்தையாவது வெல்கிறார்களா என்று பார்ப்போம். வெல்லாவிட்டாலும் இங்கிலாந்து மீடியாக்களும் வர்ணனையலைகளும் சளைக்கப்போவதில்லை. அடுத்த போட்டித்தொடரில் இங்கிலாந்து புகழ் பாட தயாராகிக்கொண்டிருப்பார்கள். அவர்கர்கள் தான் மானங்கெட்ட ஈத் தலையாச்சே... அடடடா மறந்திட்டமே பொட்டச்சிங்கள வைத்து ஒரு கிரிக்கெட் வேர்ல்ட் கப் வென்றதை. கலக்குங்கடி சொரி கலக்குங்கடா ....

0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)