Wednesday, September 16, 2009

கோம்பாக் கப் ரவுண்ட் அப்

முரளிக்கேவா ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு மனுசன கடிச்ச கதையா, சனத்தை ட்ரொப் பண்ணி வாஸை ட்ரொப் பண்ணி,இப்ப முரளியுமா? என்ன கொடுமை சார் இது.சங்ககார கப்டன் ஆனவுடன் எடுத்த சில அதிரடி முடிவுகள் சில நேரங்களில் கை கொடுத்தாலும் பல சமயங்களில் காலை வாரி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.டுவென்டி டுவென்டி இறுதி போட்டியில் குலசெகரவுக்கு பதிலாக உடானவை அணியில் சேர்த்ததோடு,முக்கியமான தருணத்தில் அபிரிடிக்கு பந்து வீச அழைத்ததிலிருந்து காம்பாக் இறுதிபோட்டியில் முரளிக்கு ஓய்வு(!?) வழங்கியது வரை. முரளி டிராப் பண்ணப் பட்டு மென்டிஸ் அணியில் சேர்க்க பட்டதன் விளைவு நமக்கு அனைவருக்கும் தெரிந்ததே.ஆசிய கோப்பையில் மென்டிசின் பந்து வீச்சு அருமை என்பது மறுப்பதட்கில்லை.ஆனால் இலங்கையில் இவ் வருட ஆரம்பத்தில் நடந்த போட்டிகளிலேயே இந்தியா மென்டிசினை காட்டு காட்டுன்னு காட்டினதை மறக்கவா முடியும் .பிரேமதாச மைதானத்தில் இரவு வேளையில் 230 துரத்தி வெல்வதே பெரும்பாடு.இதில் எங்கே 320 துரத்துவது, ஏதோ இந்திய வீரர்களின் தரமான ?!! களதடுப்பின் உதவியுடன் இந்த ஓட்டங்களை ஏனும் பெற முடிந்தது. இப்போ அது இல்லை மாட்டரு,முரளிய டிராப் பண்ணி எடுக்க இந்த உலகத்திலேயே போலேர்ஸ் இல்லாதப்போ,என்ன சார் இது.இந்த ரணகளத்திலும் இலங்கையின் பிரசார பீரங்கி டோனி கிரீக் சொன்னார்,முரளிக்கு ரெஸ்ட்ஆமாமாமாம் சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கு.ஏங்க பைநலில கூடவா ரெஸ்ட்.இனி மேல் முரளியாக ஓய்வு எடுத்தாலே அன்றி முரளிக்கு ஓய்வு வழங்க மாட்டார்கள் என்று நம்புவோம். கப்டன் ஹோட் நம்ம சங்காவுக்கு பாட்டிங்ல இருக்கும் பொறுமையும் நிதானமும் கேப்டன் ஷிப்பில இல்லாம போச்சு?டக்கு டக்குன்னு டென்ஷன் ஆகுரிங்க, அம்பியர் கூட கோவிச்சுகிறீங்க,நம்ம தர்மசேனா எப்படி நமக்கு அவுட் கொடுக்கலாம்,நம்ம டீமுக்கு எதிரா வைட் காட்டலாம் என்பது போல இருக்கு உங்க ரியாக்ஷன்.முட்டிக்கு கீழ வந்த பந்துக்கு நோபால் கேக்கிறீங்க,5 ஓவரா விக்கட் வரல என்றால் , ரெண்டு ஓவர் அடி விழுந்தா யாராவது வைட் போட்டா முகம் கடுப்பாகுது. நீங்க சரியான முடிவு எடுத்தாலும் சந்தர்ப்பம் வரும் வரை வெயிட் பண்ணனும்,அந்த பொறுமையும் நிதானமும் காப்டனுக்கு ரொம்ப அவசியம்.முடிந்தால் இதை ட்ரை பண்ணுங்க,இல்ல அர்ஜுன,மகேல போன்றோரிடம் கேட்டு தெரிஞ்சுகோங்க . மசாலா இல்லா மகேல மகேல நல்ல பாட்ஸ்மானுன்னு ஒத்துகிறோம்.ஆனால் நீங்க ஒன் டே மட்ச்ல பாட் பண்ணும் முறை தான் மோசமா இருக்கு. செல்பிஷ் பிளேயர் இல்லைன்னு நீங்க காட்டுறதுக்கு பண்ற அலப்பறை இருக்கே,நாலு பந்து சிங்கிள் எடுகலைனா பிக் ஷாடுன்னு கிளம்புறீங்க. டெஸ்ட் போட்டிகளில் உங்கள் பாட்டிங்கில் இருக்கும் நிதானம் ஒன் டே பாடிங்க்கில் மிஸ்ஸிங்.நீங்க உங்க ஸ்கோர அடிங்க,டீம் தானாக வெல்லும்,உலக கிண்ண அரை இறுதி போன்ற இன்னிங்க்ஸ் தான் உங்களிடம் இருந்து அணிக்கு தேவை.கடைசி ஒரு வருடத்திற்கு மேலாக நீங்கள் ஒன் டெய்ல அடிச்சிருகிறது ஒரு சதமும் மூன்று அரை சத்தங்களும் தான்.இப்படியே போனால் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக வேண்டியது தான். சங்கிலி மன்னர்கள் அண்மை காலமாக செட்டி தெருவை குத்தகைக்கு எடுத்து போல ஆகி விட்டது இலங்கை அணியின் டிரெஸ்ஸிங் ரூம்.சனத் ,தில்ஷன்,மாலிங்க, கண்டம்பி என அனைவரும் ஒரு நடமாடும் நகை கடை ஷோ ரூம் போல தான் வலம் வருகின்றனர் .சனத்தும்,தில்ஷானும் பாட்டிங் பண்ண வரும் போது சங்கிலிகள் வெளியே தொங்காமல் இருக்க பிளாஸ்டார் ஒட்டி கொண்டு வருவதெல்லாம் ரொம்பவே ஓவர். இள ரத்தங்கள் மகேல சங்காவிடமே இருந்த அணியின் மிடில் ஓடருக்கு கண்டா,கப்பு போன்றோரின் வருகை நம்பிக்கை அளிப்பதாக இருந்தது அணியின் எதிர் காலத்திற்கு நன்றாக இருக்கும்.தரங்கவுக்கும் கணிசமான வாய்ப்புகள் வழங்க பட்டால் சிறந்த எதிர் காலத்துக்கான அத்திவாரம் நன்றாக அமையும் என்பதை மறுக்க முடியாது.இள ரத்தங்களுடன் அனுபவமும் ஒருங்கே அமைந்தால் சாம்பியன் கிண்ணம் இலங்கைக்கு கை கூடும் வாய்ப்பு உண்டு. பாப்போம் என்ன நடக்கும் என்று !!! குறிப்பு இந்த பதிவினை இட நான்கு நாட்கள் முயற்சி செய்தாலும்,வேலைப் பளு காரணமாக முடியவில்லை.சாம்பியன்ஸ் கிண்ணம் தொடங்க இரு நாட்கள் இருப்பதால் சரியான நேரத்தில் இப்பதிவு வருவதாக உணர்கிறேன்.

2 வாசகர் எண்ணங்கள்:

அமரேஷ் said...

சங்கா அண்ணன் கப்டின்ஷிப்ப விட்டுட்டு பற்றிங்க கவனிச்சா போதும்...ஒருநாள் போட்டிகள் எதிலயும் தலைவரானதுக்கு அப்புறம் சங்கா சோபிக்கேல்லை...ஒரேஒரு 50 மட்டும் தான் போட்டிருக்கார்....மஹரூப் எண்டொரு சகலதுறை வீரர் இலங்கையில வாழிறாரில்லோ...அவனை ஏன் கலைச்சிட்டீங்ள்....தம்மிக பிரசாத் எண்டவனுக்கு தேவைக்கு அதுகமா வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது....டில்ஹார பெர்ணாந்தோவையும் அட்ரஸ் இல்லாம செய்திட்டீங்க...சங்கா கப்டினா வந்து கன பேரை ரீமை விட்டு கலைச்சிட்டார்...ஆனா இன்னும் ரீம் உருப்பட்டதா இல்லை....முஸுலிம் எண்டதால தான் மஹரூப் மற்றும் முபாரக் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டிருக்கினம் எண்டும் ஒரு கதை உலாவுது பாருங்கோ

அ.ஜீவதர்ஷன் said...

2007 உலக கிண்ணத்தின் பின்னர் இலங்கை அணி ஒன் டே போட்டிகளில் சோபிக்கவில்லை என்பதே உண்மை.we need some big hitters.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)