Tuesday, September 1, 2009

கந்தசாமி கந்தல் சாமியா கலக்கல் சாமியா

கந்தசாமி படத்தை ஒரு சிறந்த படம் என வாதாட இல்லை இந்த பதிவு .ஆனால் கந்தசாமி மகா மட்டமான படம் என விமர்சிப்போருக்கு எதிரான பதிவே இது.அந்நியனுக்கு முன் விக்ரமுக்கும் அந்நியனின் பின் விக்ரமுக்கும் நிறைய மாற்றம்.தூள் சாமி பிதாமகன் என விக்ரம் உச்சங்களை தொட்ட வேளை அஜித் விஜய் ஆகியோர் வெற்றிகளுக்காக ஏங்கிய காலம்.அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று இருந்த நேரம்.ஆனால் அந்நியனுக்கு பின் நான்கு வருடங்களில் மூன்று படங்கள்.அதில் இரண்டு படம் காலை வாரி விடவே கந்தசாமி காப்பாற்றுவார் என நம்பிய விக்ரமுக்கு கந்தசாமி கந்தல் சாமியா இல்லை கலக்கல் சாமியா . இன்று படம் ரிலீஸ் ஆகி பிளஸ் மைனஸ் விமர்சனங்கள் வந்தாலும் கந்தசாமி வசூலில் ரஜினி படங்களுக்கு அடுத்த படியான வசூலினை அள்ளி இருக்கிறது.ஆனால் இன்றும் அஜித், விஜய் வெற்றி படங்களுக்காக போராடி கொண்டிருக்கும் போது சில ப்ளக்குகள் கந்தசாமியினை தாறு மாறாக விமர்சனம் செய்கின்றன.இது அஜித் விஜய் ரசிகர்களின் தளங்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி .எங்கே மீண்டும் விக்ரம் இவர்களை ஓவர் டேக் செய்து விடுவரோ என்ற அச்சம்.ஆனால் கந்தசாமி அண்மைக்கால அஜித் விஜய் படங்களை விட எவளவோ மேல் . சிவாஜி ஜென்டில்மென் அந்நியன் படங்களின் தழுவல் இருப்பதாய் சொல்வதை மறுபதற்கில்லை.ஆனால் இந்த மூன்று படங்களுமே , ஏன் சங்கரின் அனைத்து படங்களுக்கும் கதை ஒன்று தானே.ஆனால் அதை படமாக்கிய விதம் விக்ரமின் மேனரிசம் என்பவற்றின் மூலம் சுசி வித்தியாசத்தை காட்டவில்லையா? ரசிக்கும்படிதான் எதுவுமே இல்லியா? படத்தின் நீளம் குறைக்கப்பட்ட பின் கந்தசாமி ஒரு முழு கமர்சியல் படம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

5 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...

kandasamy will win

mahela

Anonymous said...

kandasamy ULTIMATE MASALA no doubt !!!!!

"ராஜா" said...

விக்கிரம வச்சி நீங்க காமெடி கீமெடி பண்ணலையே?

Unknown said...

it proved ur a a big vikram fan.. Kandhasamy is a sex film acted by shreya and Mumaith khan,..

அ.ஜீவதர்ஷன் said...

funny


//it proved ur a a big vikram fan.. Kandhasamy is a sex film acted by shreya and Mumaith khan,.. //

கந்தசாமி ஒரு கமர்ஷியல் படம்.அதில் மசாலா தூவல்கள் இருப்பது சகஜமப்பா.அப்படிப் பார்த்தால் சென்சார் ஏ சான்றிதழ் வழங்கி இருக்கும்.அது சரி விஜய்,அஜித்,சூர்யா பாடங்களில் ஆபாசம் இருப்பதில்லையோ? விக்ரம் ரசிகனாக இருப்பதில் அப்படி ஒன்றும் தப்பிலையே.யானை குழியில் விழுந்தால் எறும்பும் எட்டி பார்க்குமாம், எல்லாம் நேரம்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)